TNPSC Daily Current Affairs in Tamil 13 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 13-06-2018

பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்துள்ள மத்திய தரைக்கடல்:

 • மத்திய தரைகடல் பகுதிகளில், அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதாக, உலக வநிவாழ்வு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது
 • இதன் மூலம், கடல்பகுதிகளில் வாழும் உயிரினங்கள் பாதிப்பை அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது

5௦௦௦ வை-பை பொது மையங்கள்:

 • மத்திய அரசு, கிராமங்களில் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்கள் மூலம் புதிதாக நாட்டில் 5௦௦௦ வை-பை பொது மையங்களை துவக்க உள்ளது (5,000 Wi-Fi Choupals in villages and delivery of rail tickets through Common Service Centres (CSCs))
 • மேலும் இந்த சேவை மையங்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகள் பொது மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
 • “பாரத் நெட்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக ஆந்திரா அறிவிப்பு:

 • ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் 2.77 லட்ச கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதன மூலம் இந்த நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் (Andhra Pradesh CM Chandrababu Naidu has declared the state Open-Defecation Free after achieving the goal of constructing 2.77 lakh individual toilets)
 • கடந்த 2௦16ம் ஆண்டு, அம்மாநிலத்தின் நகரப் பகுதிகள் இந்நிலையை அடைந்து விட்டது குறிபிடத்தக்கது

அமெரிக்காவில் அதிகளவு கல்வி பயில மாணவர்களை அனுப்பும் 2-வது நாடு இந்தியா:

 • அமெரிக்காவிற்கு அதிகளவு வெளிநாட்டில் இருந்து கல்வி பயில மாணவர்களை அனுப்பும் நாடுகளில், இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில சீனா உள்ளது (India is the second highest sender of foreign students in the US, next only to China)
 • கடந்த 1௦ ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மர அருங்காட்சியகம்:

 • குஜராத் மாநிலத்தின் வதோதரா பகுதியில், “மர அருங்காட்சியகம்” (A landfill site in Gujarat’s Vadodara was converted into a tree museum) நிறுவப்பட்டுள்ளது. 5௦௦௦௦ சதுர அடி பரப்பளவில் சுமார் 12௦௦௦ மரக் கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. அந்நகர முனிசிபல் கார்பரேசன் இதனை முன்னின்று நிறுவியுள்ளது

பள்ளி பெண் குழந்தைகளுக்கு 1 ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்:

 • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர உள்ளது
 • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கும் இது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

233௦ தேனிப் பேட்டிகள் ஒரே நாளில் வழங்கி புதிய உலக சாதனை:

 • மத்திய காதி மற்றும் தொழிலக ஆணையத்தின் சார்பில், ஒரே நாளில் 233௦ தேனிப் பேட்டிகள் வழங்கி, புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது (The Khadi and Village Industries Commission (KVIC) has created a world record of distributing maximum number of bee-boxes in one day under ‘Honey Mission’)
 • “தேன் இயக்கம்” என்ற பெயரில் மத்திய காதி ஆணையம் சார்பில் துவக்கபப்டுள்ள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த தேனிப் பேட்டிகள் வழங்கப்பட்டது
 • இது காஸ்மீர் மாநிலத்தின் குப்வாரா பகுதியில் 233 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது

யானைக்கால் நோயினை விரட்டுவதற்கான 1௦-வது உலகளாவிய கூட்டணிக் கூட்டம்:

 • யானைக் கால் நோயினை விரட்டுவதற்கான 1௦-வது உலகளாவிய கூட்டணி கூட்டம், புது தில்லியில் இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்டது (10th meeting of Global Alliance to Eliminate Lymphatic Filariasis (GAELF))
 • இக்கூட்டத்தின் கரு = ‘Celebrating progress towards elimination: Voices from the field on overcoming programme challenges
 • இந்நோய் உருவாகுவதற்கான முக்கிய காரணி = Wuchereria Bancrofti என்னும் ஒட்டுண்ணி புழு
 • இந்நோயினை பரப்பும் உயிரி = Culex mosquito என்னும் கொசு இனம்

2018 கவுடன் ஸ்பைக் தடகள் தொடரில் இந்தியாவிற்கு தங்கம்:

 • நெதர்லாந்து நாட்டின் லெய்டன் நகரில் நடைபெற்ற 2018ம ஆண்டி கவுடன் ஸ்பைக் தடகள் தொடரில், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவித் முரளி குமார், 1௦௦௦௦ மீட்டார் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார் (Gavit Murali Kumar clinched a gold in men’s 10,000 metre race at the 2018 Gouden Spike meeting in The Netherlands)
 • இதனை அவர் 28 நிமிடங்கள் 43.34 நொடிகளில் கடந்தார்

2018 உமாக்னோவ் நினைவு போட்டித் தொடர்:

 • ரசியாவின் கஸ்பிசிக் நகரில் நடைபெற்ற 2018ம ஆண்டின் உமாக்னோவ் நினைவு போட்டித் (2018 Umakhanov Memorial Tournament) தொடரின் குத்துச்சண்டை பிரிவில், இந்தியாவின் சவீதி பூரா, தங்கம் வென்றார்
 • 75 கிலோ எடை பிரிவில் ரசிய வீராங்கனையை இறுதி போட்டியில் வீழ்த்தினார்

