TNPSC Daily Current Affairs in Tamil 12 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 12-06-2018

இந்திய விஞ்ஞானிகள் முதன் முறையாக கண்டுபிடித்த கோள்:

 • குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வைகதை (Ahmedabad’s Physical Research Laboratory)சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த முதல் வின்கோள் இதுவாகும்
 • “சூப்பர் – நெப்டுன்” (EPIC 211945201b (or K2-236b)) (‘super-Neptune’ is about 27 times the mass of Earth and six times its radius) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள், 6௦௦ ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியை விட 6 மடங்கு அகலமாகவும், 27 மடங்கு நிறை கொண்டதாகவும் உள்ளது.

முகத்தை அடையாளம் கண்டு தானியங்கி முறையில் ஒப்புதல் அளிக்கும், இந்தியாவின் முதல் விமான நிலையம்:

 • இந்தியாவிலேயே முதன் முறையாக உத்திரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்த்ரி விமான நிலையத்தில், முகத்தை கண்டு உள்நுழைதல், பாதுகாப்பு மற்றும் தங்குதல் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும் தானியங்கி முறை கொண்டுவரப்பட்டுள்ளது (India’s first airport to have an automated smart facial recognition system at its entry, security and boarding points)
 • இதன் மூலம், நேரத்தை குறைப்பதுடன், அனைவரின் முகமும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்படும்

சர்வதேச கிரிக்கெட்டில் மிக விரைவாக 1௦௦௦௦ ரன்கள் மற்றும் 5௦௦ விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்:

 • சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக விரைவாக 1௦௦௦௦ ரன்களையும், 5௦௦ விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரர் (quickest to reach 10,000 runs and pick 500 wickets in international cricket) என்ற சிறப்பை, வங்கதேச அணியின் தலைவர் ஷாகிப் அல் ஆசன் பெற்றுள்ளார்
 • இவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தந்து 5௦௦-வது விக்கெட்டை வீழ்த்தினார். இது வரை சர்வதேச அளவில் 1௦௦௦௦ ரன் மற்றும் 5௦௦ விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள், தென் ஆப்ரிக்காவின் காலிஸ் மற்றும் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி ஆவர்
 • மேலும் 5௦௦ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் இவராவார்

விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் 33% அரசுக்கு செலுத்த ஹரியானா மாநில அரசு உத்தரவு;

 • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் அரசு பதவியில் உள்ள விளையாட்டு வீரர்கள், தங்களின் ஆண்டு வருமானத்தில் இருந்து 33% ஊதியத்தை அரசுக்கு திரும்பி அளிக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது
 • இந்த நிதியின் மூலம், மாநில விளையாட்டு துறையை மேம்படுத்த முடிவு செய்துள்ளது ஹரியானா மாநில அரசு

வட கொரியா, அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத அழிப்பு ஒப்பந்தம்:

 • சிங்கப்பூரின் சென்டோஸா தீவுகளில் நடைபெற்ற சிறப்பு மிக்க அமேரிக்கா மற்றும் வட கொரியா இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது
 • இதன் மூலம் வடகொரியா, தந்து அணு ஆயுதங்களை படிப்படியாக அழிப்பதாக தெரிவித்துள்ளது

ஜூன் 12 = சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்:

 • குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், உலகம் முழுவதும் ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி, “சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்” கடைபிடிக்கப்படுகிறது
 • இந்த ஆண்டிற்கான கரு = Generation Safe & Healthy’

முதல் “பிம்ஸ்டெக்” ராணுவ பயிற்சி – இந்தியா நடத்தவுள்ளது:

 • பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் சார்பில், “முதல் பிம்ஸ்டெக் ராணுவ பயிற்சி” நிகழ்ச்சியை இந்தியா வருகின்ற செப்டெம்பர் மாதம் புனே நகரில் நடத்த உள்ளது (India will host the first military exercise of the BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) group)
 • பிம்ஸ்டெக் அமைப்பு 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, வங்கதேசம், பூட்டான், மியான்மர், நேபாள், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன

நேபாள் – பாரத் மைத்ரி பாசனத் திட்டம்:

 • “நேபாள் – பார்த் மைத்ரி பாசனத் திட்டத்தின்” (Nepal-Bharat Maitri Irrigation Project) கீழ், இந்தியாவின் சார்பில் நேபாளத்திற்கு 99 மில்லியன் ரூபாய், நேபாளத்தில் உள்ள 12 மாவட்டங்களில் பாசன வசதியை மேம்படுத்த வழங்கப்பட்டது
 • இதுவரை இத்திட்டத்திற்காக இந்தியாவின் சார்பில் சுமார் 227 மில்லியன் ரூபாய் நேபாளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

டி.சி.ஏ ஆனந்த் குழு:

 • மத்திய அரசு, முன்னால் தேசிய புள்ளியியல் அலுவலக அதிகாரியான டி.சி.ஏ ஆனந்த் தலைமையில், இந்தியாவில் வேலைவாய்ப்பு துறையில் உள்ள புள்ளி விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு அறிக்கை அளிக்க குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தனது அறிக்கையை விரைவில் அரசிடம் அளிக்க உள்ளது

 #YogaFor9to5 – யோகா போட்டி:

 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில், “#YogaFor9to5” என்ற பெயரில் புதிய யோகா போட்டி நடத்தப் பட உள்ளது (‘#YogaFor9to5’, a contest focused on generating awareness regarding benefits of Yoga at Workplace for Women). வேலை பார்க்கும் பெண்கள் இடையே யோகாவின் முக்கியத்தை எடுத்துரைக்கும் வகையில் இது நடத்தப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published.