TNPSC Daily Current Affairs in Tamil 19 June 2018

TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL – 19.06.2018

                   TNPSC DAILY CURRENT AFFAIS IN TAMIL WILL BE UPDATED HERE FOR THOSE WHO PREPARING FOR COMPETITIVE EXAMS

JAISALMER MILITARY STATION IS PLANED TO CHANGE AS SMART FACILITY MILITARY STATION / ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் ராணுவ தளத்தை, ஸ்மார்ட் வசதிகள் தளமாக மாற்ற முடிவு:

  • ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் ராணுவ தளத்தை, ஸ்மார்ட் வசதிகள் கொண்ட ராணுவ தளமாக மாற்ற இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது
  • மத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் மாதிரியாக இதனை வடிவமைக்க ராணுவம் முடிவு செய்துள்ளது

INDIA’S 5TH AND LARGEST NATIONAL DATA CENTRE / இந்தியாவின் 5-வது மற்றும் மிகப்பெரிய தேசிய தகவல் மையம்:

  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் இந்தியாவின் 5-வது தேசிய தகவல் மையம் அமைய உள்ளது (5TH AND LARGEST NATIONAL DATA CENTRE)
  • இதுவரை நான்கு தேசிய தகவல் மையங்கள் உள்ளன = பூனே, ஹைதராபாத், டெல்லி மற்றும் புவனேஸ்வர்
  • இது இதுவரை அமைந்துள்ள தகவல் மையங்களை விட பெரிதாக, சுமார் 5 லட்சம் சர்வர்கள் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது

RAJASHREE SHAHU PURASKAR AWARD / ராஜர்சி சாகு புரஸ்கார் விருது:

  • “ராஜர்ஷி சாகு புரஸ்கார் விருது”, பிரபல சமூக சேவகியும் சமூக ஆர்வலருமான “புஷ்பா பாவே” அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது
  • இவர் சிறந்த எழுத்தாளரும் ஆவார்

SURESH MATHUR COMMITTEE / சுரேஷ் மாத்தூர் குழு:

  • “காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்” (IRDAI = INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY), காப்பீடுகளை விற்கும் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு வழங்கவேண்டிய தொகையை உயர்த்த ஏதுவாக, அதனை ஆராய 1௦ பேர் கொண்ட குழுவினை, “சுரேஷ் மாத்தூர்” தலைமையில் அமைத்துள்ளது

INDIAN ARMY OBSERVED YEAR 2018 AS “YEAR OF DISABLED SOLDIERS IN LINE OF DUTY” / பணியில் ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கான ஆண்டாக 2018ம ஆண்டை இந்திய ராணுவம் அறிவிப்பு:

  • இந்திய ராணுவம், பணியில் இருந்து ஊனமுற்ற இராணுவ வீரர்களின் ஆண்டாக 2018ம் ஆண்டை கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது (2018 as ‘Year of Disabled Soldiers in Line of Duty)
  • பணியில் இருந்த போது திடீர் நிகழ்வுகளால் ஏற்படும் ஊனத்தால், அவர்களால் தொடர்ந்து பணிபுரிய முடியாத சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறவும், அவர்களுக்கு நிதி வசதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

UNION WATER RESOURCE MINISTRY TIED UP WITH GOOGLE FOR FLOOD FORECASTING / வெள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பிற்காக கூகுல் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:

  • மத்திய நீர்வள ஆதாரத் துறை அமைச்சகம், “வெள்ள முன்னெச்சரிக்கை” அறிவிப்பிற்காக பிரபல கூகுல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது
  • கூகுல் நிறுவனம், தனது தொழில்நுட்பத்தை கொண்டு முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட வேண்டும்

PERUMAL MURUGAN’S NOVEL “KAZHIMUGAM” / பெருமாள் முருகனின் “கழிமுகம்” நாவல்:

  • “மாதொருபாகன்” நாவலால் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள், “கழிமுகம்” என்ற நாவலை தற்போது எழுதி வெளியிட்டுள்ளார்
  • நடுத்தர வர்க்க குடும்பத்தில் நவீனகால இயந்திரங்களின் தாக்கத்தை பற்றி இது குறிப்பிடுகிறது

118TH US OPEN GOLF CHAMPIONSHIP / 118-வது அமெரிக்க கோல்ப் சாம்பியன்ஷிப்:

  • நியுயார்க் நகரில் நடைபெற்ற 118-வது அமெரிக்க கோல்ப் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்காவை சேர்ந்த “ப்ரூக்ஸ் கோயப்கா” வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்

