TNPSC Daily Current Affairs in Tamil 25 June 2018

TNPSC Daily Current Affairs in Tamil 25 June 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விருதுகள் 2018:

 

  • சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விழா, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடைபெற்றது (International Indian Film Academy (IIFA) awards 2018)
  • சிறந்த திரைப்பட விருது = தும்ஹரி சுலு
  • சிறந்த நடிகர் = இர்பான் கான்
  • சிறந்த நடிகை = மறைந்த நடிகை ஸ்ரீதேவி

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி:

 

  • இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, அமெரிக்காவின் சால்ட் லேக் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை 3-வது தகுதி சுற்று போட்டியில் தங்கம் வென்றார்
  • இதன் மூலம், இந்த ஆண்டு துருக்கியின் சாம்சன் நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார்
  • இவர் நான்கு முறை உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றவர்.

தூய விளையாட்டு = நேர்மையான முடிவு?” கருத்தரங்கம்:

  • நார்வே நாட்டில் ஒஸ்லோ நகரில் “ஊக்க மருந்து தடுப்பு விளையாட்டு கருத்தரங்கம்” நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு “தூய விளையாட்டு = நேர்மையான முடிவு?” எனப் பெயரிடப்பட்டது (2018 anti-doping sports conference ‘Clean Sport=Fair Outcome?)
  • விளையாட்டு உலகில் அதிகரித்து வரும் ஊக்க மருந்து பயன்பாட்டை முற்றிலும் அழிப்பது தொடர்பாக இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது

“கழிவறை இல்லை : பெண் இல்லை” தீர்மானம்:

  • ஹரியானா மாநிலத்தின் “கோடிக்கண் கிராம பஞ்சாயத்து” சார்பில் “கழிவறை இல்லை : பெண் இல்லை” என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • கழிவறை வசதி இல்லாத வீட்டிற்கு தங்கள் வீட்டு பெண்களை திருமணம் முடிப்பதில்லை என்ற தீர்மானத்தை கொண்டுவந்துள்ள இந்தியாவின் முதல் கிராமம் இந்த கிராமமாகும்
  • இதன் மூலம் தங்கள் பெண் பிள்ளைகளின் ஆரோக்கியம் மட்டுமின்றி, அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்

ஸ்ரீதரன் குழு:

  • “இந்தியாவின் மெட்ரோ மனிதர்” எனப்படும் “இ ஸ்ரீதரன்” அவர்கள் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றினை அமைத்துள்ளது. இக்குழு நாட்டில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களின் தரத்தினை உறுதி செய்தல், தேவையற்ற செலவுகளை குறைதல், “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தின் கீழ் அணைத்து பணிகளையும் கொண்டு வருதல்” போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்

குளிர்சாதனப் பெட்டியின் சராசரி வெப்பநிலையை 24 டிகிரியாக நிர்ணயம் செய்தது மத்திய அரசு:

  • குளிர்சாதனப் பெட்டியின் சராசரி வெப்பநிலை 24 டிகிரியாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் மின் உபயோகத்தை கட்டுப்படுத்தி, ஆற்றலை மிச்சம் செய்ய ஏதுவாக இந்த முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது.
  • அடுத்த நான்கு மாதங்களுக்கு பிறகு அணைத்து குளிர்சாதனப் பெட்டி விற்பனையில் இந்த விவரம் படமாக அச்சிடப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 2௦ பில்லியன் யூனிட் மின்சாரம் மிச்சமாகும் என கணக்கிடப்பபட்டுள்ளது

சர்வதேச மாலுமிகள் தினம், ஜூன் 25:

  • சர்வதேச மாலுமிகள் தினம், ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = SEAFARERS WELLBEING

ஸ்வச் சர்வேக்ஷன்  – தூய்மை இந்தியா நகர விருதுகள் 2018:

    • இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியல் (1 லட்சத்திற்கு மேல் மக்கள்)

    1.இந்தூர்

    2.போபால்

    3.சண்டிகர்

    13.திருச்சி முனிசிபல் கார்பரேசன்

    16.கோயம்பத்தூர் முனிசிபல் கார்பரேசன்

    51.ஈரோடு

    1௦௦.சென்னை நகரம்

    • 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள் – தெற்கு மண்டலம் தரவரிசை

     

    1.சித்திபெட்டை

    31.பள்ளிபாளையம்

    1. அரியலூர்
    2. குளித்தலை
    3. ஜெயங்கொண்டம்
    4. அறந்தாங்கி
    • கண்டோன்மெண்ட் வாரியம் – தரவரிசை
      1. டெல்லி கண்டோன்மெண்ட்

    3௦. நீலகிரி வெல்லிங்டன் கண்டோன்மெண்ட் வாரியம்

    1. சென்னை பரங்கிமலை கண்டோன்மெண்ட்
    • தூய்மையான மாநிலங்கள் தரவரிசை
      1. ஜார்கண்டு
      2. மகாராஸ்டிரா
      3. சத்தீஸ்கர்
      4. தமிழகம்

