TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS – TNPSC தேர்விற்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள் பொது தமிழ் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எளிதில் மனப்பாடம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  1. வைகறைப் பொழுது எந்த நிலத்துக்குரிய முதற் பொருள்? மருதம்
  2. ‘கும்ப முனி தமிழ் முனி’ எனப்படுபவர் யார்? அகத்திய முனிவர்
  3. தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது? 27
  4. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பதிகம் பாடியவர் யார்? குமட்டூர்க் கண்ணனார்
  5. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? திரு.வி.க.
  6. ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்’ என்று பாடியவர் யார்? பாரதியார்
  7. ‘கொடி மரத்தின் வேர்கள்’ யார் எழுதிய கவிதைத் தொகுப்பு? வைரமுத்து
  8. ‘சிறுகதை மன்னன்’ எனப் போற்றப்படுபவர் யார்? புதுமைப்பித்தன்
  9. ‘கலைஞன் தியாகம்’ யாருடைய சிறுகதைத் தொகுப்பு கி.வா. ஜகந்நாதன்
  10. *47 நாட்கள்’ யார் எழுதிய நாவல்? சிவசங்கரி
  11. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ யார் எழுதிய நூல்? ம.பெ.சிவஞானம்
  12. ‘சொல்லும் அவற்றின் குறியீடும்’ யார் எழுதிய நூல்? ரா.பி. சேதுப்பிள்ளை
  13. உவே. சா.வின். இயற்பெயர் என்ன? வெங்கட்ராமன்
  14. ‘மறைந்த போன தமிழ் நூல்கள்’ என்ற தலைப்பில் நூல் எழுதியவர் யார்? மயிலை. சீனி வேங்கடசாமி
  15. ‘சைவக் கண்கள்’ யார் எழுதிய நூல்? ஜி.எம். முத்துசாமிப்பிள்ளை
  16. தேம்பாவணி எங்கு அரங்கேற்றப்பட்டது? மதுரையில்
  17. கம்பராமாயணத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்? திரு. வேங்கடாசல முதலியார்
  18. ‘பாஞ்சாலங்குறிச்சி’ வீர சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ஜெக வீர பாண்டியர்
  19. ‘பிறந்ததெப்படியோ’ என்ற நூலை எழுதியவர் யார்? தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
  20. முருகனின் ஊர்தி எது? மயில்
  21. ‘சிறிய பெருந்தகையார்’ என அழைக்கப்படுபவர் யார்? திருஞானசம்பந்தர்
  22. ‘என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்று பாடியவர் யார்? திருமூலர்
  23. பரிபாடல் பாடிய புலவர்கள் எத்தனைப் பேர்? 13
  24. நன்னூலுக்கு மயிலை நாதர் எழுதிய உரையின் பெயர்? மயிலைநாதம்
  25. ‘ஆசாரிய ஹிருதயம்’ யார் எழுதிய நூல்? அழகிய மணவாளர்
  26. நாத முனிகள் பிறந்த ஊர் எது? வீரநாராயணபுரம்
  27. காந்தி புராணம் எழுதியவர் யார்? அசலாம்பிகை அம்மையார்
  28. ‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே’ என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்
  29. ‘முசு’ என்பது எதனைக் குறிக்கும்? குரங்கு
  30. ‘சைவத் திறவு’ என்ற நூலை எழுதியவர் யார்? திரு.வி.க
  31. ‘உள்ளத்தே உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்று பாடியவர் யார்? பாரதியார்
  32. யாருக்கும் வெட்கமில்லை” என்ற நாடகத்தை எழுதியவர் யார்? சோ
  33. ‘எதிர்நீச்சல்’ யார் எழுதிய நாடகம்? கே.பாலசந்தர்
  34. கம்பதாசனின் இயற்பெயர் என்ன? ராஜப்பா
  35. ‘தமிழச்சி’ யார் எழுதிய நூல்? வாணிதாசன்
  36. ‘கொங்கு நாடு’ என்ற நூலை எழுதியவர் யார்? புலவர் குழந்தை
  37. ‘சோமு’ என அழைக்கப்படுபவர் யார்? மீ ப. சோமசுந்தரம்
  38. நெஞ்சில் ஒரு முள் என்ற நாவலின் ஆசிரியர் யார்? மு. வரதராசன்
  39. நெடுந்தொகை’ எனப் பெயர் பெறும் நூல் எது? அகநானூறு
  40. முல்லைக்குப் புறனான புறத்தினை எது? வஞ்சி
  41. தேவருலகத்திலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொணர்ந்த பரம்பரையைச் சார்ந்தவன் யார்? அதியமான்
  42. ‘ ஐங்குறு நூறு – அடி வரையறை யாது? 3 அடி முதல் 6 அடிவரை
  43. ‘வளைக்கரம்’ யார் எழுதிய நாவல்? ராஜம் கிருஷ்ணன்
  44. ‘பெரிய புராண ஆராய்ச்சி’ என்ற நூல் எழுதியவர் யார்? டாக்டர் இராசமாணிக்கனார்
  45. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர்? கா. கோவிந்தன்
  46. மெக்காலே கல்வி முறை எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது? 1835
  47. தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் எப்பொழுது நிறுவப்பட்டது? 1712 – தரங்கம்பாடி
  48. “நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே என்று பாடிய புலவர் யார்? மோசிகீரனார்
  49. அகநானூறு தொகுத்தவர் யார்? மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மன்
  50. ‘நவகிரகம்’ யார் படைப்பு? கே. பாலசந்தர்
  51. லீலாவதி’ என்ற கணித நூலை எழுதியவர் யார்? பாஸ்கராச்சாரியார்
