Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – valar tamil

வளர் தமிழ்

செம்மொழி:

  • மனித இனத்தின் சிறந்த கண்டுபிடிப்பு மொழி
  • உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. இவற்றில் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் இரண்டையும் பெற்றுள்ளன.
  • செம்மொழி சிறப்பை பெற்ற மொழி, தமிழாகும்
  • பல மொழிகளை கற்ற “பாரதியார்”, தமிழ் மொழியின் இனிமையை கூறுகையில்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்

-பாரதியார்

மூத்தமொழி:

  • தமிழ்த்தாயின் தொன்மையை “பாரதியார்” கூறுகையில்

என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய்

-பாரதியார்

  • நமக்கு கிடைத்த இலக்கண நூல்களிலே மிகவும் பழமையானது “தொல்காப்பியம்” ஆகும்
  • இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மூத்த மொழி என்பர்

எளிய மொழி:

  • தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி
  • தமிழ்மொழி எழுதும் முறையும் எளிது
  • இதற்கேற்ப, தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் “வலஞ்சுழி” எழுத்துகளாகாவே உள்ளன

சீர்மை மொழி:

  • சீர்மை என்பதன் பொருள் = ஒழுங்கு
  • தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் சிறப்பு வாய்ந்தது = சொல் சிறப்பு
  • உயர்திணையின் எதிர்ச்சொல் “தாழ்திணை” என்று அமையாமல் “அஃறினை” (அல்+திணை = உயர்வு அல்லாத திணை) என பெயரிடப்பட்டுள்ளது
  • பாகற்காயை கசப்புக்காய் என்று கூறாமல், “இனிப்பு அல்லாத காய் பாகற்காய்” (பால்+அல்+காய்) என வழங்கப்பட்டது

வளமை மொழி:

  • தமிழ் வளமை மிக்க மொழி. இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த மொழி
  • ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும்
  • பூ, தோன்றுவது முதல் உதிர்வது வரையிலான 7 நிலைகளுக்கும் தனித் தனி பெயர்கள் தமிழில் உண்டு
    1. அரும்பு
    2. மொட்டு
    3. முகை
    4. மலர்
    5. அலர்
    6. வீ
    7. செம்மல்
  • ஓர் எழுத்தே ஒரு சொல்லாகிப் பொருள் தருவதும் உண்டு. ஒரு சொல் பல பொருளைக் குறித்து வருவதும் உண்டு
  • “மா” என்ற சொல்லின் பொருள் = மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு

வளர்மொழி:

  • தமிழ் இயல்தமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத்தமிழ் என்னும் வகையினை உள்ளடக்கியது
  • “துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்” போன்றவை தமிழ் கவிதை வடிவங்கள் ஆகும்
  • தற்போது அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று வளர்ந்து வருகிறது

புதுமை மொழி:

  • தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழியும் தன்னை வளர்த்துக் கொண்டது
  • இணையம், முகநூல், புலனம், குரல்தேடல், தேடுபொறி, செயலி, தொடுதிரை முதலிய சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்
சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் மேற்கோள்
தமிழ் தொல்காப்பியம் தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
தமிழ்நாடு சிலப்பதிகாரம்

வஞ்சிக்காண்டம்

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய

இதுநீ கருத்தினை ஆயின்

தமிழன் அப்பர் தேவாரம்

Tnpsc New Syllabus Tamil Study Material 6th Std – valar tamil

Leave a Comment

Your email address will not be published.