சுந்தரர்
சுந்தரர் வரலாறு
- இயற்பெயர் = நம்பி ஆரூரர்
- பெற்றோர் = சடையனார், இசைஞானியார்
- ஊர் = திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
- மனைவி = பரவையார், சங்கிலியார்
- வாழ்ந்த காலம் = 18 ஆண்டுகள்
- மார்க்கம் = யோகம் என்னும் சக மார்க்கம்
- நெறி = யோகம் அல்லது தோழமை நெறி
- ஆட்கொள்ளட்பாட இடம் = திருவெண்ணெய் நல்லூர்
- இறைவனடி சேர்ந்த இடம் = கைலாயம்
- இவரின் தமிழ் = மிஞ்சு தமிழ்
சுந்தரர் தேவாரம்
- 7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
- திருதொண்டத்தொகை
சுந்தரர் சிறப்பு பெயர்கள்
- வன்தொண்டர்
- தம்பிரான் தோழர்
- சேரமான் தோழர்
- திருநாவலூறார்
- ஆலாலசுந்தரர்
- ஆளுடைய நம்பி
நிகழ்த்திய அற்புதங்கள்
- 12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
- இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
- செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
- வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.
- பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.
- இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
- முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.
சுந்தரமூர்த்தி நாயனார் சிறப்பு
- இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரன் தனது அடிமை என நிறுவினார்.
- தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
- சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
- மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்
வன்தொண்டர் குறிப்பு
- இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
- இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
- ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
- “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய முதல் பாடல்
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள் அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. |
மேற்கோள்
- பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
- பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
- தம்மானை அறியாத சாதியாரும் உளரோ