TNPSC Daily Current Affairs in Tamil 20 June 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 20.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED BY TNPSC WINNERS FOR THOSE WHO HAVE PREPARING FOR COMPETITIVE EXAMS

CANADA LAWMAKERS VOTE TO LEGALISE CANNABIS / கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் கனடா:

  • கனடா நாட்டு பாராளுமன்றம், கஞ்சாவை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் மசோதாவை கொண்டுவந்து ஒப்புதலை பெற்றுள்ளது. இதன் மூலம் கஞ்சாவை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் முதல் ஜி-7 நாடாக கனடா உள்ளது
  • விரைவில் இது அதிகாரப்பூர்வமாக சட்டமாக மாற உள்ளது

WORLD’S OLDEST SUMATRAN ORANGUTAN DIED / உலகிலே அதிக வயதான சுமாத்ரா ஒராங்குட்டான் குரங்கு இறந்தது

  • உலகிலேயே அதிக வயதான சுமத்ரா ஒராங்குட்டான் குரங்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் காலமானது. அதற்கு வயது 62 ஆகும்.
  • “புவான்’ எனப்பெயரிடப்பட்ட இந்த உராங்குட்டான் குரங்கு, வயது முதிர்வில் காரணமாக இறப்பை எய்தது

GOOGLE TO TRAIN 8,000 INDIAN JOURNALISTS / 8000 இந்திய பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூகுள்:

  • கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவின் சார்பில், இந்தியாவில் சுமார் 8000 பத்திரிக்கையாளர்களுக்கு ஆங்கிலம் மற்றும் 6 இந்திய மொழிகளில் பயிற்சி அளிக்க உள்ளது
  • இது “தகவலை உறுதி செய்தல்” (FACT CHECKING) தொடர்பான பயிற்சி ஆகும்
  • 6 மொழிகள் = இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மராத்தி மற்றும் கன்னடா

வெளிநாட்டு வேலையாட்களை அதிகளவு கூப்பிடும் ஜப்பான்:

  • ஜப்பான் நாடாளுமன்றம், அந்நாட்டில் வேலையில் ஈடுபட வெளிநாட்டினரை அதிகளவு ஈடுபடுத்தும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது
  • கடந்த சில ஆண்டுகளில் ஜப்பானில் உள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது

JUNE 19 = NATIONAL DAY OF READING / ஜூன் 19, தேசிய வாசிப்பு தினம்

  • இந்திய தேசிய வாசிப்பு தினம், ஜூன 19ம தேதி கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பொது மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

NATIONAL DIGITAL LIBRARY / தேசிய டிஜிட்டல் நூலகம்:

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில், “இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம்” துவக்கப்பட்டுள்ளது
  • இது ஐ.ஐ.டி கரக்பூர் கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது
  • இந்த டிஜிட்டல் நூலகத்தில் 2௦௦ மொழிகளில் 16௦ பிரிவுகளில் சுமார் 1.7௦ கோடி புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் வைக்கப்பட்டுள்ளன
  • இதற்கான இணையதளம் = NDL.IITKGP.AC.IN

NATIONAL HEALTH RESOURCE REPOSITORY PROJECT / தேசிய சுகாதார ஆதார களஞ்சிய திட்டம்:

  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், “தேசிய சுகாதார ஆதார களஞ்சிய திட்டத்தை” (NATIONAL HEALTH RESOURCE REPOSITORY PROJECT) புது தில்லியில் துவக்கி வைத்தது
  • இது இந்தியாவின் முதல் தேசிய சுகாதார வசதிகளை கொண்ட பதிவுகள் ஆகும். இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மற்றும் சுகாதார விவரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன

WORLD’S FIRST INTERNATIONAL CENTRE FOR HUMANITARIAN FORENSICS / உலகின் முதலாவது மனிதாபிமான தடயவியலுக்கான சர்வதேச மையம்:

  • குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் உலகின் முதலாவது மனிதாபிமான தடயவியலுக்கான சர்வதேச மையம் துவங்கப்பட்டுள்ளது (WORLD’S FIRST INTERNATIONAL CENTRE FOR HUMANITARIAN FORENSICS)
  • சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து குஜராத் தடயவியல் துறையும் இணைந்து இதனை துவங்கியுள்ளனர்

INDIA’S 100TH SMART CITY, SHILLONG / இந்தியாவின் 1௦௦-வது ஸ்மார்ட் நகரம், ஷில்லாங்:

  • இந்தியாவின் 1௦௦-வது ஸ்மார்ட் நகரமாக உருவாக்க மேகாலயா தலைநகர் ஷில்லாங் தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • இதுவரை 99 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 1௦௦-வது நகராக ஷில்லாங் தேர்வு செய்து பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது

EXERCISE INDRA 2018 / இந்திரா 2018 போர் பயிற்சி:

  • இந்தியா மற்றும் ரசியா நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் “இந்திரா 2018” போர் பயிற்சி நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை மேற்கொள்ள ரசிய நாட்டு அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்
  • இந்திரா போர் பயிற்சி 2௦௦3ம் ஆண்டு முதல் ரசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

JUNE 18 = INTERNATIONAL PICNIC DAY / ஜூன் 18 = சர்வதேச உல்லாச சுற்றுலா தினம்:

  • சர்வதேச உல்லாச சுற்றுலா தினம் (INTERNATIONAL PICNIC DAY) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 18ம தேதி கொண்டாடப்படுகிறது.
  • “பிக்னிக்” என்ற வார்த்தை பிரெஞ்ச் மொழியில் இருந்து தோன்றியது

JUNE 20 = WORLD REFUGEE DAY / ஜூன் 2௦ = உலக அகதிகள் தினம்:

  • உலகம் முழுவதும் ஜூன் 2௦ம் தேதி, “உலக ஆதிகள் தினம்” கடைபிடிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான கரு = Now More Than Ever, We Need to Stand with Refugees

“I-HARIYALI” MOBILE APPLICATION / “ஐ-ஹரியாலி” மொபைல் செயலி:

  • பஞ்சாப் மாநில அரசு, “ஐ-ஹரியாலி” என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பதிவுகள் மேற்கொள்ளும் நபர் ஒருவருக்கு 25 செடிகள் அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும்
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.