TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 27.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 27.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

“சிறையில் உள்ள பெண்கள்” அறிக்கை:

 • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், “சிறையில் உள்ள பெண்கள்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது
 • சிறையில் பெண் குற்றவாளிகள் படும் இன்னல்கள், அவர்களுடன் உள்ள குழந்தைகளின் நிலை போன்றவற்றை ஆராய்ந்து அவற்றை தீர்க்க ஏதுவாக 134 தீர்வுகளை கொண்ட அறிக்கையினை வெளியிட்டது
 • கற்பாக உள்ள குற்றவாளிகளுக்கு தனி அறை, சட்ட ஆலோசனை உதவிகள் போன்ற பல்வேறு பரிந்துரைகள் இதில் கூறப்பட்டுள்ளன

“ரிம்பக்” – உலகின் மிகப்பெரிய கடல் பயிற்சி:

 • உலகின் மிகப்பெரிய கடல்சார் போர் பயிற்சி நிகழ்ச்சியான “ரிம்பக்” (RIMPAC = RIM OF THE PACIFIC), மேற்கு பசிபிக் பெருங்கடலின் ஹவாய் தீவுகள் அருகே நடைபெற்றது
 • சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த போர் பயிற்சி நிகழ்ச்சியில் இந்தியா உட்பட 26 நாடுகளை கடற்படை வீரர்கள் பங்கு கொள்கின்றனர்
 • ஹவாய் தீவுகளில் உள்ள “முத்து துறைமுகம்” (PEARL HARBOUR) அருகே இந்நிகழச்சி நடைபெறுகிறது

பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மாற்றாக உயர் கல்விக் கமிசன்:

 • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், “பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு” பதிலாக “இந்திய உயர்க்கல்வி கமிசன்” அமைக்க பரிந்துரை செய்துள்ளது
 • வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும்

பொது சுகாதார அவசரநிலை பிரகடனம்:

 • பப்புவா நியு கினியா நாட்டில், போலியோ நோய் பாதிப்பினை தொடர்ந்து அங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு “பொது சுகாதார அவசரநிலை” (PUBLIC HEALTH EMERGENCY) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
 • 2௦௦௦ம் ஆண்டு பப்புவா நியு கினியா போலியோ பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக கால்நடை ஏற்றுமதி செய்யும் இந்தியா:

 • இந்தியாவின் நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியாவின் ஷார்ஜா நகருக்கு விமானம் மூலம், ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது
 • அடுத்த 3 மாதங்களில் சுமார் 1௦௦௦௦௦ ஆடுகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது

ஐக்கிய நாடுகள் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவன தினம், ஜூன் 27:

 • ஆண்டு தோறும் ஜூன் 27ம் தேதி, “ஐக்கிய நாடுகள் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவன தினம்” (UNITED NATIONS MICRO, SMALL AND MEDIUM ENTERPRISE DAY, 2018) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
 • இத்தினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி மாளிகையில் நிறுவனங்களுக்கான “உத்யம் சங்கமம்” கருத்தரங்கை துவக்கி வைத்தார்

“உத்யம் சங்கம் 2018”:

 • ஐக்கிய நாடுகளின் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவ தினத்தை சிறப்பிக்கும் வகையில் , இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் புது தில்லியில் “உத்யம் சங்கம் 2018” என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

கூடுதல் நேர வேலை படி ரத்து:

 • மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7-வது நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் “கூடுதல்நேர வேலைக்கான” (OVERTIME ALLOWANCE) படியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது
 • தொழிற்சாலை ஊழியர்களை தவிர மற்ற அணைத்து பணியாளர்களுக்கும் கூடுதல் நேர வேலைப் படி ரத்து செய்யப்பட்டது

இந்தியாவில் “இகியா” நிறுவனத்தின் முதல் உணவகம்:

 • உலகின் மிகப்பெரிய வீட்டுசாமான் விற்பனை நிறுவனமான, ஸ்வீடனின் “இகியா” நிறுவனம் இந்தியாவின் தந்து முதல் உணவகத்தை தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் திறக்க உள்ளது.
 • 37௦௦௦ சதுர அடியில் 1௦௦௦ பேர் அமர்ந்து உண்ணக்கூடிய உணவகத்தை திறக்க உள்ளது

அவசரகால பெட்ரோலிய இருப்பு கிடங்கு:

