TNPSC Daily Current Affairs in Tamil 23 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 23 June 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

உலகிலேயே மிகச் சிறிய கணிணி:

  • அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய கணிணியை உருவாக்கி உள்ளனர் (world’s smallest computer “Michigan Micro Mote”)
  • இதன் பெயர் = MICHIGAN MICRO MOTE
  • ௦.3 மில்லிமீட்டர் அளவுடையது இது.
  • இது புற்றுநோய் (கேன்சர்) சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு அதிகன் உதவும்

குஜராத் அரசின் “சூர்ய சக்தி கிசான் யோஜனா” திட்டம்:

  • குஜராத் அரசு விவசாயிகளுக்காக “சூர்ய சக்தி கிசான் யோஜனா” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி விவசாயிகள் தங்களின் நிலத்தில் சூரிய தட்டு தகடுகளை கொண்டு சூரிய ஆற்றல் மின்சாரத்தை தங்களின் தேவைக்கு பயன்படுத்தி கொண்டு, மிச்சமான மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்வது இதன் நோக்கமாகும்

சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்:

  • சிங்கப்பூரில் நடைபெற்ற “சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்சிப்” (Singapore National Swimming Championships in Singapore) போட்டியின் 5௦ மீ நீச்சல் போட்டியில், இந்தியாவின் “சந்தீப் செஜ்வால்”, தங்கம் வென்றார்
  • மேலும் இந்தியாவின் “விர்தவால் கடே”, 5௦ மீ போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

22-வது சிந்து தர்சன் திருவிழா:

  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் சிந்து நதிக்கரை பகுதியில் பிரசத்திபெற்ற சிந்து தர்சன் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது (22nd edition of Sindhu Darshan Festival (SDF))
  • இது 22-வது சிந்து தர்சன் திருவிழாவாகும்.
  • இந்த விழாவினை முதலில் 1997ம் ஆண்டு அப்போதைய துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி அவர்கள் துவக்கி வைத்தார்

ஜூன் 23 = சர்வதேச கைம்பெண்கள் (விதவைகள்) தினம்:

  • ஜூன் 23ம் தேதி, உலகம் முழுவதும் சர்வதேச கைம்பெண்கள் (விதவை) தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இத்தினத்தின் நோக்கம் = வாழ்க்கை துணியை இழந்த பிறகும் அவர்களுக்கு வாழ்க்கை இருப்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும் அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலை, முடிவெடுத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்

ஸ்காச் விருது – இந்த ஆண்டின் சிறந்த முதல்வர்:

  • புது தில்லியில் நடைபெற்ற 52-வது ஸ்காச் மாநாடு 2018ல், சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்களுக்கு வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அவர்களுக்கு, “சிறந்த மாநில முதல்வர்” (Chief Minister of the Year’ award) விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது

இரண்டு தீவிரவாத இயக்கங்களை மாதிய அரசு தடை செய்தது:

  • மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய துணைக் கண்டத்தில், அல்-கொய்தா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவை சார்ந்த ஐ.எஸ். தீவிரவாத பிரிவு ஆகிய இரண்டு தீவிரவாத குழுக்களை, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது

வணிஜ்யா பவன்:

  • மத்திய வணிகத் துறை அமைச்சகத்திற்கான புதிய அலுவலகமான, “வணிஜ்யா பவன்” கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்
  • வணிகத் துரையின் அணைத்து அலுவலகங்களும் இந்த முக்கிய அலுவலகம் கீழ் வந்துவிடும். மேலும் இந்த அலுவலகம் முற்றிலும் காகிதம் இல்லா அலுவலகமாக செயல்படும்

மங்கோலியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவின் சார்பில் அமைக்கப்படுகிறது:

  • மங்கோலிய நாட்டின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவின் பொருளுதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை மங்கோலியாவிற்கு வழங்கி உள்ளது
  • இதற்கான அடிக்கல் நாடு விழாவில், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டு, அடிக்கல் நாட்டினார்

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர்:

  • இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியின் புதிய நிர்வாக இயக்குனராக “அரிஜித் பாசு” அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது

அமெரிக்காவில் நடைபெற்ற “வியக்கத்தக்க இந்தியா சாலை கண்காட்சி” நிகழ்ச்சி:

  • அமெரிக்காவில் நடைபெற்ற “வியக்கத்தக்க இந்தியா சாலை கண்காட்சி” நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கலந்துக் கொண்டார்
  • நியுயார்க், சிகாகோ போன்ற நகரங்களில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. இந்திய சுற்றுலாத்துறை பிரபலமாக்குவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சி இது.

சர்வதேச ஒலிம்பிக் தினம், ஜூன் 23:

  • சர்வதேச ஒலிம்பிக் தினம், ஜூன் 23ம் தேதி அன்று உலகம் முழுவதும் விளையாதது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது
  • 1894ம் ஆண்டு, ஜூன் 23ம் தேதி பாரிஸ் நகரின் சார்போன் பகுதியில், நவீன ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டதன் நினைவை குறிப்பிடும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது

ஐக்கிய நாடுகள் பொது சேவை தினம், ஜூன் 23:

  • ஆண்டு தோறும் ஜூன் 23ம் தேதி, உலகம் முழுவதும் “ஐக்கிய நாடுகள் பொது சேவைகள் தினம்” கொண்டாடப்படுகிறது

போர் நினைவகம்”, பிரான்ஸ் நாட்டில் அமைக்கும் இந்தியா:

  • இந்தியாவின் சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அருகே உள்ள வில்லர்ஸ் குயச்லான் என்னுமிடத்தில்,”போர் நினைவகம்” அமைக்கப்பட உள்ளது
  • முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக இதனை அமைக்கிரகுடு இந்தியா. ஐரோப்பாவில் அமைக்கப்படும் இரண்டாவது போர் நினைவகம் இதுவாகும்

சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம், தஜிகிஸ்தானில் திறக்கப்பட்டது:

  • தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் “துசான்பே” நகரில் “சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தை”, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கத்காரி துவக்கி வைத்தார்
  • மேலும் 2௦19ம் ஆண்டிற்குள் ஈரானில் சப்பார் துறைமுகம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.