சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காடும் படித்தால் – மனையளகு
வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி

  • கபிலர்

சொற்பொருள்:

  • வள்ளை – நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
  • அளகு – கோழி

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – கபிலர்
  • காலம் – கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்றும், சங்ககாலத்திற்கு பின் என்றும் கூறுவர்.

நூல் குறிப்பு:

  • திருக்குறளின் சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல் எழுந்தது.
  • இந்நூலில் 53 புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.
  • இப்பாடல் அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது.

உவமை:

  • சிறுபுல்லின் தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள் தெளிவாக காட்டும்.

உவமிக்கப்படும் பொருள்:

  • வள்ளுவரின் குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும்.

அறிவியல் கருத்து:

  • ஒளியைக் கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி செய்யலாம் என்று கண்டவர் கலீலியோ கலிலி.
  • நெடுந்தொலைவிலுள்ள பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில் தேங்கிய சிருபனித்துளி மிகத்தெளிவாகக் காட்டும் என்ற கபிலரின் சிந்தனை அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை வெளிப்படுத்துக்கிறது.

Leave a Reply