TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 27/11/2022
TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 27/11/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 27 நவம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
‘டில்டிங் ரயில்களை’ (சாயும் ரயில்கள்) அறிமுகம் செய்ய உள்ள இந்திய ரயில்வே
- இந்திய ரயில்வே 2026 ஆம் ஆண்டிற்குள் வளைவுகளில் அதிக வேகத்தை பராமரிக்கும் நோக்கத்துடன் ‘டில்டிங் ரயில்களை’ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது // The Indian Railways has planned to introduce ‘Tilting Trains’ by 2026 with an aim to maintain higher speed on curvy stretches.
- டில்டிங் ரயில்கள்: வழக்கமான அகலப்பாதை பாதைகளில் அதிக வேகத்தை செயல்படுத்துகிறது, இது பாதையில் வளைவின் போது சாய்கிறது.
- அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரை அதிவேக வந்தே பாரத் ரயில்களின் 100 புதிய அலகுகள் தயாரிக்கப்படுகின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் முதல் முறையாக காந்தி சிலை
- ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.
- டிசம்பர் மாதம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் ஐ.நா அலுவலகத்தில் காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.
- இச்சிலையை வடிவமைத்தவர் = பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதார்.
- இது இந்தியா சார்பில் ஐ.நா அவைக்கு வழங்கப்படும் 2-வது பரிசு ஆகும்.
- முதல் பரிசு = 1982 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சார்பில் 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த “சூரிய பகவன்” சிலை கொடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டு சின்னத்தை வடிவமைத்தவர்
- பிரதமர் தனது “மனதின் குரல்” நிகழ்ச்சியில், சமிபத்தில் இந்தியா தலைமை பொறுப்பை ஏற்ற ஜி20 மாநாட்டின் சின்னதாய் வடிவமைத்தவர், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த “எல்தி ஹரிபிரசாத் காரு” என்று தெரிவித்தார்.
- தந்து கைகளாலேயே இந்த சின்னதாய் துணியில் வடிவமைத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
“அறிவியல் மன்றம்” திட்டம்
- திட்டம் துவங்கப்படும் நாள் = 28.11.2022
- அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த “வானவில் மன்றம்” என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை உருவக்கி உள்ளது.
- வானவில் மன்றம் திட்டம் = மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்துதல்
- இத்திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் 28/11/2022 அன்று திருச்சியில் துவக்கி வைக்க உள்ளார்.
- தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவற்கான புதிய முயற்சியாக வானவில் மன்றம் என்ற திட்டம் 13,210 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது.
- அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்ப்பதற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட STEM திட்டம் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம்) கொண்டு வரப்பட்டுள்ளது.
- இந்த திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
- இந்த திட்டத்தில், மேற்கண்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள்.
- அதற்கான கருவிகளை அவர்களே கொண்டு வருவார்கள். அதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்தி ‘செய்து கற்கும்’ அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருப்பார்கள்.
மாநில அரசின் முதல் இலக்கிய திருவிழா, “பொருநை”
- தமிழக அரசு தெரிவித்த ஐந்து இலக்கிய திருவிழக்களில் முதல் இலக்கிய திருவிழா நெல்லையில் “பொருநை இலக்கிய பெருவிழா” என்ற பெயரில் நடைபெற்றது.
- அடுத்து நான்கு இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட உள்ளன. அவை,
- முதல் விழா = பொருநை
- 2 வது விழா = வைகை
- 3-வது = காவேரி
- 4-வது = சிறுவாணி
- 5-வது = சென்னை
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நாட்டின் முதல் நடைபாதை
- மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைப்பாதை திறந்து வைக்கப்பட்டது // India’s First Ramp for Differently Abled
- சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் இரவு வான சரணாலயம்
- இந்தியாவின் முதல் இரவு வான சரணாலயம் லடாக்கின் ஹான்லேயில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் அமைக்கப்படுகிறது // India’s first-ever Night Sky Sanctuary is being set up by Council of Scientific & Industrial Research under Union Ministry of Science & Technology, in Ladakh’s Hanle.
- இது இந்தியாவில் ஆஸ்ட்ரோ-சுற்றுலாவை மேம்படுத்தும் மற்றும் ஆப்டிகல், இன்ஃப்ரா-ரெட் மற்றும் காமா-ரே தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாக இருக்கும்.
இந்தியாவின் முதல் புத்த பாரம்பரிய தீம் பூங்கா
- “புத்தவனம்” (Buddhavanam), இந்தியாவின் முதல் புத்த பாரம்பரிய தீம் பூங்கா திட்டமானது தெலுங்கானாவில் திறக்கப்பட்டது // Buddhavanam, the first-of-its-kind Buddhist Heritage Theme Park project, was inaugurated in Telangana.
- இது நாகார்ஜுனாசாகரில் தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் உருவாக்கப்பட்டது.
- நாகார்ஜுனாசாகர் அருகே பல்வேறு நாடுகளின் பௌத்த மடங்கள் மற்றும் புத்த பல்கலைக்கழகம் அமைக்கவும் மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.
ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்
- போட்டிகள் நடைபெற்ற இடம் = பிலிப்பைன்ஸ்
- தங்கம் வென்ற தமிழக வீரர் = ஹர்ஷவர்தன்
- ஒரு போட்டியிலும் தோல்வியை தழுவாமல் தங்கம் வென்றார்.
உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள்
- உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற இடம் = ஸ்பெயினின் லா லூசியா நகரம் // IBA Youth Men’s and Women’s World Boxing Championships 2022
- இந்தியா பெற்ற பதக்கங்கள் = 11 பதக்கங்கள் (4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்)
- நடப்பு ஆசிய சாம்பியனான இந்தியாவின் ரவீனா, இப்போட்டியிலும் தங்கம் வென்றார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ஐ.பி.எல் இறுதி ஆட்டம்
- 15 வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் கடந்த மே மாதம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்றது.
- இதில் குஜராத் அணி வென்றது. இப்போட்டியை நேரில் 1,01,566 பேர் கண்டுகளித்தனர்.
- உலகில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிகம் பேர் நேரில் பார்த்த ஆட்டமாக இதை கின்னஸ் உலக சாதனை புத்தகம் அங்கீகரித்துள்ளது.
டேவிஸ் கோப்பையை முதல் முறையாக வென்றது கனடா அணி
- நடைபெற்ற இடம் = ஸ்பெயினின் மலாகா நகரம்
- கோப்பையை வென்ற அணி = கனடா அணி
- தோற்ற அணி = ஆஸ்திரேலியா
- கனடா அணி முதல் முறையாக டேவிஸ் கோப்பயை வென்றது.
முதல் “ஆஸ்ட்ரா ஹிந்த் – 22” கூட்டுப் பயிற்சி
- இந்திய ராணுவம் மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்தினருக்கு இடையேயான இருதரப்பு பயிற்சி “AUSTRA HIND 22” 2022 நவம்பர் 28 முதல் டிசம்பர் 11 வரை மகாஜன் ஃபீல்ட் ஃபைரிங் ரேஞ்சில் (ராஜஸ்தான்) நடைபெற உள்ளது.
- “ஆஸ்ட்ரா ஹிந்த்” தொடரில் இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் சேவைகள் பங்கேற்கும் முதல் பயிற்சி இதுவாகும் // This is the first exercise in the series of AUSTRA HIND with participation of all arms and services contingent from both armies.
கடல் பாதுகாப்புக்கான இந்தியாவின் மூன்றாவது ஆய்வு வாகனக் கப்பல் ‘இக்ஷாக்’
- இந்திய கடற்படையின் மூன்றாவது ஆய்வு வாகனமான ‘இக்ஷாக்’ நவம்பர் 26 அன்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது GRSE மற்றும் L&T நிறுவனங்களால் கட்டப்பட்டது // India’s third Survey Vehicle ship ‘Ikshak’ is launched for the Indian Navy
- இந்திய கடற்படைக்காக GRSE மற்றும் L&T ஆல் கட்டப்பட்ட நான்கு சர்வே வெசல்ஸ் (பெரிய) (SVL) திட்டங்களில் இது மூன்றாவது மூன்றாவது திட்டமாகும்.
- இந்த கப்பலுக்கு “வழிகாட்டி” (Guide) என்று பொருள்படும் ‘இக்ஷாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேசிய உடல் உறுப்பு தான தினம்
- தேசிய உடல் உறுப்பு தான தினம் (National Organ Donation Day) = நவம்பர் 27
- உலக உடல் உறுப்பு தான தினம் (World Organ Donation Day) = ஆகஸ்ட் 13
- இறந்த நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று இந்திய உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது.
UNESCO ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான விருதுகள் 2022
- UNESCO ஆசிய-பசிபிக் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான விருதுகள்-2022, இந்த வருடம் இந்தியாவின் நான்கு இடங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
- Award of Excellence – சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்க்ரஹாலயா அருங்காட்சியகம் (Chhatrapati Shivaji Maharaj Vastu Sangrahalaya)
- Award of Distinction – ‘ஏழு கல்லறைகள்’ என்றும் அழைக்கப்படும் குதுப் ஷாஹி கல்லறைகள் ஆறு படிகிணறுகளை (பாவோலிஸ்) (Stepwells of Golconda, Hyderabad)
- Award of Merit – தாமகொண்டா கோட்டை, தெலுங்கானா (Domakonda Fort, Telangana)
- Award of Merit – பைகுல்லா நிலையம், மும்பை (Byculla Station, Mumbai)
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவியேற்க உள்ள முதல் பெண்மணி – பி.டி.உஷா
- இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி ஏற்க்க உள்ள முதல் பெண்மணி என்ற சிறப்பை ஒலிம்பிக் வீராங்கனை பி.டி. உஷா பெற்றுள்ளார்.
- தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கு தலைமை தாங்கும் முதல் ஒலிம்பியன் மற்றும் சர்வதேச பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் உஷா பெறுவார்
- இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு இவரை எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை என்பதால் இவர் தலைவராக தேர்வாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 26/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 25/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 24/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 23/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 22/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 21/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 20/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 19/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 18/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 17/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 16/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 15/11/2022
- TODAY TOP CURRENT AFFAIRS FOR TNPSC 14/11/2022