 • மத்திய அரசு இந்தியாவில் கூடுதலாக இரண்டு அவசரகால பெட்ரோலிய கிடங்கினை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது
 • கர்நாடக மாநிலத்தின் படூர் என்னுமிடத்தில் ஒரு கிடங்கு
 • ஓடிஸா மாநிலத்தின் சில்வர்க்ஹோல் என்னுமிடத்தில் மற்றொரு கிடங்கு

2018ம் ஆண்டில் 1௦௦ மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை:

 • அமெரிக்காவை சேர்ந்த “நோஹா லைல்ஸ்” என்பவர் லோவா நகரில் நடைபெற்ற அமெரிக்க தேசிய தடகள போட்டியின் 1௦௦ மீட்டர் தடகள போட்டியில் 9.88 வினாடிகளில் ஓடி புதிய சாதனை படைத்தார்

ஹரியான மாநில அரசு அலுவலகங்களில் எல்.இ.டி விளக்குகள் கட்டாயம்:

 • ஹரியானா மாநில முதல்வர், அம்மாநில அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் சோடியம், ஹேலஜன் மற்றும் டியூப்லைட் போன்றவற்றை வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் எல்.இ.டி விளக்குகளாக மாற்றிட உத்தரவிட்டுள்ளார்

ரயில்களின் முன் செல்பி எடுப்பவர்களுக்கு அபராத தண்டனை:

 • தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில் நிலையங்களில் ரயில்கள் முன் செல்பி புகைப்படம் எடுப்பது, ரயிலின் படிகட்டுகளில் தொங்கிய படி செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு ரூ.2௦௦௦ அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது

மிதக்கும் சூரிய ஆற்றல் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ள மகாராஸ்டிரா:

 • மகாராஸ்டிரா மாநில அரசு, அம்மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணையில், 1௦௦௦ மெகாவாட் உற்பத்தி கொண்ட சூரிய ஆற்றல் தகடுகளின் அணையின் நீர் பரப்பு மீது பரப்பி ஆற்றல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது
 • இதற்கான வழிமுறைகளை ஆராய குழு ஒன்றினை அம்மாநில அரசு நியமித்துள்ளது

சர்வதேச துபாக்கி சுடுதல் போட்டியின் ஜூனியர் பிரிவில் “சவுரப் சவுத்திரி” புதிய உலக சாதனை:

 • 16 வயது நிரம்பிய இந்திய துப்பாக்கி சுடும் வீரரான, “சவுரப் சவுத்திரி” ஜெர்மனியின் சுஹல் நகரில் நடைபெற்ற “சர்வதேச துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பை” போட்டியில் 1௦மீ பிரிவில், மொத்தம் 243.7 புள்ளிகளை பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்

முதல் “உலக சகிப்புத்தன்மை மாநாடு”:

 • வருகின்ற நவம்பர் மாதம், “உலகின் முதல் சகிப்புத்தன்மை மாநாடு” (WORLD TOLERANCE SUMMIT), ஐக்கிய அரேபிய எமிரகத்தில் நடைபெற உள்ளது
 • இந்த மாநாட்டிற்கான கரு = Prospering From Pluralism: Embracing Diversity through Innovation and Collaboration

ஆசிய கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் 4-வது ஆண்டுக் கூட்டம்:

 • முதல் முறையாக ஆசிய கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் ஆண்டுக் கூட்டம் (4-வது ஆண்டுக் கூட்டம்), 2௦19ம் ஆண்டு ஜூலை மாதம் லக்சம்பேர்க் நகரில் நடைபெற உள்ளது (AIIB = ASIAN INFRASTRUCTURE AND INVESTMENT BANK)
  1. முதல் கூட்டம் = பீஜிங், சீனா (2௦16)
  2. இரண்டாவது கூட்டம் = ஜேஜூ, தென்கொரியா (2௦17)
  3. 3-வது கூட்டம் = மும்பை, இந்தியா (2018)
  4. 4-வது கூட்டம் = லக்சம்பேர்க் (2௦19)

மனித உரிமைகள் தொடர்பான புத்தகத்தை துணைக் குடியரசுத்தலைவர் அறிமுகம் செய்தார்:

 • ஆர்.பி.தொகாலியா என்பவர் எழுதிய, “Human Rights, Values and Cultural Ethos” என்ற புத்தகத்தை துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு புது தில்லியில் அறிமுகம் செய்து வைத்தார்

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL, 26 JUNE 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL, 25 JUNE 2018

Leave a Comment