இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி.
இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார்.
வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
1780ஆம் ஆண்டு தம் கணவரை கொன்றவார்களைக் வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.
கடலூர் அஞ்சலையம்மாள்:
இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய பொது இவரும் தம் பொதுவாழ்கையை தொடங்கினார்.
நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.
வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
இவர் காந்தியடிகளால் “தென்னாட்டின் ஜான்சிராணி” என அழைக்கப்பட்டார்.
அம்புஜத்தம்மாள்:
இவர் 1899ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்படுபவர்.
தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
இவர் தம் எழுபதாண்டு நினைவாக, “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதினார்.
1964ஆம் ஆண்டு இவருக்கு “தாமரைத்திரு”(பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது