TNPSC Daily Current Affairs in Tamil 14 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 14-06-2018

ஒ.பி.சி உட்பிரிவு ஆராய அமைக்கப்பட்ட குழுவின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது:

 • மத்தியப் பட்டியலில் உள்ள ஓ.பி.சி பிரிவில், உட்பிரிவு சமூகத்திற்கு இடஒதுக்கீடு தொடர்பாக அமைக்கபப்ட்ட குழுவின் காலக்கெடுவை, இறுதி முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது
 • இக்குழுவின் தலைவராக, முன்னால் நீதிபதி திருமதி ரோகினி அவர்கள் உள்ளார்
 • இக்குழு அரசியல் அமைப்பு சட்ட விதி 340-ன் கீழ் அமைக்கப்பட்டது

நிக்கி ஆசியா விருது:

 • சுலாப் சர்வதேச நிறுவன தலைவரும், இந்தியாவின் பிரபல சமூக ஆர்வலருமான “பிந்தேஸ்வர் பதக்” (BINDESHWAR PATHAK, HONOURED WITH JAPAN’S NIKKEI ASIA AWARD) அவர்களுக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருதான “நிக்கி ஆசியா விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டது
 • ஜப்பானின் டோக்யோ நகரில் நடைபெற்ற விழாவில் 23-வது நிக்கி ஆசியா விருத், இவருக்கு வழங்கப்பட்டது.

நிதி ஆயோக்கின் கூட்டு நீர் மேலாண்மை குறியீடு:

 • நிதி ஆயோக் (NITI AAYOG – NATIONAL INSTITUTION FOR TRANSFORMING INDIA) அமைப்பு, நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், சிறப்பான மேலாண்மை முறையில் கையாளும் திறனை கண்டறியவும், “கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டு” (COMPOSITE WATER MANAGEMENT INDEX) திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது
 • இதன் மூலம் மாநிலங்கள் எவ்வாறு நீர் மேலாண்மையில் செயல்படுகின்றன என்பதனை நிதி ஆயோக் அமைப்பு கண்டறியும்
 • முதல் குறியீட்டு பட்டியலில், இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் மாநிலம் உள்ளது.
 • முதல் 3 இடம் = குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம்
 • தமிழகம் = 7-வது இடம்
 • கடைசி இடம் = ஜார்கண்டு மாநிலம்
 • வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா சிறப்பாக செயல்பட்டுள்ளது

AH-64E அபாச் தாக்குதல் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க ஒப்புதல்:

 • AH-64E என்ற அதிநவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் 6ஐ இந்தியாவிற்கு விற்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது
 • இந்த அபாச் ஹெலிகாப்டர்கள் அதிநவீன கருவிகள், சாதனங்கள் உள்ளடக்கியது ஆகும்

தமிழகத்தில், நெய்வேலி அனல்மின் நிலையம் சார்பில் மூன்று 1௦௦ மெகாவாட் சூரிய ஆற்றல் மையம் துவக்கப்பட்டது:

 • தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அனல் மின் நிலையம் சார்பில், தமிழகத்தில் மூன்று இடங்களில் 1௦௦ மெகாவாட் உற்பத்தி கொண்ட சூரிய ஆற்றல் ஆலை அமைக்கப்பட்டுள்ளது
  1. விருதுநகர் மாவட்டம் – தொப்பலாக்கரை
  2. விருதுநகர் மாவட்டம் – சேதுபுரம்
  3. கன்னியாகுமரி மாவட்டம் – செல்லையா செழியநல்லூர்
 • 13௦௦ கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 3 ஆலைகள் நிறுவப்பட்டுள்ளது

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் வேளை ஆட்டத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர்:

 • பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் வேளை ஆட்டத்தில் இந்தியாவின் ஷிகர் தவான், சதமடித்தார். இதன் மூலம் முதல் வேளை ஆட்டத்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார் (Shikhar Dhawan has become the first-ever Indian batsman to score a century in the first session of a Test match)
 • இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் நான்கு பேர் மட்டுமே இது போன்று முதல் வேளை ஆட்டத்தில் சதமடித்துள்ளனர்

ஜூன் 14 = உலக ரத்த கொடையாளிகள் தினம்:

 • உலகம் முழுவதும் ஆண்டு தோறும் ஜூன் 14ம் நாள், உலக ரத்த கொடையாளிகள் தினம் (WORLD BLOOD DONOR DAY), கடைபிடிக்கப்படுகிறது
 • இந்த ஆண்டிற்கான கரு = Be there for someone else. Give blood. Share life

