நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

  • சுதந்திர இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனித் தன்மையுடைய அடிப்படை ஆவணமாகும். இந்தியாவின் அரசியல் வரலாற்று மரபு, தலைவர்களின் திறம், மக்களின் மனப்போக்கு ஆகியவற்றை மனதில் கொண்டு உலகின் மிகச் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டங்களின் நிறை குறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து தோலை நோக்குடன் உருவாக்கப்பட்டதே இச்சட்டமாகும்.

பிரதிநிதி அவை இல்லை

  • இந்திய அரசியல் அமைப்பு சட்ட அவையானது பிரதிநிதிகளை கொண்ட அவை இல்லை. ஏனென்றால் இவர்கள் இந்திய மக்களால் முறையான தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவில்லை என வாதம் செய்தனர்

இறையாண்மையுடைய அமைப்பு இல்லை

  • இந்திய அரசியலமைப்பு சட்டமன்றமானது இறையாண்மையுடைய அமைப்பு அல்ல என்றும், அது ஆங்கில அரசின் வழிகாட்டுதலின் பேரிலே அமைக்கப்பட்டது எனவும் கூறுவர். மேலும் அரசியநிர்ணய சபை கூட்டங்கள் ஒவ்வொன்றும் ஆங்கில அரசின் அனுமதியுடனே நடைபெற்றது என்பர்.

நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

நேர விரயம்

  • அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க மிகஅதிக அளவு காலநேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது
    • அமெரிக்க அரசியல் அமைப்பு = நான்கு மாதங்கள் (7 விதிகள்)
    • கனடா அரசியல் அமைப்பு = 2 வருடம் 6 மாதங்கள் (147 விதிகள்)
    • ஆஸ்திரேலியா = 9 வருடம் (128 விதிகள்)
  • அரசியல் நிர்ணய சபை உறுப்பினரான “நசிருத்தின் அகமது” (Naziruddin Ahmed) என்பார், வரைவு குழு எடுத்துக்கொண்ட கால அளவை குறைக்கூறும் விதத்தில், வரைவுக் குழுவை “சறுக்கும் குழு” (Drifting Committee) என விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆதிக்கம்

  • நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள் – அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதிக்கம் நிறைந்து இருந்தது என்பர்.
  • கிரான்வில்லே ஆஸ்டின் = “இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது ஒரு கட்சி அவையாகும். அது காங்கிரஸ் ஆகும். காங்கிரஸ் என்பதே இந்தியா” என்றார்.

வழக்குரைஞர் – அரசியல்வாதிகள் ஆதிக்கம்

  • இந்திய அரசியல் நிர்ணய சபையானது வழக்குரைஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நிறைந்த அவை என்றனர். அவர்களின் ஆதிக்கமே இருந்தது
  • சமூகத்தின் மற்ற மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது
  • இதனாலேயே இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கடினமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிய மக்கள் புரிந்துகொள்ளும் படி இல்லை

நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்

இந்துமத அவை

  • நிர்ணயசபை அவையானது, இந்து மக்கள் நிறைந்த அவையாக இருந்தது
  • விஸ்கவுன்ட் சைமன் = “இந்துமத அவை” (A Body of Hindus) என்றார்
  • வின்ஸ்டன் சர்ச்சில் = “இந்தியாவின் பெரும்பானை மதம் நிறைந்த அவை” (Only One Major Community in India) என்றார்

 

Leave a Reply