TNPSC Daily Current Affairs in Tamil 21 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 21 June 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPDATED DAILY HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO PREPARED FOR COMPETITVE EXAMS LIKE TNPSC GROUP 2, 4 ETC.,

ஜூன் 21 = சர்வதேச யோகா தினம்:

  • நான்காவது சர்வதேச யோகா தினம், ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் “டேராடூன்” நகரில் பிரதமர் மோடியின் தலைமையில் யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது
  • ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பிரதமரும் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
  • இந்த ஆண்டிற்கான கரு =
  • “யோகா” என்கிற சம்ஸ்கிருத வாரத்தையின் பொருள், மனதை ஒருநிலைப் படுத்துதல் ஆகும்
  • சர்வதேச யோகா தினமாக ஜூன் 21ம் தேதி தேர்வு செய்யப்பட்டதற்கு காரணம் = வட அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாக அமையும் நாள் ஜூன் 21 ஆகும்
  • முதல் சர்வதேச யோகா தினம், 2௦15ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி புது தில்லியில் நடைபெற்றது
  • இந்தோ – திபத்திய எல்லைக் காவல் படையினர், 18000 அடி உயர லடாக் பனிமலைப் பகுதியில் யோகாசனம் மேற்கொண்டனர்
  • சீனாவின் லான்பு கோவிலிலும், கம்போடியாவின் அங்கோர் வாட் கோவிலிலும் யோகா நிகழச்சி நடைபெற்றது

இந்திய ஸ்மார்ட் நகரங்கள் விருது 2018:

  • “2018 இந்திய ஸ்மார்ட் நகர விருதுகள்”, அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 9 விருதுகள் அறிவிக்கப்பட்டன
சிறந்த நகர விருது (CITY AWARD) சூரத் (குஜராத்)
புதுமை யோசனை விருது (INNOVATIVE IDEA AWARD) போபால் (மத்தியப்பிரதேசம்) மற்றும் அகமதாபாத் (குஜராத்)
ஆளுகை விருது (GOVERNANACE PROJECT AWARD) பூனே (மகாராஸ்டிரா)
சுற்றுச்சூழல் உருவாக்கம் (BUILT ENVIRONMENT) பூனே (மகாராஸ்டிரா)
சமூக அம்சங்கள் (SOCIAL ASPECTS) 1.ஜபல்பூர்

2.விசாகப்பட்டினம்

3.பூனே

கலாசாரம் மற்றும் பொருளாதாரம் (CULTURE AND ECONOMY) 1.போபால்

2.ஜெய்பூர்

நகர்புற சுற்றுச்சூழல் (URBAN ENVIRONMENT) 1.போபால்

2.பூனே

3.ஜபல்பூர்

4.கோயம்பத்தூர் (பொது போக்கு வரத்திற்கு சைக்கிள் வசதிகள் கொண்டு வந்தது)

போக்குவரத்து (TRANSPORT AND MOBILITY) 1.அகமதாபாத்

2.சூரத்

நீர் மற்றும் துப்புரவு (WATER AND SANITATION) அகமதாபாத்

ஹரியானா அரசின் “7 நட்சத்திர கிராம பஞ்சாயத்து வானவில் திட்டம்:

  • ஹரியானா மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை முன்னேற்ற ஏதுவாக “7 நட்சத்திர கிராம பஞ்சாயத்து வானவில் திட்டம்” என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது
  • பாலினம், கல்வி, ஆரோக்கியம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, ஆளுகை மாறும் சமூக பங்கேற்பு ஆகிய 7 பிரிவுகளின் கீழ் கிராம பஞ்சாயத்துகளை வகை படுத்த உள்ளது

ஒபக் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம்:

  • பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் “ஒபக்” கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்றது
  • இந்தியாவின் சார்பில் இக்கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்

தொழிற்சாலை வணிக கண்காட்சி 2018:

