குறுந்தொகை
குறுந்தொகை குறிப்பு
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 400
- புலவர்கள் = 205
- அடி எல்லை = 4-8
பெயர்க்காரணம்
- குறுமை + தொகை = குறுந் தொகை
- குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்
- நல்ல குறுந் தொகை
- குறுந் தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது)
குறுந்தொகை நூலை தொகுத்தவர்
- தொகுத்தவர் = பூரிக்கோ
- தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு
- இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
- நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
- நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து
- இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
நூல் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்
அணிலோடு முன்றிலார் |
விட்ட குதிரையார் |
குப்பைக் கோழியார் |
மீனெறி தூண்டிலார் |
காக்கைப்பாடினியார் |
வெள்ளிவீதியார் |
நூல் வடமொழிப் பெயர்கள்
உருத்திரன் |
சாண்டிலியன் |
உலோச்சணன் |
பௌத்திரன் |
நூல் குறிப்பிடும் அரசர்கள்
சோழன் கரிகாலன் |
குட்டுவன் |
பசும்பூண் பாண்டியன் |
பாரி |
ஓரி |
நள்ளி |
பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
ஔவையார் |
வெள்ளிவீதியார் |
வெண்பூதியார் |
ஆதிமந்தி |
குறுந்தொகை நூல் குறிப்பு
- எட்டு தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
- பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
- வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
- உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந் தொகையே.
- இந்நூலின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
- திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந் தொகை பாடலே.
- இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய அடிகள்
- நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே – (தேவகுலத்தார்)
- வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே
– (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
- யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
- கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
குறுந்தொகை புலவர்களின் எண்ணிக்கை
wikipedia : 206
tamilwikipedia : 206
other wepsites and include you : 205
Goverment Notes Pdf : கபிலர்,ஒளவையார் உட்பட 203 பேர்.
what is correct answer?
பெரும்பாலான புத்தகத்தில் 205 புலவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.