TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL – 5TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL – 05.07.2018

 

TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSC WINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR COMPETITIVE EXAMS LIKE TNPSC GROUP 2, 2A, 4 ETC.,

 

இந்திய கட்டணக் கவுன்சிலின் புதிய தலைவர்:

  • இந்திய கட்டணக் கவுன்சிலின் (PAYMENTS COUNCIL OF INDIA) புதிய தலைவராக “விஸ்வாஸ் படேல்” அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • கட்டணக் கவுன்சிலின் துணைத் தலைவராக, “லோனே ஆண்டனி” தேர்வு செய்யப்பட்டுள்ளார்

துணை நிலை ஆளுநர்களுக்கு சுதந்திரமான அதிகாரங்கள் இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு:

  • துணை நிலை ஆளுநர்களுக்கு தனிப்பட்ட சுதத்திரமான அதிகாரங்கள் இல்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
  • அமைச்சரவை கூடத்தின் முடிவின் படியே துணை நிலை ஆளுநர்கள் செயல்பட முடியும் எனத் தெரிவித்துள்ளது
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது

மத்தியப் பிரதேச அரசின் “சம்பல்” திட்டம்:

  • மத்தியப் பிரதேச மாநில அரசு, அம்மாநிலத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கும் “சம்பல்” என்ற திட்டத்தை அறிவித்துள்ளது (MP GOVERNMENT LAUNCHES SUBSIDISED POWER SCHEME “SAMBAL”)
  • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு 2௦௦ ரூபாய்க்கு மேல் உள்ள கட்டணத்தை அரசே செலுத்தும்

“இந்திய விளையாட்டு ஆணையம்”  இனி “விளையாட்டு இந்தியா” எனப் பெயர் மாற்றம்:

  • 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் “இந்திய விளையாட்டு ஆணையம்” இனி “விளையாட்டு இந்தியா” எனப் பெயர் மாற்றம் செய்து அழைக்கபடும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் அறிவித்துள்ளார் (SPORTS AUTHORITY OF INDIA HAS BEEN RENAMED TO “SPORTS INDIA”)
  • விளையாட்டு ஆணையத்தின் 5௦ பொதுக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது

உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம்:

  • உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் துவக்கப்பட்டுள்ளது (WORLD’S FIRST DIGITAL ART MUSEUM)
  • டடிஜிட்டல் முறையில் வடிவமைக்கபடுள்ள வடிவங்கள் மற்றும் ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகமையின் புதிய தலைவர்:

  • அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகமையின் புதிய தலைவராக, வெள்ளை மாளிகையின் மூத்த வழக்கறிஞரான இந்திய வம்சாவழியை சேர்ந்த “உத்தம் தில்லான்” அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (UTTAM DHILLON, NEW HEAD OF DRUG ENFORCEMENT AGENCY IN US)
  • இதற்கு முன்னர் 3௦ ஆண்டுகளாக இப்பதவியில் இருந்த ராபர்ட் பேட்டர்சன் ஓய்வு பெற்றதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்

இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி ஆலை:

  • இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி ஆலை (INDIA’S FIRST E-WASTE RECYCLING PLANT) பெங்களூரு நகரில் அமைக்கப்படும் என மத்திய இரசாயணத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
  • தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆலை துவக்கப்பட உள்ளது
  • உலகின் மின்-கழிவுகள் அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில உள்ளது குறிப்பிடத்தக்கது
  • இந்தியாவில் அதிக மின்-கழிவுகள் உற்பத்தி ஆகும் முதல் 3 நகரங்கள் = மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு

டி-2௦ போட்டியில் ஆரோன் பிஞ்ச் புதிய உலக சாதனை:

  • சர்வதேச டி-2௦ போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 172 ரன்களை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார் (AUSTRALIAN CAPTAIN AARON FINCH SLAMMED 172(76) AGAINST ZIMBABWE TO REGISTER THE HIGHEST-EVER INDIVIDUAL SCORE IN T20IS, OVERTAKING HIS OWN RECORD OF 156 RUNS)
  • டி-2௦ போட்டியில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன் இதுவாகும்
  • இதற்கு முன்னர் இவரே டி-2௦ போட்டியில் அடித்த 156 ரன்களே சாதனையாக இருந்தது

உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச கூட்டமைப்பு கூட்டம்:

  • “உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச கூட்டமைப்பு” கூட்டம், வருகின்ற அக்டோபர் மாதம் இந்தியாவின் சார்பில் நவி மும்பை நகரில் நடைபெற உள்ளது (19TH EDITION OF THE INTERNATIONAL UNION OF FOOD SCIENCE AND TECHNOLOGY (IUFOST))
  • இந்தக் கூட்டத்திற்கான கரு = 25 BILLION MEALS A DAY BY 2025 WITH HEALTHY, NUTRITIOUS, SAFE AND DIVERSE FOODS
  • இதி 19-வது சர்வதேசக் கூட்டமாகும். இந்திய தேசிய அறிவியல் அகடெமி சார்பில் இந்தக் கூட்டம் நடைபெறும்.

ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்:

  • ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்ற “ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் கார்” பந்தய போட்டியில் ரெட் புல் அணியின் “மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்” வெற்றி பெற்றார் (RED BULL’S MAX VERSTAPPEN WON THE AUSTRIAN GRAND PRIX 2018 TITLE IN AUSTRIA)
  • பிரபல செபாஸ்டியன் வேட்டல் இப்போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்

“கடல்சார் மீன் – இந்தியக் கடலிலே மீன் வளர்ப்பு” கூட்டம்:

  • கடல்சார் மீன்வளத் துறையில், வணிகத்தை பெருக்க ஏதுவாக, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் “கடல்சார் மீன் – இந்தியக் கடலிலே மீன் வளர்ப்பு” (“MARINE FISHERIES-MARICULTURE IN INDIA” IN RAMESWARAM, TAMIL NADU) கூட்டம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

மார்வார் ராஜமாதா கிருஷ்ண குமாரி:

  • மார்வார் ராஜவம்சத்தை சேர்ந்த ராஜாமாதாவானா கிருஷ்ண குமாரி 92-வயதில் ஜோத்பூர் நகரில் உயிர் நீத்தார் (MARWAR RAJMATA KRISHNA KUMARI PASSES AWAY AGED 92)
  • குஜராத்தில் ராஜ வம்சத்தில் பிறந்த இவர், 1943-ம் ஆண்டு ஜோத்பூராய் ஆண்ட மார்வார் வம்ச ஹன்வந்த் சிங்கை மணந்தார்

அண்டார்டிகா பணி பாறைகளை கட்டி இழுத்து வந்து குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஐக்கிய அரேபிய எமிரகம்:

  • ஐக்கிய அரேபிய எமிரகதின் தேசிய ஆலோசனைக் குழு, அண்டார்டிக் கண்டத்தில் இருந்து 2 பனிக் பாறைகளை கட்டி இழுத்து வந்து, ஐக்கிய அரேபிய மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது (UAE PLANS TO TOW ICEBERGS FROM ANTARCTICA FOR DRINKING WATER)
  • 5௦ முதல் 6௦ மில்லியன் அமெரிக்க சாளர்கள் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம் வரும் 2௦19ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வர உள்ளது.
  • மேலும் கொண்டு வரும் பொழுது பனிப் பாறைகள் உருகாமல் இருக்க சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது

பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கோல் அடித்து பிரேசில் புதிய உலக சாதனை:

  • பிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடரில் அதிக கோல் அடித்த அணியாக பிரேசில் உயர்ந்துள்ளது (BRAZIL BECOME HIGHEST SCORING TEAM IN FIFA WORLD CUP HISTORY)
  • தற்போது ரசியாவில் நடைபெற்று வரும் பிபா கால்பந்து உலகக் கோப்பையின் 16-வது ஆட்டத்தில் பிரேசில் அணி 2-௦ என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தியது.
  • இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கொள் அடித்து இருந்த ஜெர்மனியின் 226 கோள்களின் எண்ணிக்கை தாண்டி 228 கோல்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தது பிரேசில்

ராஜஸ்தானில் பள்ளி மாணவர்களுக்கு பால்:

  • ராஜஸ்தான் மாநில அரசு, அம்மாநில பள்ளி மாணவர்கள் 62 லட்சம் பேருக்கு பால் வழங்கும் “அன்னபூரனா தூத் யோஜனா” திட்டத்தை ஜெய்ப்பூரில் துவக்கி வைத்தார் (RAJASTHAN STARTED SCHEME TO PROVIDE MILK TO 62 LAKH SCHOOL STUDENTS)
  • 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை 15௦ மில்லி என்ற அளவிலும், 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு 2௦௦ மில்லி என்ற அளவில் வாரத்திற்கு 3 முறை வழங்கவும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

குயிட்டிட்ச் உலகக் கோப்பை:

  • நான்காவது குயிட்டிட்ச் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி, பெல்ஜியம் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது (US DEFEAT BELGIUM TO WIN QUIDDITCH WORLD CUP FOR THIRD TIME)
  • உலகப் புகழ் பெற்ற ஜே.கே.ரவுலிங் அவர்களின் “ஹாரி பாட்டர்” நாவலில் வரும் விளையாட்டுடன் தொடர்புடையது இந்த குயிட்டிட்ச் விளையாட்டு
  • வீரர்கள் இதில் துடைப்பக் குச்சியை தங்களின் கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டே விளையாட வேண்டும்

 

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.