சுரதா

சுரதா

சுரதா

வாழ்க்கைக்குறிப்பு

  • இயற்பெயர்                  = இராசகோபாலன்
  • ஊர்                                    = தஞ்சை மாவட்டம் பழையனூர்
  • பெற்றோர்                     = திருவேங்கடம், சண்பகம் அம்மையார்
  • பிறந்த நாள்                   = 23.11.1921
  • உடன் பிறந்தவர்          =  வேதவல்லி (அக்கா)
  • மனைவி                          = சுலோச்சனா
  • மகன்                                 = கவிஞர் கல்லாடன்
  • இலக்கணம் கற்றது  = சீர்காழி அருணாசல தேசிகர்

சுரதாவின் சிறப்பு பெயர்கள்

  • உவமைக் கவிஞர்  (ஜெகசிற்பியன்)
  • கவிஞர் திலகம்  (சேலம் கவிஞர் மன்றம்)
  • தன்மானக் கவிஞர்  (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)
  • கலைமாமணி  (தமிழக இயலிசை நாடக மன்றம்)
  • கவிமன்னர்  (கலைஞர் கருணாநிதி)

சுரதா எழுதிய நூல்கள்

சுரதா

  • தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு)
  • துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)
  • சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)
  • சிக்கனம்
  • சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)
  • அமுதும் தேனும், 1983
  • பாரதிதாசன் பரம்பரை
  • வினாக்களும் சு ரதாவின் விடைகளும்
  • நெய்தல் நீர்
  • உதட்டில் உதடு
  • எச்சில் இரவு
  • எப்போதும் இருப்பவர்கள்
  • கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
  • சாவின் முத்தம் (முதல் நூல்)
  • சிறந்த சொற்பொழிவுகள்
  • சுர தாவின் கவிதைகள் (கையடக்கப் பதிப்பு)
  • சுவரும் சுண்ணாம்பும்
  • சொன்னார்கள்
  • தமிழ்ச் சொல்லாக்கம்
  • தொடாத வாலிபம்
  • நெஞ்சில் நிறுத்துங்கள்
  • பட்டத்தரசி
  • பாவேந்தரின் காளமேகம்
  • புகழ்மாலை
  • மங்கையர்க்கரசி
  • முன்னும் பின்னும்
  • வார்த்தை வாசல்
  • வெட்ட வெளிச்சம்
  • துறைமுகம்

கட்டுரை

  • முன்னும் பின்னும்

இதழ்

  • காவியம்(முதல் கவிதை இதழ், வார இதழ்)
  • இலக்கியம்(மாத இதழ்)
  • ஊர்வலம்(மாத இதழ்)
  • சுரதா(மாத இதழ்)
  • விண்மீன்(மாத இதழ்)

குறிப்பு

  • பாரதிதாசனுக்கு தாசனாக விளங்கியதால் சுப்புரத்தினதாசன் என்பதை “சு-ர-தா” என மாற்றிக்கொண்டார்

சிறப்பு

  • தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசு பெற்றவர்
  • வ.ரா (வ.ராமசாமி) = மற்றொரு பாரதி பிறந்து விட்டான்

கவிதைகள்

  • தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்
  • தடைநடையே அவர் எழுத்த்தில் இல்லை வாழைத்
    தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கள் உண்டு
  • படுக்கவைத்த வினாக்குறி போல்
    மீசை வைத்த பாண்டியர்கள்
  • வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி
    எதுகை வரல்போல் அடுத்து வந்தால், அத்தி
    என்பானோ மோனனையைப் போல் முன்னே வந்தான்

 

Leave a Reply