தூது இலக்கியம்
தூது இலக்கியம்
- தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது.
- தூது இரு வகைப்படும் = அகதூது, புறத்தூது
- “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடிடின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது
- “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது
- தூது கலிவென்பாவால் பாடப்படுவது
- முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்)
- தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல்
- தூதாக அனுப்பப்படுபவை = அன்னம், மயில், கிலி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்
- இப்பத்தும் தூதாக அனுப்பி பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(தச விடு தூது)
தூது நூல்கள்
உமாபதி சிவம் |
நெஞ்சு விடு தூது (முதல் தூது நூல்) |
பலபட்டடை சொக்கநாதப் புலவர் |
அழகர் கிள்ளை விடு தூது |
சுப்ரதீபக் கவிராயர் |
விறலி விடு தூது |
வெள்ளைவாரணர் |
காக்கை விடு தூது |
ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
தமிழ் விடு தூது |
அமிர்தம் பிள்ளை |
தமிழ் விடு தூது |
மீனாட்சிசுந்தரம் பிள்ளை |
தச விடு தூது |
நெஞ்சு விடு தூது
- இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவம்
- ஆசிரியர் தம்மை தல்வியாகவும், தம் குருநாதர் மறைஞான சாம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார்.
- இந்நூலில் 129 கண்ணிகள் உள்ளன.
தமிழ் விடு தூது
- ஆசிரியர் பெயர் தெரியாத இத்தூது நூல் மிக சிறப்பான நூல் ஆகும்.
- மதுரை சொக்கநாதரிடம் தலைவி ஒருத்தி தமிழை தூது அனுப்புகின்றாள்.
- இந்நூலில் 268 கண்ணிகள் உள்ளன.
அழகர் கிள்ளை விடு தூது
- திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
- இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
- இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
- பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
- சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
- இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
- நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதர்
- நாட்டுபுறப்பட்டு