    3௦. புதுச்சேரி

    • தூய்மை நகா விருதுகள்
      1. இந்தியாவின் தூய்மையான நகரமாக (INDIA’S CLEANEST CITY – NO. 1) மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்நகரம் முதல் இடத்தில் உள்ளது
      2. 2-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 2) = மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரம்
      3. 3-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 3) = சண்டிகர் நகரம்
      4. 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்த நகரம் (INDIA’S CLEANEST BIG CITY) = ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரம்
      5. 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவின் வேகமாக முன்னேறும் நகரம் (INDIA’S FASTEST MOVER BIG CITY) = உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரம். சென்ற ஆண்டு ஓடு மொத்த அளவில் 351-வது இடத்தில இருந்த இந்நகரம் இந்த ஆண்டு 36-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
      6. 1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பொதுமக்களின் கருத்து படி சிறந்த நகரம் (INDIA’S BEST CITY IN CITIZEN’S FEEDBACK) = ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா
      7. புதுமையான முறையில் திட்டங்களை செயல்படுத்தி தூய்மையை கடைபிடித்த நகரம் (INDIA’S BEST CITY IN INNOVATION AND BEST PRACTICES) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரம்
      8. திடக்கழிவு மேலாண்மையின் சிறந்து விளங்கிய தூய்மை நகரம் (INDIA’S BEST CITY IN SOLID WASTE MANAGEMENT) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை நகரம்
      9. தூய்மையான நடுத்தர நகரம் (INDIA’S CLEANEST MEDIUM CITY) = கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரம்
      10. இந்தியாவின் வேகமாக முன்னேறும் நடுத்தர நகரம் (INDIA’S FASTEST MOVER MEDIUM CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவண்டி
      11. இந்தியாவின் தூய்மையான சிறிய நகரம் (INDIA’S CLEANEST SMALL CITY) = புது தில்லி முனிசிபல் கவுன்சில்
      12. இந்தியாவின் வேகமாக முன்னேறும் சிறிய நகரம் (INDIA’S FASTEST MOVER SMALL CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் புசாவால்
      13. தூய்மையான மாநில தலைநகரம் (CLEANEST STATE CAPITAL) = மகாராஷ்டிரா மாநிலத்தின் கிரேட்டர் மும்பை
      14. வேகமாக முன்னேறும் தூய்மையான மாநில தலைநகரம் (FASTEST MOVER STATE CAPITAL) = ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர்

பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் ஓபன்:

  • பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பிரெஞ்ச் பார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றார்
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செபாஸ்டியன் வேட்டல் 5-ம் இடத்தை பிடித்தார்

உலான்பதார் கோப்பை 2018 (குத்துச்சண்டை):

  • மங்கோலியாவில் நடைபெற்ற உலான்பதார் கோப்பை போட்டிகளின் குத்துச்சண்டை பிரிவில், இந்தியாவின் சார்பில் 9 பதக்கங்கள் வெல்லப்பட்டன
  • இந்திய வீரர் மந்தீப் ஜங்ரா 69 கிலோ எடைபிரிவில் தங்கம் வென்றார்
  • மேலும் நான்கு வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கம் குத்துச்சண்டை பிரிவில், இந்தியா வென்றது

இந்தியாவின் முதல் ரோபோடிக் தொலைநோக்கி:

  • இந்தியாவின் முதல் ரோபோடிக் தொலைநோக்கி, ஜம்மு காஸ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள ஹான்லே என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது
  • இந்த வசதியுடைய இடத்திற்கு “GROWTH INDIA” (GROWTH = Global Relay of Observatories Watching Transients Happen) எனப் பெயரிடப்பட்டுள்ளது

ஸ்மார்ட் இந்திய ஹேக்கத்தான் 2018:

  • ராஜஸ்தான் மாநிலத்தின் பிலானி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “ஸ்மார்ட் இந்திய ஹேக்கதான் 2018”, தொழில்நுட்ப போட்டியில், தமிழகத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
  • “ஸ்மார்ட் தொடர்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற பிரிவில், தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநர்:

  • ஐ.டி.பி.ஐ வங்கியின் முதன்மை அதிகாரியாக இருந்த, மகேஷ் குமார் ஜெயின் இந்திய ரிசர்வ் வங்கியின் நான்காவது துணை ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது
  • அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியில் நீடிப்பார்

15௦ மில்லியன் ஆண்டுகள் பழமை மிக்க ஆமை படிவம் சீனாவில் கண்டுபிடிப்பு:

  • சீனாவின் சோங்கிங் பகுதியில் 15௦ மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமை படிவங்கள் கிடைத்துள்ளன
  • இது டைனோசர் வாழ்ந்த காலத்தை சேர்ந்த ஆமை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

உலகின் முதல் இயற்கை பொருளை வலியுறுத்தும் காமிக்ஸ் புத்தகம்:

  • உலக வனவாழ்வு நிதியத்தின் இந்திய பிரிவின் சார்பில், உலகின் முதல் இயற்கை கருப்பொருளை கொண்டுள்ள காமிக்ஸ் புத்தகம் வெளியிடப் பட்டுள்ளது.
  • இதன் ஆசிரியர்கள் = ரோகன் சக்கரவர்த்தி மற்றும் பிஜல் வச்ச்சரஜானி
  • புத்தகத்தின் பெயர் = The Great Indian Nature Trail with Uncle Bikky
  • இதன் கதாப்பாத்திரங்கள் = பிக்கி (மாமா), சுன்முன் (சிறுவன்), டுக்கு (நாய்)

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.