  52. எட்டுத்தொகை நூல்களில் மிகுந்த அடி வரையறை பெற்றிருக்கும் நூல் எது? பரிபாடல்
  53. கன்னட மொழியில் எழுதப்பெற்ற முதல் நூல் எது? கவிராஜ மார்க்கம்
  54. அறிஞர் அண்ணாவைத் ‘தமிழ்நாட்டு பெர்னாட்ஷா’ என்று கூறியவர் யார்? கல்கி
  55. ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகச் சபை எப்பொழுது தொடங்கப்பட்டது? 1914
  56. பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தின் – பாட்டுடைத் தலைவன் யார்? இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
  57. ‘ஸ்வர்ண குமாரி ‘ யார் எழுதிய சிறுகதை? பாரதியார்
  58. ‘கரித்துண்டு ‘ நாவல் யார் எழுதியது? மு. வரதராசன்
  59. *புனர் ஜன்மம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது? கு.ப. ராஜகோபாலன்
  60. தொல்காப்பியர் குறிப்பிட்டுக் காட்டும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை? 33
  61. ‘மெழுகுவர்த்தி’ யார் எழுதிய நாடகம்? கே. பாலசந்தர்
  62. அரசன், ஓட்டக்கூத்தருக்கு வழங்கிய விருதின் பெயர் என்ன? காளம் என்னும் விருது
  63. நளவெண்பா எத்தனைக் காண்டங்களைக் கொண்டது? 3 காண்டங்கள்
  64. ‘உரிமைபாகர் பதிகம் பாடியவர் யார்? படிக்காசுப் புலவர்
  65. சாகுந்தலத்தைத் தமிழ்ப்படுத்தியவர் யார்? மறைமலையடிகள்
  66. *இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்? வைரமுத்து
  67. வடமொழியில் பாரதம் பாடியவர் யார்? வியாசர்
  68. ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” எனத் தம் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்? ஜி.யு.போப்
  69. சதுரகராதியை உருவாக்கியவர் யார்? வீரமாமுனிவர்
  70. ‘ஊரும் பேரும்’ என்ற நூலின் ஆசிரியர் யார்? ராபி. சேதுப்பிள்ளை
  71. தேவயானைப் புராணம் பாடியவர் யார்? நல்லாப்பிள்ளை
  72. ‘தேசபக்தன், நவசக்தி’ என்ற இரண்டு இதழ்களை நடத்தியவர் யார்? திருவிக
  73. தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடுகள் எத்தனை? எட்டு
  74. ‘பெருங்குறிஞ்சி’ என அழைக்கப்பெறும் நூல் எது? குறிஞ்சிப்பாட்டு
  75. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் யார்? மாணிக்கவாசர்
  76. தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் யார்? நாமக்கல் கவிஞர்
  77. ‘அன்று வேறு கிழமை’ என்ற புதுக்கவிதை நூலின் ஆசிரியர் யார்? ஞானக்கூத்தன்
  78. ‘வனவாசம்’ யார் எழுதிய சுயசரிதை? கண்ணதாசன்
  79. ‘பட்டத்து யானை’ யாருடைய கவிதைத் தொகுப்பு? நா. காமராசன்
  80. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஊர் எது? திருப்பெருந்துறை
  81. திருமந்திரம் எத்தனைப் பாடல்களைக் கொண்டது? 3000 பாடல்கள்
  82. ‘புலியூர் யமக அந்தாதி’ என்ற நூலின் ஆசிரியர் யார்? கணபதி ஐயர்
  83. ‘வசன நடை கைவந்த வள்ளலார்’ என வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி யாரைப் புகழ்கிறார்? ஆறுமுக நாவலரைப் புகழ்கிறார்
  84. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் யார் எழுதிய நூல்? – கனகசபைப் பிள்ளை
  85. அம்பிகாபதி அமராவதி’ என்ற நாடக நூலின் ஆசிரியர் யார்? மறைமலையடிகள்
  86. நன்னூலுக்கு விருத்தப்பாவில் உரை எழுதியவர் யார்? ஆண்டிப் புலவர்
  87. ‘தமிழ்த் தென்றல்’ என அழைக்கப்படுபவர் யார்? திரு.வி.க
  88. *சேரர் தாய முறை’ என்ற நூலின் ஆசிரியர் யார்? சோம சுந்தர பாரதியார்
  89. ‘ஆத்மபோக பிரகாசிகை’ என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? இராமானுஜக் கவிராயர்
  90. வீரமாமுனிவர் இயற்பெயர் யாது? கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி .
  91. ‘ஏமாங்கதத்து இளவரசன்’ என்ற நாவலை எழுதியவர் யார்? திருவிக
  92. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் எத்தனை? மூன்று
  93. அகப்பாடல்களில் அதிகமான வரலாற்றுக் குறிப்புகளைக் குறிப்பிடும் புலவர் யார்? பரணர்
  94. *திருவேரகம்’ இலக்கியம் குறிப்பிடும் ஊர் எது? சுவாமி மலை
  95. ‘தென்றமிழ்த் தெய்வப் பரணி’ என ஒட்டக்கூத்தர் எந்த நூலைக் குறிப்பிடுகின்றார்? கலிங்கத்துப் பரணி
  96. தொண்டர் சீர் பரவுவார்’ எனப்படுபவர் யார்? சேக்கிழார்
  97. ‘மூதுரை நூலுக்கு’ வழங்கும் வேறு பெயர் என்ன? வாக்குண்டாம்
  98. *உரிச்சொல் நிகண்டு’ எழுதியவர் யார்? காங்கேயர்
  99. ‘யாப்பருங்கலம்’ எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது? 10 ஆம் நூற்றாண்டு
  100. ‘வச்சணந்தி மாலை’ என்ற நூலின் ஆசிரியர் யார்? குணவீர பண்டிதர்

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS

 

 

TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS. TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS AND ANSWERS.

Leave a Reply