இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முத்திரைச் சின்னமாக “யானை” (Elephant Seal) பயன்படுத்தப்பட்டது
அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் = பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்)
அரசியல் நிர்ணய சபையின் செயலராக (Secretary of the Constituent Assembly) நியமிக்கப்பட்டவர் = எச்.வீ.ஆர்.ஐயங்கார் (ஹரவு வேங்கடநரசிங்க வெரத ராஜ்)
அரசியல் நிர்ணயசபையின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் முதன்மை வரைவாளராக (Chief Draftsman of Constituent Asembly) பணிபுரிந்தவர் = எஸ்.என்.முகர்ஜி (சுரேந்திரநாத் முகெர்ஜி)
அசல் இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது கையால் எழுதப்பட்ட (Calligrapher of the Indian Constitution) ஆவணமாகும். இதனை கையால் எழுதியவர் = பிரேம் பெகரி நரைன் ரைசதா. இவர் ஆங்கிலத்தில் சாய்வு (Italic Style) முறையில் இதனை எழுதினார்
இந்திய அரசியல் அமைப்பு சட்ட ஆசல் ஆவணம், சாந்திநிகேதனை சேர்ந்த ஓவியர்களான “நந்தலால் போஸ்” மற்றும் “பெகர் ராம்மனோகர் சின்கா” ஆகியோரால் ஒவ்வொரு பக்கத்திலும் அழகுபடுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் “முகப்புரையை” அழகுப்படுத்தியது = பெகர்ராம்மனோகர் சின்கா ஆவார்
இந்திய அரசியல் அமைப்பின் இந்தி வடிவத்தை உருவாக்கியவர் = வசந்த் கிருஷன் வைத்யா. இதனை அழகுபடுத்தி வடிவமைத்தவர் = நந்தலால் போஸ் ஆவார்.
இந்திய அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்டம் நடந்த நாளில், கூட்டத்தில் கலந்துக் கொண்ட 284 உறுப்பினர்களும் இருமுறை கையொப்பம் இட்டனர். ஒன்று ஆங்கில வழி புத்தகத்தில், மற்றொன்று இந்தி வழி புத்தகத்தில்.