TNPSC Daily Current Affairs in Tamil 18 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 18-06-2018

TNPSC DAILY CURRENT AFFAIRS SHOLUD BE UPDATED BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS

NITI AAYOG 4TH GOVERNING COUNCIL MEET / நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆளுகை கவுன்சில் கூட்டம்:

  • நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆளுகை கவுன்சில் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. கூடத்திற்கு நிதி ஆயோக் அமைப்பின் தலைவரான பிரதமர் தலைமை தாங்கினார் (NITI AAYOG’S 4TH GOVERNING COUNCIL MEET HELD AT NEW DELHI)
  • 23 மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் பலர் இதில் கலந்துக் கொண்டனர்
  • நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிப்ரவரி 2௦15ல் நடைபெற்றது. 2-வது கூட்டம் ஜூலை 2௦15ல் நடைபெற்றது. 3-வது கூட்டம் ஏப்ரல் 2௦17ல் நடைபெற்றது

COMCASA – US, INDIA KEY MILITARY AGREEMENT / இந்தியா – அமெரிக்க இடையே ராணுவ ஒப்பந்த பேச்சு = காம்கசா

  • அமெரிக்காவை சேர்ந்த முக்கிய ராணுவ உயர் அதிகாரிகள் புது தில்லியில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து, “தொடர்பு இணக்க மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்” (COMMUNICATIONS COMPATIBILTY AND SECURITY AGREEMENT = COMCASA) எனப்படும் “காம்கசா” ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்
  • இது தொடர்பான அடுத்த கூட்டம், ஜூலை மாதம் வாஷிங்டன் நகரில் நடைபெற உள்ளது

WORLS SUSTAINABLE GASTRONOMY DAY / ஜூன் 18 = உலக நீடித்த உணவியல் தினம்:

  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 18ம் தேதி, உலக நீடித்த உணவியல் தினம் (WORLD SUSTAINABLE GASTRONOMY DAY) கடைபிடிக்கப்படுகிறது
  • “GASTRONOMY” என்பது “உணவு மற்றும் கலச்சாரம் இடையேயான உறவுகளை” (STUDY OF RELATIONSHIP BETWEEN FOOD AND CULTURE) பற்றி படிக்கும் படிப்பாகும்

TELUNGANA POLICE LAUNCHES “COP CONNECT” MOBILE APPLICATION / தெலுங்கானா போலிசின்  “காப் கனக்ட்” மொபைல் செயலி:

  • தெலுங்கானா மாநில காவல் துறை சார்பில் “காப் கனக்ட்” என்ற புதிய மொபைல்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது
  • இது வாட்ஸ்அப் செயலியுடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள காவல் துறையினர் அலுவலக ரீதியாக ஒன்றிணைக்கப் படுவர்

GAMING ADDICTION IS MENTAL HEALTH DISORDER – WHO / விளையாட்டிற்கு அடிமையாதல் ஒரு மனநல நோய் – உலக சுகாதார அமைப்பு:

  • உலக சுகாதார அமைப்பு, விளையாட்டிற்கு (வீடியோ கேம் / மொபைல் கேம்) அடிமையாதல் ஒரு மனநல நோய் தான் என அறிவித்துள்ளது
  • இதன் மூலம் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளை இழப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது

ICGS RANI RASHMONI – ஐ.சி.ஜி.எஸ் ராணி ரஷ்மோனி:

  • இந்திய கடலோர காவல் படையில், புதிய அதிவிரைவு ரோந்துக் கப்பல் “ஐ.சி.ஜி.எஸ் ராணி ரஷ்மோனி” என்ற கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் சேர்க்கப்பட்டது
  • இது ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தலத்தில் கட்டப்பட்டது
  • கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ராணி ரஷ்மோனி அவர்களை சிறப்பிக்கும் வகையில், இந்தக் கப்பலுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது

2018 Asia and Oceania Region Inter-Governmental Ministerial meeting on anti-doping / ஊக்க மருந்து தடுப்புக்கான ஆசிய மற்றும் ஓசியானா பகுதியின் அரசுகளுக்கு இடையேயான அமைச்சர்கள் கூட்டம்:

