TNPSC Daily Current Affairs in Tamil 15 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 15-06-2018

1௦6-வது அறிவியல் காங்கிரஸ் மாநாடு:

 • 1௦6-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு (106TH INDIAN SCIENCE CONGRESS), 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியில் உள்ள “லவ்லி ப்ரோபாசனல் பல்கலைக்கழக” வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 • இந்த மாநாட்டிற்கான கரு = FUTURE INDIA : SCIENCE & TECHNOLOGY
 • 1௦5-வது இந்திய தேசிய அறிவியல் காங்கிரஸ் மாநாடு, மார்ச் மாதம் மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நடைபெற்றது
 • இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் (ISCA – INDIAN SCIENCE CONGRESS ASSOCIATION) தலைமையகம் கொல்கத்தா நகரில் உள்ளது. இந்த கூட்டமைப்பு 1914ம் ஆண்டு உருவாக்கப்பட்டது

ஸ்வஜால் திட்டம்:

 • மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், நாட்டில் உள்ள 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தூய குடிநீர் கிடைப்பதனை உறுதி செய்ய ஏதுவாக மத்திய அரசு, “ஸ்வஜால் திட்டத்தை” அறிமுகம் செய்துள்ளது (SWAJAL SCHEME IN 115 ASPIRATIONAL DISTRICTS)
 • 7௦௦ கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது

23-வது ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட திருவிழா:

 • 23-வது ஐரோப்பிய ஒன்றிய திரைப்பட திருவிழா (EUFF-2018 = EUROPEAN UNION FILM FESTIVAL), இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் புது தில்லியில் உள்ள சீரிக் கோட்டை வளாகத்தில் நடைபெற உள்ளது
 • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையேயான கலாசார உறவுகள், இந்த விழாவில் மூலம் மேம்பாடு அடையும்

கனடாவின் கியுபெக் மாகாணத்துடன் மகாராஸ்டிரா மாநிலம் ஒப்பந்தம்:

 • மகாராஸ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த ஏதுவாக, கனடா நாட்டின் கியுபெக் மாகான நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
 • பழங்குடியின மக்களிடையே தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இதன் முக்கிய இலக்காகும்

காஸ்மீரை சேர்ந்த பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி சுட்டுக் கொலை:

 • காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளரான சுஜித் புகாரி, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 • இவரின் 2 பாதுகாவலர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்

புதுச்சேரியின் முதல் பெண் டி.ஜி.பி:

 • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் டி.ஜி.பி (போலிஸ் டைரகடர் ஜெனரல்) என்ற சிறப்பை சுந்தரி நந்தா பெற்றுள்ளார்
 • புதுச்சேரியின் லெப்டினன்ட் ஆளுநராக உள்ள கிரண் பேடி, இந்தியாவின் முதல் பெண் காவல் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிபிடத்தக்கது

இந்தியாவின் முதல் பெண் ஹஜ் புனித யாத்திரை ஒருங்கிணைப்பாளர்:

 • இந்தியாவின் முதல் பெண் ஹஜ் புனித யாத்திரை ஒருங்கினைப்பாளர் என்ற சிறப்பை, இந்திய ராணுவ தணிக்கை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரியான “மொய்னா பெனாசிர்” பெற்றுள்ளார் (MOINA BENAZIR, THE FIRST WOMEN HAJ COORDINATOR)
 • 13௦௦ பெண் யாத்திகர்களை கொண்ட குழுவிற்கு, இவர் தலைமை ஏற்று ஹஜ் யாத்திரைக்கு அழைத்து செல்ல உள்ளார்

கலிங்கா மற்றும் கிருஷ்ணன் – 2 புதிய தவளை இனம் கண்டுபிடிப்பு:

 • மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவளை இனங்களுக்கு “கிருஷ்ணா” என்றும் “கலிங்கா” என்றும் பெயரிடப்பட்டுள்ளது
 • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் கர்நாடகா மாநிலத்தின் ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு மறைந்த பிரபல உயிரியல் ஆர்வலரான சுப்ரமணிய சாஸ்த்ரி கிருஷ்ணன் அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு, “கிருஷ்ணன்” எனப்பெயரிடப்பட்டுள்ளது
 • கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு, ஓடிஸா மாநிலத்தின் பண்டைய பெயரான “கலிங்கா” வைக்கப்பட்டது

தேசிய பழங்குடியின அருங்காட்சியகம்:

 • மத்திய பழங்குடியின நல அமைச்சகம், “தேசிய பழங்குடியின அருங்காட்சியகம்” (NATIONAL TRIBAL MUSEUM) மற்றும் “தேசிய பழங்குடியின ஆராய்ச்சி கழகம்” (NATIONAL LEVEL TRIBAL RESEARCH INSTITUTE) ஆகியவற்றை புது தில்லியில் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது
 • இது தற்போது மத்திய நிதி ஆயோக் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஜூன் 15 = உலக முதியோர் மோசடி விழிப்புணர்வு தினம்:

 • ஆண்டு தோறும் ஜூன் 15ம நாள் “உலக முதியோர் மோசடி விழிப்புணர்வு தினம்” கடைபிடிக்கப்படுகிறது
 • முதியோர்களை ஏமாற்றும் கும்பலிடம் இருந்து முதியவர்களை பாதுகாத்தல், இதன முக்கிய நோக்கமாகும்
 • இந்த ஆண்டிற்கான கரு = MOVING FROM AWARENESS TO ACTION THROUGH A HUMAN RIGHTS BASED APPROACH

இங்கிலாந்தின் கியா சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளாயாடும் முதல் இந்தியர்:

 • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்ட வீராங்கனையான, “ஸ்ம்ரிதி மந்தனா”, இங்கிலாந்தின் பெண்கள் கிரிக்கெட் கியா சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடு தேர்வு செய்யப்பட்டுள்ளார் (India Women’s Cricket team opener Smriti Mandhanawill become the first Indian player to appear in Kia Super League)
 • இந்த சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார்

Leave a Comment