“பெல்” நிறுவனத்தின் முதல் பிரதிநிதித்துவ அலுவலகம், வியட்நாமில் திறப்பு:

 • “பெல்” எனப்படும் பாரத் மின்னணுவியல் நிறுவனம் சார்பில் முதல் பிரதிநிதித்துவ அலுவலகம், வியட்நாம் நாட்டின் ஹனாய் நகரில் திறக்கப்பட்டுள்ளது (BHARATH ELECTRONICS LIMITED (BEL) OPEN ITS FIRST REPRESENTATIVE OFFICE IN HANOI, VIETNAM)
 • இது ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நவரத்னா (NAVARTNA DEFENCE UNIT) நிறுவனம் ஆகும்

“அட்சன்மொபைல்” செயலி – ரயில்வேயில் பணமற்ற டிக்கெட் பெறும் வசதி:

 • ரயில்வே துரையின் அங்கமான “ரயில்வே தகவல் திட்ட மையம்” சார்பில் “அட்சான்மொபைல்” (“UTSONMOBILE” APP FOR CASHLESS TICKETING) என்ற புதிய செயலி, பணமற்ற முறையில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெறும் புதிய வசதி அறிவிக்கப்பட்டுள்ளது
 • பணமற்ற பொருளாதாரத்தை உருவாக்குதல் நோக்கி ரயில்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று

ராய்பூர் ஸ்மார்ட் நகரத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தை, பிரதமர் துவக்கி வைத்தார்:

 • புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய ராய்பூர் ஸ்மார்ட் நகரத்தின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தை பிரதமர் துவக்கி வைத்தார் (INTEGRATED COMMAND AND CONTROL CENTER OF THE NEW RAIPUR SMART CITY)
 • இந்த ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையம், நாட்டின் 1௦-வது ஸ்மார்ட் நகர மையமாகும்.

மத்திய சுற்றுலா துறையின் புதிய இணையத்தளம்:

 • மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் புதிய இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது. “வியத்தகு இந்தியா” என்று பொருள்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது
 • புதிய இணையதள முகவர் = INCREDIBLEINDIA.ORG

மத்திய சிலி வங்கியில், 1௦ மில்லியன் அமெரிக்க டாலர்கள் திருட்டு:

 • சிலி நாட்டின் மத்திய வங்கியான, “மத்திய சிலி வங்கியில்”, ஹேக்கர்கள் எனப்படும் சைபர் குற்றவாளிகள் வங்கியில் இருந்து ஆன்லைன் மூலம் 1௦ அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பணத்தை திருடி உள்ளனர் (Bank of Chile hit by cyber-attack, hackers steal USD 10 million)
 • ஆனால் வங்கியின் ஒரு வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்தும் பணம் எடுக்கப்படவில்லை.

5௦-வது வெற்றியை பெற்ற செபாஸ்டியன் வெட்டல்:

 • கனடாவில் நடைபெற்ற பார்முலா ஒன கார்பந்தய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், உலகின் முன்னை கார்பந்தய வீரரான செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்
 • இந்த வெற்றியின் மூலம், அவர் 5௦-வது வெற்றியை ருசித்துள்ளார்

ஜெனெரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி – திவ்யா சூர்யதேவரா:

 • புகழ் பெற்ற மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் “முதன்மை நிதி அதிகாரியாக”, இந்திய வம்சாவழியை சேர்ந்த திவ்யா சூர்யதேவரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் குழாய் மூலம் இல்லங்களுக்கு காஸ் வழங்கும்  இந்தியாவின் முதல் மாநிலம்:

 • குழாய்கள் மூலம் மாநிலம் முழுவதும் இல்லங்களுக்கு காஸ் இணைப்பு வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சிறப்பை குஜராத் பெற்றுள்ளது (Gujarat will become the first Indian state to get completely covered under the piped gas distribution network)
 • இதற்காக 9 கட்டமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இறுதி 9-வது நிலை முடிவடைந்து மாநிலம் முழுவதும் குழாய் வழி காஸ் வழங்கும் மாநிலமாக குஜராத் உயர்ந்துள்ளது

இந்தியாவின் முதல் லித்தியம் அயான் செல் உற்பத்தி ஆலை, ஆந்திர மாநிலத்தில் அமைய உள்ளது:

 • இந்தியாவின் முதல் லித்தியம் அயான் செல் உற்பத்தி ஆலை, ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைய உள்ளது (Munoth Industries Limited will set up India’s first lithium ion cell production project in Tirupati, Andhra Pradesh)
 • “முனோத் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம்” சார்பில் 799 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆலை திருப்பதியில் அமைக்கப்பட உள்ளது

 

Leave a Comment