TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL 6TH JULY

TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL 6TH JULY

 

TNPSC DAILY CURRENT AFFAIRS TAMIL WILL BE UPLOADED HERE BY TNPSCWINNERS, FOR THOSE WHO ARE PREPARING FOR VARIOUS COMPETITIVE EXAMS LIKE TNPSC, SSC ETC.,

 

சவுராஷ்டிரா படேல் கலாசார சமாஜ் 2018:

  • சவுராஷ்டிரா படேல் கலாசார சமாஜ் 2018ம் ஆண்டு, 8-வது சர்வதேச மாநாடு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துவங்கியது (8TH INTERNATIONAL CONVENTION OF SAURASHTRA PATEL CULTURAL SAMAJ 2018)
  • இம்மாநாட்டை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார்.
  • அங்கு வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம், ஆண்டிற்கு 5 குடும்பங்கள் இந்தியாவிற்கு வந்து பாரத் தர்சன் நிகழ்விற்காக வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

“ஜி.எஸ்.டி வெரிபை” மொபைல் செயலி:

  • நுகர்வோர்களின் விவரங்கள் மற்றும் விருப்பங்களை பாதுகாக்கும் விதமாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் துறையின் சார்பில் “ஜி.எஸ்.டி வெரிபை” மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது (CENTRAL BOARD OF INDIRECT TAXES AND CUSTOMS (CBIC) HAS LAUNCHED A MOBILE APP ‘GST VERIFY’ TO PROTECT INTEREST OF CONSUMERS)
  • இந்த மொபைல் செயலி, நுகர்வோர்களின் ஜி.எஸ்.டி தகவல்களை பெற்று அது சரியாக உள்ளதா அல்லது இல்லையா எனத் தெரிவிக்கும்

விளையாட்டிற்கான வடிவமைப்பு பல்கலைக்கழகம்:

  • ஆந்திர மாநில அரசு, யுனஸ்கோ அமைப்புடன் சேர்ந்து “விளையாட்டிற்கான வடிவமைப்பு பல்கலைக்கழகம்” (DESIGN UNIVERSITY FOR GAMING) அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது
  • இதன் படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் மொபைல் மற்றும் வீடியோ கேம்களில் விளையாடுவதற்கான டிஜிட்டல் வடிவமைப்பு பல்கலைக்கழகம் திறக்கப்பட உள்ளது.

மின்-பயணச்சீட்டு பெரும் இந்தியாவின் முதல் மத்திய பாராளுமன்ற படை:

  • ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பின் சார்பில் வழங்கப்படும் “ரயில்வே வாரன்ட் பயணச்சீட்டு” வசதியை பெரும் இந்தியாவின் முதல் மத்திய பாராளுமன்றப் படையாக “தேசிய பாதுகாப்பு படை” உள்ளது (NATIONAL SECURITY GUARD (NSG) WILL BE THE FIRST CENTRAL PARAMILITARY FORCE TO OPT FOR E-TICKETING INSTEAD OF THE RAILWAY WARRANT)
  • இதற்கான ஒப்பந்தம் இரு அமைப்புகள் இடையே புதுதில்லியில் கையெழுத்தானது
  • “ரயில்வே வாரன்ட்” என்பது ரயிவே நிறுவனத்தால் வழங்கப்படும் பயண ரசிது ஆகும். குறைவான தொகையில் மத்திய அரசு படை வீரர்கள் பயணிக்கும் வகையில் சலுகை விலையில் வழங்கப்படும் பயணச்சீட்டு ஆகும்.

மட்டல ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்:

  • இலங்கையின் ஹம்பன்தோட்டா “மட்டல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை” இந்தியாவின் சார்பில் இனி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ளது (INDIA WILL OPERATE THE MATTALA RAJAPAKSA INTERNATIONAL AIRPORT AS A SRI LANKA-INDIA JOINT VENTURE IN HAMBANTOTA)
  • இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இதனை மேம்படுத்த இந்தியா சார்பில் உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
  • “உலகின் காலியான விமான நிலையம்” (“WORLD’S EMPTIEST AIRPORT”) எனப் பெயர்பெற்ற விமான நிலையம் இது. ஹம்பன்தோட்டா துறைமுகம் அருகே உள்ளது இந்த விமான நிலையம். இந்த துறைமுகத்தை சீனாவில் கட்டுபாட்டில் இலங்கை விடுலல்து குறிப்பிடத்தக்கது.

விலங்கு உலகை சார்ந்த அணைத்து உயிரினமும் வாழும் மனித இனமாகும் – உத்திரகாண்டு நீதிமன்றம் தீர்ப்பு:

  • உத்திரகாண்டு நீதிமன்றம், “விலங்கு உலகை சேர்ந்த அணைத்து உயிரினமும் வாழும் மனித இனமாகத் கருதப்படும்” என பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது (UTTARAKHAND HIGH COURT HAS RECENTLY DECLARED THE “ENTIRE ANIMAL KINGDOM INCLUDING AVIAN AND AQUATIC” AS LEGAL ENTITIES WITH A DISTINCT PERSONA AND CORRESPONDING RIGHTS, DUTIES AND LIABILITIES OF A LIVING PERSON)
  • உத்திரகாண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் “ராஜீவ் ஷர்மா மற்றும் லோக்பால் சிங்” ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
  • “பறவை இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களும்”இதில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ட்பிலிசி கிராண்ட் பிரிக்ஸ்:

