TNPSC Daily Current Affairs in Tamil 22 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 22-06-2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

நேரள்ள வேணு மாதவ், இந்திய மிமிக்ரி (போலிக் குரல்) கலையின் தந்தை, காலமானார்:

  • இந்தியா மிமிக்ரி கலையின் தந்தை (FATHER OF INDIAN MIMICRY) எனப்படும் நேரள்ள வேணு மாதவ் அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹம்மகொண்டா பகுதியில் காலமானார்
  • இவர் 2௦௦1ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்றார்

விரல் ரேகை பதிவு இயக்கக இயக்குனர்களுக்கான அகில இந்திய 19வது கருத்தரங்கம்:

  • தெலுங்கானா மாநில காவல் துரையின் சார்பில் ஹைத்ராபாத் நகரில் “19-வது விரல் ரேகை பதிவு இயக்கக இயக்குனர்களுக்கான தேசிய கருத்தரங்கம்” நடைபெற்றது (THE 19TH ALL INDIA CONFERENCE OF DIRECTORS OF FINGER PRINTS BUREAUX 2018)
  • இரண்டு நாள் கருத்தரங்கில் விரல்ரேகை பதிவு விவரங்களில் ஏற்படும் சிக்கல்கள், அதனை தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டது

ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3-வது ஆண்டுக் கூட்டம்:

  • “ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியின்”, 3-வது ஆண்டுக் கூட்டம் இந்தியாவின் சார்பில் வரும் ஜூன் 25ம் தேதி மும்பை நகரில் நடத்தப்பட உள்ளது
  • இந்த கூடத்திற்கான கரு = Mobilizing Finance for Infrastructure: Innovation and Collaboration

ஸ்காச் அமைப்பின் “சிறப்பாக செயல்பட்ட சமூக துறை அமைச்சக” விருது:

  • கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட “மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு”, இந்த ஆண்டிற்கான ஸ்காச் சமைப்பேன் “சிறப்பாக செயல்பட்ட சமூக துறை அமைச்சக விருது” வழங்கப்பட்டது (SKOCH Group has conferred the ‘Best performing Social Sector Ministry’ award)
  • புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இவ்விருதை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி பெற்றுக்கொண்டார்

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி கழகம் (சிப்ரி):

  • சிப்ரி எனப்படும் “ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி கழகம்” சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உலகின் முக்கிய 9 அணுஆயுத நாடுகளில் மொத்தம் 14465 அணு ஆயுதங்கள் 2018ம் ஆண்டின் கணக்கில் படி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இது கடந்த ஆண்டை காட்டிலும் சிறிது குறைந்துள்ளது. உலகின் 9௦% அணு ஆயுதங்கள் அமேரிக்கா மற்றும் ரசியா ஆப்கிய இரு நாடுகளிடமே உள்ளன. இதில் அமெரிக்காவை காட்டிலும் ரசியாவிடம் அதிகமாக உள்ளன
  • இந்தியாவிடம் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், பாகிஸ்தானிடம் இந்தியாவை காட்டிலும் அதிகமாக 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

நியுயார்க் நகரில் இயற்கை மையம்:

  • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் நியுயார்க் நகரில் “இயற்கை குணப்படுத்து மையத்தினை” பிரதமர் மோடி அவர்கள் துவக்கி வைத்தார்
  • இதன் பெயர் = YO1 NATURE CURE CENTER
  • யோகா மற்றும் பிராணாயாமம் மூலம் இங்கு சிகிச்சை அளிக்கப்படும்

பல்கலைக்கழகங்களுக்கான யோகா மையம்:

  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான யோகா மையத்தை பெங்களூரு நகரில் உள்ள “சுவாமி விவேகானந்தா யோகா அனுசன்தனா சமஸ்தான” மையத்தில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது

இந்தியா அமேரிக்கா இடையேயான முதல் 2+2 பேச்சுவார்த்தை:

  • இந்தியா மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு இடையேயான முதல் 2+2 பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து புதிய உலக சாதனை:

  • சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், அணியின் அதிகபட்ச ஸ்கோரில் தற்போது இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 5௦ ஓவர் முடிவில் 481 ரன்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது

சைகை மொழி மூலம் பேசும், புகழ்பெற்ற கோகோ கொரில்லா குரங்கு மறைந்தது:

  • மனிதர்களிடம் அவர்களின் சைகை மொழியை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப மீண்டும் சைகை மொழி மூலம் பேசும் திறன் கொண்ட புகழ்பெற்ற “கோகோ” (KOKO, WHO MASTERED SIGN LANGUAGE) என்னும் கொரில்லா குரங்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் தனது 46-வது வயதில் காலமானது

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் “யோகா கிராமம்”:

  • கொல்கத்தாவில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் “யோகா கிராமம்” அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 5 கோடி ரூபாயை, பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கி உள்ளது
  • யோகா தொடர்பான புத்தகங்கள், வீடியோ பதிவுகள் போன்றவை இங்கு வைக்கப்படும்

உலகின் முதல் கணவாய் மீன்கள் வாழிடம் கண்டுபிடிப்பு:

  • இளம் கணவாய் மீன்கள் (MANTA RAY) வாழிடம் குறித்து முதன் முறையாக அறியப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பகுதியில் இந்த இளம் கனவை மீன்கள் வாழிடம் அறியப்பட்டுள்ளது (WORLD’S FIRST MANTA RAY NURSERY DISCOVERED)

தெலுங்கானாவில் சிறப்பு மஞ்சள் மையம்:

  • தெலுங்கானா மாநிலத்தின் நிஸாமாபாத் நகரில், சிறப்பு மஞ்சள் மையத்தை மத்திய அரசு துவக்கி உள்ளது (SPECIAL TURMERIC CELL IN NIZAMABAD, TELANGANA)
  • உலகின் முன்னை மனஜ்ல் விளைவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.