TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022

Table of Contents

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் 31 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன

  • நாட்டில் 2014-ம் ஆண்டிற்கு முன்பு 24 சர்வதேச விமான நிலையங்கள் இருந்தன. கடந்த 7 வருடங்களில் மேலும் 6 விமான நிலையங்கள் கட்டப்பட்டு, சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

உலகின் முதன்மையான மறுசீரமைப்புத் திட்டங்களில் கங்கை தூய்மைத் திட்டமும் ஒன்று என ஐநா அங்கீகரித்துள்ளது

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
உலகின் முதன்மையான மறுசீரமைப்புத் திட்டங்களில் கங்கை தூய்மைத் திட்டமும் ஒன்று என ஐநா அங்கீகரித்துள்ளது
  • இயற்கை உலகை சீரமைக்க மேற்கொள்ளப்படும் உலகின் முதன்மையான மறுசீரமைப்புத் திட்டங்களில் இந்தியாவின் புனித கங்கை தூய்மைத் திட்டமும் ஒன்று என ஐநா அங்கீகரித்துள்ளது // United Nations Recognizes Namami Gange Initiative As One Of The Top 10 World Restoration Flagships To Revive The Natural World
  • இதற்கான விருதை உலக மறுசீரமைப்புத் தினத்தையொட்டி கனடா நாட்டின் மாண்ட்ரில் நடைபெற்ற பல்லுயிர் தொடர்பான 15-வது பருவநிலை மாநாட்டு (15th Conference of Parties (COP15) to the Convention on Biodiversity (CBD) in Montreal, Canada) நிகழ்ச்சியில் கங்கை தூய்மைத் திட்டத்திற்கு வழங்கப்பட்டது.

‘பிராஜக்ட் போல்டு’ (Project BOLD)

  • “Project BOLD” (Bamboo Oasis on Lands in Drought)
  • பல்வேறு கிராமத் தொழில்கள் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மூங்கில் சாகுபடியின் சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் பொருளாதார திறனை அறிவியல் ரீதியாகப் பயன்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

பிரதான் மந்திரி கௌஷல் கோ காம் காரியக்ரம் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது

  • பிரதான் மந்திரி கௌஷல் கோ காம் காரியக்ரம் (PMKKK – Pradhan Mantri Kaushal Ko Kaam Karyakram) இப்போது பிரதான் மந்திரி விராசத் கா சம்வர்தன் (PM VIKAS – Pradhan Mantri Virasat Ka Samvardhan) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது
  • PM VIKAS சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக கைவினைஞர் சமூகங்கள், திறன் மேம்பாடு, கல்வி, பெண்கள் தலைமை மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் கூறுகளைப் பயன்படுத்தி.

இந்திய இரயில்வேயின் மிக நீளமான சுரங்கப்பாதை

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
இந்திய இரயில்வேயின் மிக நீளமான சுரங்கப்பாதை
  • இந்திய இரயில்வேயின் மிக நீளமான சுரங்கப்பாதை (India’s Longest Escape Tunnel) = T-49 (உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில் இணைப்பு)
  • இதன் நீளம் = 12.895 கி.மீ
  • USBRL திட்டத்தின் கத்ரா-பனிஹால் பிரிவில் சம்பர் மற்றும் காரி நிலையங்களுக்கு இடையே எஸ்கேப் டன்னல் T-49 அமைக்கப்பட்டுள்ளது.
  • USBRL = Udhampur Srinagar Baramulla Rail Link
  • இது காஷ்மீர் பகுதியை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நோக்கத்துடன் இமயமலை வழியாக அகல ரயில் பாதை அமைப்பதற்காக இந்திய ரயில்வேயால் மேற்கொள்ளப்பட்ட தேசிய திட்டமாகும்.

சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது

  • கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற 19வது சர்வதேச ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட் 2022ல் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது // India wins 6 gold medals at International Junior Science Olympiads
  • பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும், ஒட்டுமொத்தமாக நான்காவது முறையாகவும் உள்ளது.

இந்தோ நேபாள கூட்டுப் பயிற்சி “சூர்ய கிரண் -XVI”

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
இந்தோ நேபாள கூட்டுப் பயிற்சி “சூர்ய கிரண் -XVI”
  • இந்தோ நேபாள கூட்டுப் பயிற்சி “சூர்ய கிரண் -XVI” நேபாள ராணுவப் போர்ப்பள்ளி, சல்ஜாண்டியில் (நேபாளம்) தொடங்க உள்ளது.
  • இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான இந்திய-நேபாள கூட்டுப் பயிற்சியின் 16வது பதிப்பு “சூர்ய கிரண்-XVI” நேபாள ராணுவப் போர்ப் பள்ளியில், சல்ஜந்தியில் (நேபாளம்), 16 – 29 டிசம்பர் 2022 வரை நடத்தப்படும்.

சஞ்சார் போத் பயிற்சி

  • இந்திய இராணுவத்தின் ஐராவத் பிரிவு பஞ்சாபின் பரந்த தடைகள் நிறைந்த நிலப்பரப்பில் சஞ்சார் போத் என்ற பயிற்சியை நடத்தியது // Exercise Sanchaar Bodh conducted by Indian Army’s Airawat Division
  • பயிற்சியில் தொடர்பு கொள்ளும் திறன்களுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது இஸ்ரோ

  • கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இஸ்ரோ வெற்றிகரமாக செலுத்தியுள்ளது
  • 111 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள இதுவரை இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்

  • சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் (Sardar Vallabhbhai Patel Death Anniversary) = டிசம்பர் 15.
  • “இந்தியாவின் இரும்பு மனிதர்” என அழைக்கப்படுகிறார்.

சர்வதேச தேயிலை தினம்

TOP CURRENT AFFAIRS IN TAMIL 15/12/2022
சர்வதேச தேயிலை தினம்
  • இந்தியாவில் சர்வதேச தேயிலை தினம் (International Tea Day in India) = டிசம்பர் 15
  • ஐக்கிய நாடுகள் சர்வதேச தேயிலை தினம் (UN International Tea Day) = மே 21
  • இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, தான்சானியா மற்றும் உகாண்டா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 15 ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

IoT/M2M மாநாடு

  • IoT/M2M மாநாடு = இணையதள சாதனங்கள் / எந்திரத்தில் இருந்து எந்திரம் மாநாடு
  • நடைபெற்ற இடம் = புதுதில்லி
  • மாநாட்டின் கருப்பொருள் = Growth of IoT/M2M ecosystem through standardised implementations

தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள்

  • தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் (National Energy Conservation Day) = டிசம்பர் 14
  • தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்திய ரயில்வேக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஒன்பது தேசிய ஆற்றல் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன // Indian Railways were presented with Nine National Energy Conservation Awards for the year 2022

 

  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 14/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 13/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 12/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 11/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 10/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 9/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 8/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 7/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 6/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 5/12/2022
  • TOP CURRENT AFFAIRS IN TAMIL 4/12/2022

Leave a Reply