CONFERENCE ON WATER FOR SUSTAINABLE DEVELOPMENT / நீடித்த வளர்ச்சிக்கான தண்ணீரின் பங்கு பற்றிய கருத்தரங்கம்:

  • அடுத்த பட்டு ஆண்டுகளுக்கு நீடித்த வளர்ச்சிக்கு தேவையான தண்ணீரின் பங்கு 2018 – 2028 (high-level Conference on “International Decade for Action: Water for Sustainable Development, 2018-2028”), என்ற பெயரில் இரண்டு நாள் உயர்மட்ட கருத்தரங்கம் தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் சார்பில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது

2018 NATIONAL YOGA OLYMPIAD / 2018 தேசிய யோகா ஒலிம்பியாட்:

  • தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புது தில்லியில் “2018 தேசிய யோகா ஒலிம்பியாட்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது
  • சமூகத்தில் அமைதியுடனும், அறிவியல் முறைப்படியும் உன்னதமான வாழ்வை வாழ்தல் தொடர்பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

J&K COMES UNDER GOVERNOR’S RULE FOR 4TH TIME IN 10 YEARS / ஜம்மு காஸ்மீரில் 1௦ ஆண்டுகளில் 4-வது முறையாக ஆளுநர் ஆட்சி:

  • ஜம்மு காஸ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை, ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 1௦ ஆண்டுகளில் இது நான்காவது முறையாகும்

RAILWAYS TO BECOME NET ZERO CARBON EMITTER BY 2030 / 2௦3௦ம் ஆண்டிற்குள் ரயில்வே கார்பன் வெளியேற்றமற்ற அமைப்பாக மாறும்:

  • ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், வருகின்ற 2௦3௦ம் ஆண்டிற்குள் இந்திய ரயில்வே துறை முற்றிலும் கார்பன் புகை வெளியேற்றமற்ற அமைப்பாக மாறும் என்றும், அதற்குள் ரயில்வே துறை முழுவதும் 1௦௦% மின்மயமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

MISS INDIA 2018 / இந்திய அழகி 2018:

  • 2018ம் ஆண்டின் இந்திய அழகியாக தமிழகத்தை சேர்ந்த, “அனுக்ரீத்தி வஸ்” வாகை சூடியுள்ளார்
  • இவருக்கு 2௦17 உலக அழகியான மனுஷி சில்லார், மகுடம் சூட்டினார்
  • இரண்டாவது இடம் = ஹரியானா மாநிலத்தின் மீனாக்சி சவுத்ரி
  • 3-வது இடம் = ஆந்திராவின் ஸ்ரேயா ராவ்

US WITHDRAWS FROM UN HUMAN RIGHTS COUNCIL / ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமேரிக்கா வெளியேறியது:

  • ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அரசியல் ரீதியாக அமைப்பு செயல்படுவதாகவும், ஒருசார் செயலாகவும் உள்ளதாக கூறி வெளியேறியது

NEPAL, BHUTAN SPEND MORE THAN INDIA ON HEALTH / இந்தியாவை விட நேபால், பூட்டான் நாடுகளில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக செலவிடப்படுகிறது:

  • இந்தியாவினை குறைந்த வருமானத்தை கொண்ட அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில், அந்நாட்டின் மொத்த வருவாயில் 1.1% மற்றும் 2.5% உடல் ஆரோகியம் மற்றும் சுகாதாரத்திற்கு செலவிடப்படுகிறது
  • ஆனால் இந்தியாவில் 1% மட்டுமே செலவிடப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

JAPAN FIRST ASIAN TEAM TO DEFEAT A SOUTH AMERICAN NATION IN WC / உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தென் அமெரிக்க நாட்டினை வென்ற முதல் ஆசிய நாடு = ஜப்பான்:

  • கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் முதன் முறையாக தென் அமேரிக்கா நாடுகளில் ஒன்றினை ஆசிய நாடு ஒன்று வெல்வது இதுவே முதன் முறையாகும்.
  • ஜப்பான் அணி, கொலம்பியா அணியை 2 – 1 என்ற கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது

AMERICA’S SPACE FORCE / அமெரிக்காவின் “விண்வெளி படை”:

  • அமெரிக்க ராணுவத்தின் 6-வது படையாக “விண்வெளி படை” ஒன்றினை உருவாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்
  • விண்வெளி துறையிலும் அமெரிக்காவை முதன்மை இடத்தில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.