கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அழகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே – கம்பர் |
சொற்பொருள்:
- உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
- நீக்கல் – அழித்தல்
- நீங்கலா – இடைவிடாது
- அலகிலா – அளவற்ற
- அன்னவர் – அத்தகைய இறைவர்
- சரண் – அடைக்கலம்
இலக்கண குறிப்பு:
- யாவையும் – முற்றும்மை
- ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
- அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஆசிரியர் குறிப்பு:
- நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
- இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
- இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
- கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
- இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
- கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
- இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.