TNPSC Daily Current Affairs in Tamil 16 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 16-06-2018

போலந்து நாட்டின் சார்பில் புதிய கின்னஸ் சாதனை:

  • போலந்து நாட்டின் சேர்ந்த, சுமார் 1444 கால்பந்து ரசிகர்கள் ஒன்று சேர்ந்து தொடர்ந்து 1௦ நொடிகளுக்கு கால்பந்தினை தரையில் படாமல், தலையாலும், காலாலும் முட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளனர் (Poland set a new Guinness World record for the largest number of people juggling footballs at the same time for 10 seconds)
  • இந்த சாதனை போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நிகழ்த்தப்பட்டது. இதற்கு முன்னர் இத்தாலி நாட்டினை சேர்ந்த ரசிகர்கள் 1406 பேர் இதனை செய்ததே உலக சாதனையாக இருந்தது

ஆரக்கிள் நிறுவனத்தின் “இணையதள நுண்ணறிவு வரைபட வசதி”:

  • பிரபல் மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், “இணையதள நுண்ணறிவு வரைபட வசதியை” அறிமுகம் செய்துள்ளது (Oracle has announced the availability of the Internet Intelligence Map)
  • இதன்படி பயன்பாட்டாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வரைபடங்கள், கிராபிக்ஸ் முறையில் அறிவுரைகள் போன்றவை இணையத்தளத்தில் இடம்பெறும்

இன்டல் பவுண்டேசன் இளைய விஞ்ஞானி விருது:

  • அமெரிக்காவில் நடைபெற்ற “சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் விழா” நிகழ்ச்சியில் இந்திய வம்சாவழியை சேர்ந்த மேகனா பொல்லிம்பள்ளி மற்றும் துருவிக் பரிக் ஆகியோர் 5௦௦௦௦ அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட “இன்டல் பவுண்டேசன் இளைய விஞ்ஞானி விருதினை” (Meghana Bollimpalli and Dhruvik Parikh received the Intel Foundation Young Scientist Award) வென்றனர்

7 லட்சம் கோடி மதிப்புடைய நிறுவனமாக டி.சி.எஸ் நிறுவனம் உயர்வு:

  • இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படையில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்தியாவின் முதல் நிறுவனமாக உயர்ந்துள்ளது

சிசல்ஸ் நாட்டில் ராணுவ தளம் அமைக்க இந்தியாவிற்கு மறுப்பு:

  • சிசல்ஸ் நாட்டின் “அசம்ப்சன் தீவில்”, இந்தியா மற்றும் சிசல்ஸ் நாடுகள் இணைந்து ராணுவ தளம் அமைக்க இந்தியா முன்வைத்த யோசனையை சிசல்ஸ் அதிபர் தவிர்த்தார்
  • அந்நாட்டு பாராளுமன்றத்தில் இதற்கு எதிராக பெரும்பான்மை ஓட்டளிக்கப்பட்டதால் இது நிராகரிக்கப்பட்டது

ஒரு வாக்கிய நாவல்:

  • ஐயர்லாந்து நாட்டினை சேர்ந்த எழுத்தாளர் “மைக் மெக்கார்மக்” என்பவர் எழுதிய SOLAR BONES என்ற நாவல், சர்வதேச டப்ளின் இலக்கிய விருதை வென்றது (Irish author Mike McCormack has won the International Dublin literary award for his one-sentence novel Solar Bones. McCormack wrote the 224-page book without using full stops, technically making the novel one sentence-long)
  • இந்த நாவல் “ஒரு வாக்கியத்தை மட்டுமே கொண்ட நாவலாகும்”. மொத்தம் 224 பக்கங்களை கொண்ட இந்த நாவலில் எந்த ஒரு இடத்திலும் “முற்றுப்புள்ளி” இல்லை. முதல் பக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கடைசி பக்கம் வரை தொடர்ந்து வரும் ஒரே வாக்கியமாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.