  • ஜியார்ஜியாவில் நடைபெற்று வந்த 2018ம் ஆண்டிற்கான ட்பிலிசி கிராண்ட் பிரிக்ஸ் மல்யுத்த போட்டியில், 65 கிலோ எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் “பஜ்ரங் பூனியா” ஈரான் நாட்டை சேர்ந்த மேக்ரான் நசிரி என்பவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார் (BAJRANG PUNIA FROM INDIA HAS CLINCHED GOLD IN THE 65KG CATEGORY AT THE 2018 TBILISI GRAND PRIX TOURNAMENT)
  • இவர் 2018ம் ஆண்டின் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றவர் ஆவார்.
  • 86 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் ‘தீபக் பூனியா” வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்

47 ஆண்டுகளுக்கு பிறகு நாக்பூர் நகரில் நடைபெறும் மகராஷ்டிரா மாநில சட்டமன்றம்:

  • மகராஷ்டிரா மாநிலத்தின் 2-வது தலைநகரான “நாக்பூர்” நகரில் 47 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது (NAGPUR, THE SECOND CAPITAL OF MAHARASHTRA, IS SET TO HOST THE MONSOON SESSION OF THE STATE LEGISLATURE TODAY AFTER A GAP OF 47 YEARS)
  • நாடு சூத்திரம் அடைந்த பிறகு, மகராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்றக் கூட்டம் நான்காவது முறையாக மும்பை நகருக்கு வெளியே நாக்பூர் நகரில் நடைபெற உள்ளது

காதி மற்றும் கிராம தொழிலக கமிசனின் “கிமிஸ்” திட்டம்:

  • மத்திய அரசின் “காதி மற்றும் கிராம தொழிலக கமிசன்” நிறுவனம் சார்பில் “கிமிஸ்” என்ற புதிய ஒற்றை ஒருங்கிணைந்த மின்-வணிக தளத் திட்டம் புது தில்லியில் அறிமுகம் செய்யப்பட்டது (KHADI AND VILLAGE INDUSTRIES COMMISSION (KVIC) has launched its in-house developed & single integrated e-marketing platform named KHADI INSTITUTION MANAGEMENT AND INFORMATION SYSTEM (KIMIS))
  • காதி பொருட்கள் விற்பனை தொடர்பாக இந்த தளத்தின் மூலம் நாடு முழுவதும் எங்கிருந்தும் பொருட்களை வாங்கவே, விற்கவே முடியும்

உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம், ஜூலை 2:

  • உலக விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம் (WORLD SPORTS JOURNALISTS DAY (WSJD)), ஜூலை 2-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது
  • விளையாட்டு துறையை சார்ந்த பத்திரிக்கையாளர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • 1924ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் பொழுது, ஜூலை 2-ம் தேதி “சர்வதேச விளையாட்டு பத்திரிக்கை கூட்டமைப்பு” (International Sports Press Association (ISPA)) அமைப்பு துவக்கப்பட்டதன் நினைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது
  • நட்பு நிகழ்வுகளை மேலும் அறிய 

ஸ்பெயின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை:

  • ஜெர்மனியை சேர்ந்த “ஏஞ்செலா போனஸ்” என்ற திருநங்கை, அந்நாட்டின் ஸ்பெயின் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை இவராவார் (Angela Ponce from Seville has created by becoming the first-ever transgender woman to be crowned Miss Universe Spain)
  • இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டின் நடைபெற உள்ள “பிரபஞ்ச அழகி” போட்டியில் ஸ்பெயின் நாட்டின் சார்பில் இவர் பங்கு பெற உள்ளார்

“பந்தாரிச்சி வாரி” புனிதப் பயணம்:

  • மகராஷ்டிரா மாநிலத்தின் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பயண விழாவான “பந்தாரிச்சி வாரி” துவங்கியது (“PANDHARICHI WARI” IS THE MOST IMPORTANT PILGRIMAGE OF MAHARASHTRA)
  • “பந்தார்பூர்” என்னும் இடத்தில உள்ள “விட்டாளா சுவாமியின்” அருளை பெற இந்த புனிதப்பயன நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஹைத்ராபாத் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்:

  • ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பாட்னா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, “எல். நரசிம்ம ரெட்டி” நியமிக்கப்பட்டுள்ளார் (JUSTICE L NARASIMHA REDDY, THE FORMER CHIEF JUSTICE OF THE PATNA HIGH COURT, HAS BEEN APPOINTED AS CHANCELLOR OF THE UNIVERSITY OF HYDERABAD)
  • இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்

கேரளா அரசின் மாநிலப் பாடலை உருவாக்க தேடுதல் குழு அமைப்பு:

  • கேரளா மாநில அரசு, அம்மாநிலத்திற்கு என்று தனிப் பாடலை உருவாக்க, அம்மாநில கலாச்சார துரை செயலாளர் ராணி ஜார்ஜ் தலைமையில் “தேடுதல் குழுவினை” அமைத்துள்ளது (KERALA GOVERNMENT HAS CONSTITUTED AN EXPERT PANEL COMPRISING EMINENT WRITERS AND LANGUAGE EXPERTS TO CHOOSE AN OFFICIAL SONG FOR THE STATE)

“கான் பிரகாரி” மொபைல் செயலி:

  • மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியுஸ் கோயல் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை திட்டம்” (COAL MINE SURVEILLANCE & MANAGEMENT SYSTEM (CMSMS)) மற்றும் “கான் பிரகாரி” (KHAN PRAHARI) மொபைல் செயலியையும் அறிமுகம் செய்து வைத்தார்
  • நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியவர்களை எளிதில் அறிந்து மீட்க இயலும்
  • “கான் பிரகாரி” மொபைல் செயலி மூலம் சட்ட விரோதமாக சுரங்க நடவடிக்கை மேற்கொள்வோர் தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரியப் படுத்த இயலும்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.