  • 13-வது தொழிசாலை வணிக கண்காட்சி (13TH INDUSTRIAL TRADE FAIR, CHENNAI) சென்னை நகரில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார்
  • நான்காவது தொழிற் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது

சிக்கிம் மாநில தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்:

  • சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார் (BRAND AMBASSADOR OF SIKKIM GOVERNMENT)
  • சிக்கிம் அரசின் திட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றை உலகிற்கு எடுத்துக் கூறுதல் வேண்டும்

7-வது தாதுக்கள் மற்றும் உலோக மன்றக் கூட்டம்:

  • 7-வது இந்திய தாதுக்கள் ,அற்றும் உலோக மன்றக் கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது (7THINDIA MINERALS AND METALS FORUM)
  • உலகளவில் மாறி வரும் உலோகத் துறை மாற்றங்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது

ராஜஸ்தான் – யோகா செயவாதில் புதிய உலக சாதனை:

  • ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில், சர்வதேச யோகா தினத்தன்று ஒரே இடத்தில் 16௦௦௦௦ பேர் யோகா ஆசனங்கள் செய்து புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது
  • கடந்த ஆண்டு மைசூரில் 55௦௦௦ பேர் ஒரே இடத்தில் யோகா மேற்கொண்டதே உலக சாதனையாக இருந்தது

ஜூன் 21 = உலக இசை தினம்:

  • உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி, உலக இசை தினம் கொண்டாடப்பட்டது. முதன் முதலில் இசை திருவிழா என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டில் 1982ம் ஆண்டு நடைபெற்றது

நீடித்த மற்றும் லாபகரமாக வேளாண்மையை மாற்றுதலுக்கான கருத்தரங்கம்:

  • “நீடித்த மற்றும்ம் லாபகரமாக வேளாண்மையை உருவாக்குவதற்கான தேசிய ஆலோசனை” (“NATIONAL CONSULTATION ON MAKING AGRICULTURE SUSTAINABLE AND PROFITABLE’) கருத்தரங்கம் மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் துணைக் குடியரசுத் தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது

உலகின் அதிக சக்தி வாய்ந்த “சூப்பர் கணினி”:

  • உலகிலேயே அதிக சாகதி மிக்க சூப்பர் கணினியை அமெரிக்க உருவாக்கி உள்ளது. இதற்கு “சம்மிட்” எனப் பெயரிடப்பட்டுள்ளது (world’s most powerful and smartest scientific supercomputer named ‘Summit’)
  • இந்த கணினி ஒரு நொடிக்கு 2௦௦௦௦௦ ட்ரில்லியன் கணக்குகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது

“வேத விஞ்ஞான அலோக்” புத்தகம்:

  • ஆச்சார்யா அக்னிவராத் நைஷ்திக் அவர்களால் எழுதப்பட்டுள்ள “வேத விஞ்ஞான அலோக்” (Vedvigyan Alok) என்ற புத்தகம் வெளியிடப்பட்டு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பெற்றுக்கொண்டார்

சூரியனாமிலே யோகா தினத்தை கொண்டாடிய குடியரசுத் தலைவர்:

  • அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர், 2-வது நாடாக சூரியனாம் சென்றடைந்தார்
  • அங்கு அந்நாட்டு அதிபருடன் இணைந்து “சர்வதேச யோகா தினத்தை” பிரதிபலிக்கும் வகையில் ஆசனங்கள் மேற்கொண்டார்

பிரதம மந்திரியின் யோகா விருதுகள்:

  • யோகாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் பல்வேறு சேவைகள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் ‘பிரதம மந்திரி யோகா விருது” (PM’S YOGA AWARD), இந்த ஆண்டு “நாசிக்கில் உள்ள விஸ்வாஸ் மந்தலிக் மண்டல் மையம்” (NASIK’S VISWAS MANDALIK), மற்றும் “மும்பை யோகா கழகம்” (YOGA INSTITUTE, MUMBAI) ஆகியவை இணைந்து பெற்றுள்ளன
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.