2018 தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சர்வதேச கருத்தரங்கம்:

 • வருகின்ற 17ம தேதி, நேபாளத்தின் காத்மாண்டு நகரில் “2018ம் ஆண்டின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப சர்வதேசம் கருத்தரங்கம்” (International Conference on Information and Communication Technology (ICT)) நடைபெற உள்ளது
 • இக்கருத்தரங்கின் கரு = Sustainable Development Goals for Smart Society
 • பல்வேறு நாடுகளை தொலை தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் பங்குபெற உள்ளனர்

23-வது பிபா கால்பந்து உலகக் கோப்பை 2௦26:

 • 2௦26ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமேரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன (23rd FIFA World Cup 2026 will be hosted by USA, Canada and Mexico)
 • 68-வது பிபா காங்கிரஸ் கூட்டத்தில் நடத்தப்பட்ட போட்டியில் இந்த நாடுகளின் சார்பில் நிறுத்தப்பட்ட அணி போட்டியை நடத்த வெற்றி பெற்றது

சூர்யா கிரண் XIII:

 • இந்தியா மற்றும் நேபாள் நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொண்ட “13-வது சூர்யா – கிரண்” போர் பயிற்சி நிகழ்ச்சி உத்திரகாண்டு மாநிலத்தின் பித்தோகார் என்னுமிடத்தில் நிறைவு பெற்றது (The thirteenth edition of India-Nepal joint military exercise was held at Pithoragarh, Uttarakhand)
 • இரு நாடுகளை சேர்ந்த சுமார் 3௦௦ வீரர்கள் இதில் பங்கு பெற்றனர்

மாசிடோனியா நாட்டின் பெயர் மாற்றம்:

 • கிரீஸ் நாட்டின் கட்டுபாட்டில் இருந்த மாசிடோனியா நாட்டின் பெயர் “வடக்கு மாசிடோனியா குடியரசு” (Republic of North Macedonia) எனப் பெயர் மாற்றத்திற்கு கிரீஸ் நாடு ஒப்புதல் அளித்துள்ளது
 • 27 ஆண்டுகளாக கிரீஸ் மற்றும் மாசிடோனியா நாடுகள் இடையே நீடித்து வந்த பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது

குடியரசுத் தலைவரின் 3 நாடுகள் விஜயம்:

 • இந்தியக் குடியரசுத் தலைவர் அரசு முறை பயணமாக கிரீஸ், சூரிநாமே மற்றும் கியூபா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
 • இதில் முதல் நாடாக அவர் கிரீஸ் சென்றுள்ளார்.

மூத்த குடிமக்களுக்கான தேசிய கவுன்சிலின் 3-வது கூட்டம்:

 • இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கான தேசிய கவுன்சிலின் 3-வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது (3rdMeeting of National Council of Senior Citizens (NCSrC))
 • மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் இதற்கு தலைமை தாங்கினார்

கேரளா அரசின் “நீர் எழுத்தறிவு’ இயக்கம்:

 • கேரளா மாநில அரசு, அம்மாநிலத்தில் நீர் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த “நீர் கல்வியறிவு இயக்கத்தை” (Kerela State Literacy Mission Authorityhas announced the launch of a ‘Water Literacy’(Jalasaksharatha) campaign) நடத்தியது
 • 7௦௦௦௦ பாளி மாணவர்களை கொண்டு இந்த இயக்கம் நடத்தப்பட்டது

ஜூன் 13 = சர்வதேச அல்பினிசம் நோய் விழிப்புணர்வு தினம்:

 • சர்வதேச அல்பினிசம் நோய் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day), ஆண்டு தோறும் ஜூன் 13ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
 • இந்த ஆண்டிற்கான கரு = shining our light to the world
 • இந்து ஒரு ஜீன் குறைப்பாடு நோயாகும்

நேபாள் மற்றும் சீனாவை இணைக்கும் “நட்பு பாலம்”:

 • சீன அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, நேபாள் அரசு இரு நாடுகளையும் இணைக்கும் “2 நட்பு பாலங்களை” (Nepal cabinet approved the Chinese government’s proposal to repair two ‘Friendship Bridges’ that link Nepal and China) மறுகட்டமைப்பு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது
 • 2௦15ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிப்டைந்த இந்த பாலம் இரு நாடுகளையும் இணைக்கும் விதத்தில் எல்லைப்பகுதியில் உள்ளது

2018 உலக சுற்றுச்சூழல் செயல்பாடு குறியீடு:

 • 2018ம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குறியீடு (GlobalEnvironment Performance Index (EPI)) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 நாடுகளை கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது
 • மொத்தம் 180 நாடுகளை கொண்ட இப்பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கி 177-வது இடத்தை பிடித்துள்ளது. 2௦16ம் ஆண்டு இந்தியா 141-வது இடஹ்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது
 • முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள் = சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க்
 • 177-வது இடம் = இந்தியா, 178-வது இடம் = காங்கோ குடியரசு, 179-வது இடம் = வங்கதேசம் மற்றும் 180-வது இடம் = புருண்டி

Leave a Comment

Your email address will not be published.