  • இலங்கையில் கொழும்பு நகரில், தூய்மையான விளையாட்டை உறுதி செய்யும் விதமாக 2018ம் ஆண்டிற்கான ஆசிய மற்றும் ஓசியானா பகுதியை சேர்ந்த நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது (2018 Asia and Oceania Region Inter-Governmental Ministerial meeting on anti-doping)
  • இந்தியா உட்பட 29 நாடுகளை சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகள் இதில் கலந்துக்கொண்டனர்

GOA REVOLUTION DAY, JUNE 18 / ஜூன் 18 = கோவா புரட்சி தினம்:

  • கோவா மாநிலத்தின் புரட்சி தினம், ஆண்டு தோறும் ஜூன் 18ம் தேதி அன்று, புரட்சியில் பங்குபெற்ற தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது
  • 1946ம ஆண்டு, ஜூன் 18ம் தேதி அன்று, “ராம் மனோகர் லோகியாவின்” தலைமையில் போர்சுகீசிய ஆட்சிக்கு எதிராக புரட்சி துவங்கியது
  • கோவா மாநிலத்தை போர்சுகீசியர்கள் 451 ஆண்டுகள் ஆண்டனர்.

COLUMBIA’S YOUNGEST PRESIDENT / கொலொம்பியா நாட்டின் இளைய அதிபர்:

  • கொலம்பியா நாட்டின் புதிய அதிபராக இவான் டியுக் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு வயது 43 ஆகும்.
  • குறைந்த வயதில் கொலம்பியாவின் அதிபராக இவர் பதவி ஏற்க உள்ளார்

Federer wins 98th singles title / ரோஜர் பெடரரின் 98-வது வெற்றிப் பட்டம்:

  • உலகின் முன்னை டென்னிஸ் வீரரான சுவிட்சர்லாந்து நாட்டினை சேர்ந்த ரோஜர் பெடரர் “ஸ்டக்கர்ட் ஓபன்” இறுதி ஆட்டத்தில் மிலோஸ் ரோனிக் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டதை வென்றார்
  • இதன் மூலம் சர்வதேச தர வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்த ரோஜர் பெடரர், தனது 98-வது வெற்றிக் கோப்பையை வென்றார்

India is planning to gift a Dornier aircraft to Seychelles / சிசல்ஸ் நாட்டிற்கு டோர்னியர் விமானத்தை பரிசளிக்க உள்ளது இந்தியா:

  • இந்தியாவின் சார்பில், சிசல்ஸ் நாட்டிற்கு டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா வழங்கம் இரண்டாவது டோர்னியர் விமானம் இதுவாகும்
  • சமிபத்தில் இந்தியாவின் சார்பில் சிசல்ஸ் நாட்டில் கூட்டு ராணுவ தளம் அமைக்கும் யோசனையை சிசல்ஸ் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

AEROBIC RICE TECHNOLOGY / காற்றில் ஒரு அரிசி தொழில்நுட்பம்:

  • பெங்களூருவை சேர்ந்த “கிசான்கிராப்ட்” என்ற அமைப்பு, “காற்றில் வளரும் அரிசி” வகை தொழில்நுட்பத்தை ஐந்து மாநில விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது (AEROBIC RICE TECHNOLOGY, MAINLY AIMS TO REDUCE WATER USAGE)
  • இதில் தண்ணீர் பயன்பாடு 6௦% குறைவாகும். மேலும் இது மண்ணில் நேரடியாக அரிசியை விதைக்கும் தொழில்நுட்பம் என்பதால் வேலையாட்கள் கூலி குறைவாகும்

NUCLEAR SUPPLIERS GROUP MEET / அணுசக்தி கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம்:

  • அணுசக்தி கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம், லாத்வியா நாட்டின் ஜுர்மாலா நகரில் நடைபெற்றது
  • லாத்வியா நாட்டு தூதர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.