TNPSC Daily Current Affairs in Tamil 17 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 17-06-2018

TNPSC DAILY CURRENT AFFAIRS SHOULD BE UPDATED IN TNPSC WINNERS REGULARLY FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை இறுதிகட்ட கரையும் நிலையில் உள்ளது:

  • அண்டார்டிக் கண்டத்தில் உள்ள ராஸ் பனிமலைப் பகுதியில் இருந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்து பிரிந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை “பி-15” ஆனது தற்போது இறுதிகட்ட கரையும் நிலையில் உள்ளதாக நாசா ஆய்வகம் தெரிவித்துள்ளது (The world’s largest iceberg B-15, which broke away from Antarctica’s Ross ice shelf 18 years ago, could be nearing the end of its voyage)
  • இந்த பி-15 பனிப்பாறை, 295 கிலோமீட்டர் நீளத்தில், 37 கிலோமீட்டர் அகலத்தில் இருந்தது. இது முதன் முறையாக அண்டார்டிக் கண்டத்தில் உள்ள ராஸ் மலைப்பகுதியில் இருந்து மார்ச் 2௦௦௦வது மாதம் உடைந்து பிரிந்தது

இந்தியாவின் முதல் கார்பன் நார் தொழிற்சாலை – ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது:

  • இந்தியாவின் முதல் கார்பன் நார்ப்பொருள் உற்பத்தி ஆலையை, பிரபல ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது (RELIANCE INDUSTRIES LIMITED ANNOUNCES THAT THEY SOON LAUNCHES INDIA’S FIRST CARBON FIBER MANUFACTURING UNIT)
  • ராணுவம் மற்றும் விமான சேவைகள் போன்றவற்றிற்கு இந்த கார்பன் நார்ப்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது

22 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் தாலிபான் படையினர் இணைந்து ரமலான் பண்டிகை கொண்டாடினர்:

  • 22 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டில் அந்நாட்டு ராணுவ வீரர்களும், தாலிபான் தீவிரவாதிகளும் இணைந்து ரமலான் பண்டிகையை கொண்டாடினர்
  • 1996 முதல் 2௦௦1 வரை, ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சி செய்தனர்

பிபா 2018 கால்பந்து உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் கோல்:

  • ரசியாவில் நடைபெற்று வரும் பிபா 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயின் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார் (Portugal captain Cristiano Ronaldo (33 year old) scored FIFA World Cup 2018’s first hat-trick)
  • இந்த ஹாட்ரிக் கோல்களே, இந்த உலகக் கோப்பை போட்டியின் முதல் ஹாட்ரிக் கோல்களாகும்

விண்வெளி துறையில் உலகில் அதிக அனுபவம் மிக்க விண்வெளி வீராங்கனை ஓய்வு பெற்றார்:

  • நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த, பெக்கி விட்சன் விண்வெளி துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் நாசாவில் கடந்த 22 ஆண்டுகளாக பனி புரிந்து வந்தார் (NASA’s record-breaking astronaut, Peggy Whitson, retired after a 22-year-long career)
  • மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் எந்தவொரு அமெரிக்கரும் இல்லாத அளவாக 665 நாட்கள் தங்கி சாதனை படைத்தவர் இவர் (The 58-year-old is the oldest woman to go into space and also the most experienced female spacewalker, with 10 missions)
  • 58 வயதுடைய பெக்கி விட்சன், 1௦ விண்வெளி திட்டங்களில் பனி புரிந்த உலகில் அதிக அனுபவம் மிக்க விண்வெளி வீராங்கனை ஆவார்

தேசிய ஓய்வூதிய திட்ட கருத்தரங்கம்:

  • மத்திய தன்னாட்சி அந்தஸ்தை பெற்றுள்ள அலுவலகங்களில் தேசிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான கருத்தரங்கம், புது தில்லியில் நடைபெற்றது (The conference on implementation of National Pension System (NPS) by the Central Autonomous Bodies (CABs) was held in New Delhi)

ஜி.பி.எஸ் மற்றும் வொயர்லெஸ் மொபைல் போலிஸ் சேவை:

  • 24 மணிநேரமும் காவல் துரையின் சேவையை பெற ஏதுவாக, திரிபுரா மாநில அரசு, “ஜி.பி.எஸ் மற்றும் வொயர்லெஸ் சேவை வசதி கொண்ட மொபைல் போலிஸ் சேவையை” துவக்கியுள்ளது (The Tripura government launched the GPS (Global Positioning System) and wireless-based 24×7 mobile policing service)
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது

இந்திய விமானப் படையின் விமானியான முதல் தென்னிந்திய பெண்மணி:

  • இந்திய விமானப் படை விமானியாக பொறுப்பேற்ற முதல் தென்னிந்திய பெண்மணி என்ற சிறப்பை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த “மேகனா ஷான்பாக்” பெற்றுள்ளார் (Meghana Shanbough MR from Karnataka has become the first woman Indian Air Force fighter pilot from south India)
  • இவர் திண்டுக்கல் விமானபடை அகடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்

தியோதிப்பா மலையை ஏறும் கடற்படை பெண் அதிகாரிகள்:

  • ஹிமாச்சலப் பிரதேசத்தின் பிர்-பஞ்சால் மலைப்பகுதியில் உள்ள “தியோதிப்பா மலையை” ஏறும் முயற்சியில் இந்திய கடற்படையை சேர்ந்த பெண் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் (Naval mountaineering team led by Lt Cdr Kokila Sajwan summited Mount Deotibba)
  • கோகிலா சஜ்வான் தலைமையிலான குழு, இந்த மலையை ஏற உள்ளன
  • தியோதிப்பா மலை, பிர்-பஞ்சால் பகுதியில் உள்ள 2-வது உயரமான மலையாகும். 6௦௦1 மீட்டர் உயரமுடையது இம்மலை ஆகும்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 232 ரன்களை விளாசிய நியுசிலாந்து வீராங்கனை:

  • டப்ளின் நகரில் நடைபெற்ற ஐயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், நியுசிலாந்து அணியை சேர்ந்த “அமலியா கெர்” என்ற வீராங்கனை 232 ரன்களை அடித்து புதிய உலக சாதனை படைத்தார் (AMELIA KERR, NEW ZEALAND’S TEENAGE WOMEN PLAYER HITS 232 RUNS AGAINST IRELAND AND SETS A NEW WORLD RECORD)
  • 17 வயதுடைய “அமலியா கெர்”, 145 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 31 பவுண்டரிகள் உதவியுடன் மொத்தம் 232 ரன்களை குவித்தார்

ஜூன் 16 = குடும்பத்திற்கு பணம் அனுப்புவதற்கான சர்வதேச தினம்:

  • ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16ம் நாள், குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்பும் சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது (JUNE 16 = INTERNATIONAL DAY OF FAMILY REMITTANCES)
  • வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தினை, குடும்ப உறுப்பினர்களுக்காக அனுப்பி வைக்கவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்ற பண உதவிகள் மேற்கொள்வதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது

ஜூன் 17 = சர்வதேச பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தினம்:

  • உலகை பாலைவனமாக்கலுக்கு எதிராக போராட வலியுறுத்தும் சர்வதேசம் தினம் ஆண்டு தோறும் ஜூன் 17ம நாள் கடைபிடிக்கப்படுகிறது (JUNE 17 = WORLD DAY TO COMBAT DESERTIFICATION)
  • இந்த ஆண்டிற்கான கரு = LAND HAS TRUE VALUE – INVEST IN
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.