TNPSC Daily Current Affairs in Tamil 24 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 24 June 201

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

சவூதி அரேபியாவில், பெண் ஓட்டுனர்களுக்கான தடை முற்றிலும் விலக்கப்பட்டது:

  • 1957ம் ஆண்டுக்கு பிறகு, முதல் முறையாக சவூதி அரேபியாவில், பெண் ஓட்டுனர்களுக்கு வாகனங்கள் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
  • உலகில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி மறுத்து வந்த ஒரே நாடு, சவூதி அரேபியா மட்டுமே. தற்போது அந்நாடு அனுமதி வழங்கி உள்ளது.

“கார்பட்” கடற்படை பயிற்சி நிகழ்ச்சி:

 

  • இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முதல் “கார்பட்” (1ST COORDINATED PATROL) கடற்படை பயிற்சி நிகழ்ச்சி நாத இருநாடுகளும் ஒப்புதல் செய்துள்ளன
  • வரும் 27ம் தேதி முதல் வங்கதேச கடல் பகுதியில் இப்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது

தேர்தல் ஆணையத்தின் “இ-நேத்ரா” மொபைல் செயலி:

  • இந்திய தேர்தல் ஆணையம், “இ-நேத்ரா” என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கி வருகிறது.
  • இது, தங்கள் பகுதி அரசியல் தலைவர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி நடந்தால், உடனடியாக இந்த செயலி மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பலாம். மேலும் அது தொடர்பான ஆதாரங்களை புகைப்படமாகவோ அல்லது படமாகவோ அனுப்பலாம்

பனா அலாபெத், சிரிய நாட்டு சிறுமி:

  • சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரங்கள் தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வரும், 9-வயது சிரிய நாட்டு சிறுமிக்கு “பாதுகாப்பான சுதந்திரம்” (DEFENDING FREEDOM) என்ற பெயரில் கவுரவிக்கப்பட்டது
  • 2௦17ம் ஆண்டு இணையதள ஆய்வில், உலகின் அதிக செல்வாக்கு மிக்க 25 நபர்களில் இந்த சிறுமியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்தியா – ஆஸ்திரேலியா தீவிரவாத கூட்டு எதிர்ப்பு குழுவின் 1௦-வது கூட்டம்:

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத எதிர்ப்பு குழுவின் 1௦-வது கூட்டம், புது தில்லியில் நடைபெற்றது
  • இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழி எல்லைப் பிரச்சனை போன்றவை விவாதிக்கப்பட்டது

உலகின் 2-வது இளைய கிராண்ட் மாஸ்டர்:

  • இத்தாலியில் நடைபெற்ற கிரேண்டைன் சஹுரங்க சாம்பியன்சிப் போட்டியில், இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சென்னை சிறுவன் “பிரகநாணந்தா”, கிராண்ட் மாஸ்டர் பட்டதை வென்றார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை வெல்லும் இரண்டாவது நபர் இச் சிறுவன் ஆவான்
  • இவர் 12 வயது, 1௦ மாதம் மற்றும் 13 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். உலகில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர், உக்ரைன் நாட்டின் செர்கே கர்ஜகின் ஆவார். அவர் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை 2௦௦2ம் ஆண்டு வென்றார்
  • இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டதை பெற்ற முதல் இந்தியர் இவராவார். உலகின் இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டதை வென்றவர் இவரே. 2௦16ம் ஆண்டில் தந்து 1௦ வயது, 1௦ மாதம் 19 நாட்களில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்றார்
  • இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்

சீனாவின் “டவ்” திட்டம் – புறா வடிவில் குட்டி கண்காணிப்பு விமானம் மூலம் மக்களை கண்காணித்தல்:

  • கேமெரா, ஜி.பி.எஸ் ஆண்டெனா மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு போன்ற வசதிகளை உள்ளடக்கிய புறா போன்றே உருவாக்கப்பட்டுள்ள “க்பரவை கண்காணிப்பு விமானம்” மூலம் மக்களை கண்காணிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது
  • இத்திட்டத்திற்கு “டவ்” (DOVE, BIRD SHAPED DRONES) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • உண்மையான புற போன்றே வானில் பறக்கும் இந்த கண்காணிப்பு விமானம், நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களை கண்காணிக்க ஈடுபடுத்தப்பட உள்ளது

1400 வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு தடை விதித்த ஈரான்:

  • அமெரிக்காவால் வர்த்தக தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானில், அந்நாட்டு அரசு அதை சமாளிக்கும் விதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1400 பொருட்களுக்கு தடை விதித்து, அதற்கான பொருட்களை உள்நாடில்ர் உற்பத்தி செய்தல், மற்றும் உள்நாட்டு வணிகத்தை பெருக்குதல் போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் முறையாக 5-௦ என்ற கணக்கில் தொடரை வென்றது:

  • இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அங்கு நடைபெற்ற 5 ஒருநாள் போட்டி தொடரில், 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
  • இங்கிலாந்து அணி, முதன் முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5-௦ என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது
  • ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடைசியாக நடைபெற்ற 1௦ ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி 9 போட்டிகளில் வென்றுள்ளது

மலேரியா நோயினை அழிக்க, மரபணு மாற்றப்பட்ட கொசுவினை உற்பத்தி செய்ய நிதி அளிக்கும் பில் கேட்ஸ்:

  • பெண் கொசுவினால் உற்பத்தி ஆகும் மலேரியா நோயினை கட்டுப்படுத்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுவினை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் நிதி உதவி அளிக்கிறார்
  • லண்டனை சேர்ந்த “ஆக்சிடேக்” என்ற நிறுவனம் சார்பில், மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு,எ வை பெண் கொசுவுடன் கலக்கும் பொழுது, ஆண் கொசுவின் ஜீன் மாற்றம் பெண் கொசுவினில் முட்டை உருவாக்குவதை தடுத்து விடும்

புவிசார் குறியீட்டிற்கு “கோஹிதூர் மாங்கா”வை விண்ணப்பித்துள்ளது மேற்கு வங்கம்:

  • புவிசார் குறியீட்டிற்கு, “கோஹிதூர் மாங்கா” வகையை விண்ணப்பித்துள்ளது மேற்குவங்க அரசு
  • மேற்குவங்கத்தில் உள்ள பாரம்பரிய ராஜ வம்சத்து மக்களால் வளர்க்கப்படும் இந்த மாங்கா வகை, கடந்த பருவத்தில், ஒரு மாங்காய் 15௦௦ ரூபாய்க்கு விற்பனை ஆனது
  • வங்கத்தின் கடைசி நவாப்பான, சிராஜ்-உல்-தவுலா வழியில் வந்தவர்களே இந்த வகை மாம்பழங்களை வளர்கின்றனர்
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.