TNPSC Daily Current Affairs in Tamil – 29.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 29.06.2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL WILL BE UPLOADED HERE DAILY BY TNPSC WINNERS FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP2, 4 ETC.,

தேசிய புள்ளியியல் தினம், ஜூன் 29:

  • தேசிய புள்ளியியல் தினம், நாடு முழுவதும் ஜூன் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சமூக பொருளாதார வளர்ச்சிக்கு புள்ளியியலின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = QUALITY ASSURANCE IN OFFICIAL STATISTICS
  • இத்தினம், “இந்திய புள்ளியியலின் தந்தை” எனப்படும் பேராசிரியர் பிரசந்தா சந்திர மகன்லோபிஸ் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 29ஐ சிறப்பிக்கும் வகையில், தேசிய புள்ளியியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டு அவரின் 126-வது பிறந்த தினமாகும்

சூரிய சக்கர இயக்கம்:

  • “சூரிய சக்கர இயக்கம்” என்ற புதிய திட்டத்தை புது தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார்
  • இந்த இயக்கம் மூலம் ஊரகப் பகுதியில் வேலை வாய்ப்பினை பெருக்குவது, பசுமை பொருளாதாரத்தை முன்னெடுப்பது என்பது இதன் முக்கிய அம்சமாகும்
  • 5௦ பிரிவுகளின் கீழ் பல்வேறு கைவினை, சிறு தொழில்களை மேம்படுத்துதல் இதன் குறிக்கோளாகும்
  • நாடு முழுவதும் 5 கோடி பெண்களை இந்த இயக்கத்தின் கீழ் இணைக்கப்பட்டு, அவர்களின் பொருளாதாரத்திற்கு வழிவகை செய்யப்படும்
  • முதல் 2 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கம்:

  • பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கத்தின் கீழ், பிரசவத்தின் பொது தாய்மார்கள் இறப்பினை பெருமளவு குறைத்த மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டது
  • 2௦11ம் ஆண்டு தாய்மார்கள் இறப்பு விகிதம் 221 ஆக இருந்த நிலையில், தற்போது 173 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 22% குறைப்பாகும்.

தேசிய முதியவர்கள் மையம்:

  • தேசிய முதியவர்கள் மையம்” என்றார் அபெயரில், புது தில்லியில் உள்ள எயிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், திறக்க பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்
  • வயது முதிர்ந்த மூத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி மையத்தினை பிரதமர் துவக்கி வைத்தார்
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL

உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு:

  • “உலகளாவிய ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு”, வெளியிடப்பட்டுள்ளது. 1௦௦ நாடுகளை கொண்ட இப்பட்டியலில் இந்தியா 35-வது இடத்தை பிடித்துள்ளது
  • முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் = ஐக்கிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமேரிக்கா
  • 2௦16ம் ஆண்டு 36-வது இடத்தில இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச வெப்பமண்டல தினம்:

  • “சர்வதேச வெப்பமண்டல தினம், உலகம் முழுவதும் ஆண்டு தோறும் ஜூன் 29ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • பூமத்தியரேகைப் பகுதியில், ஏற்படும் பருவநிலை மாற்றங்களை பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்

இதய நோய் பாதிப்பு அறிக்கை:

  • “இதய நோய் பாதிப்பு அறிக்கை” சமிபத்தில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்ட மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது
    1. ஊரகப் பகுதியில் அதிக இதய நோய் பாதிப்பு உள்ள மாநிலம் = நாகாலாந்து
    2. நகரப் பகுதியில் அதிக இதய நோய் பாதிப்பு உள்ள மாநிலம் = கேரளா
    3. இதய நோய் பாதிப்பு உள்ளோர் குறைவாக உள்ள மாநிலம் = ஜார்கண்டு
    4. அதிகளவு இதய நோய் பாதிப்பு உள்ள பெண்கள் கொண்ட மாநிலம் = கோவா
    5. அதிகளவு இதய நோய் பாதிப்பு உள்ள ஆண்கள் கொண்ட மாநிலம் = நாகாலாந்து
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.