வாணிதாசன்
வாணிதாசன் பெற்றோர்
- இயற்பெயர் = எத்திராசலு (எ) அரங்கசாமி
- பெயர் = வாணிதாசன்
- பிறந்த இடம் = புதுவையை அடுத்த வில்லியனூர்
- பெற்றோர் = அரங்க திருக்காமு – துளசியம்மாள்
- துணைவி = ஆதிலட்சுமி
- தாய்மொழி = தெலுங்கு
வாணிதாசன் சிறப்பு பெயர்கள்
- புதுமைக் கவிஞர்
- பாவலரேறு
- பாவலர் மணி
- பாவலர் மன்னன்
- தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து)
- தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்
- ரமி
வாணிதாசன் இயற்றிய நூல்கள்
- எழிலோவியம்
- தீர்த்த யாத்திரை
- இன்ப இலக்கியம்
- பொங்கல் பரிசு
- இரவு வரவில்லை
- சிரித்த நுணா
- வாணிதாசன் கவிதைகள்
- பாட்டரங்கப் பாடல்கள்
- இனிக்கும் பாட்டு
- எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
- பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு)
- குழந்தை இலக்கியம்
- பெரிய இடத்து செய்தி (மாப்பசானின் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தது)
- காதல் எங்கே (விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ)
- விதவைக்கொரு செய்தி
தொடர்கதைகள்
- வாழ்க்கை
- பட்டிக்காட்டுப் பெண்
கட்டுரைகள்
- கருங்காலம்
- கவிதையில் வினாவும் விடையும்
காப்பியங்கள்
- கொடிமுல்லை
- தமிழச்சி
- தொடுவானம் (இசைப்பாடல் பற்றியது – 51 இசைப்பாடல்கள்)
வாணிதாசன் குறிப்பு
- இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
- இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
- உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
- தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்
- இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
- பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
- இவரின் முதல் பாடல் = பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!
- தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார்
- இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
- இவர் எல்லப்ப் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.
- 1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.
பெற்ற பரிசு
- 1938 இல் முதல் கவிதைக்கு தமிழர் இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனாரிடமிருந்து ரூ. 10 பரிசு
- 1950 இல் கோவை முத்தமிழ் மாநாட்டு கவியரங்கில் 2-வது வெள்ளிக்கிண்ணப் பரிசு
- 1979 இல் தமிழக அரசின் பாவேந்தர் பரிசு ரூ. 10000
- 1972 இல் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பொன்மோதிரப் பரிசு
- 1973 இல் புதுவை தமிழ் சங்க வெள்ளிக் கேடய பரிசு
- 1975 இல் கவிஞர் இறந்த பிறகு “பாட்டரங்கப் பாடல்” நூலிற்கு முதல் பரிசு ரூ. 2000
வாணிதாசன் சிறப்பு
- பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
- பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
- மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
- மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டிற்கு பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகளாக இருந்து இக்காலத்துக்கு வேண்டிய வகையில் பாட்டின் மூலமாக செய்துவரும் தொண்டு பெரிதும் பாராட்டத்தக்கது
- மயிலை சிவமுத்து = பாரதியார், பாரதிதாசன் ஆகிய இந்த இருவரினும் விஞ்சிய வகையில் பாடி வருகிறார்
- மயிலை சிவமுத்து = இவருடைய பாடல்களை உலகப் பெருங்கவிஞருள் ஒருவரான இரவீந்திரநாத் தாகூரின் பாடல்களுக்கு நிகராக கருதலாம்
- மயிலை சிவமுத்து = மடமையில் துயிலும் மக்கள் விழிகளைத் திறந்து பார்த்துப் புத்தம் புதுவாழ்வு பெற்று வாழ நம் தமிழ்நாட்டுத் தாகூராகிய வாணிதாசனார் பல்லாண்டு வாழ்வாராக
- சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
- குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே
- இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது
- திரு.வி.க = “திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை” என்றார்
- மா.இராமலிங்கம் = இயற்கையை பாடுவதில் இவரை மிஞ்ச தற்கால கவிஞர்கள் யாரும் இல்லை
- கண்ணதாசன் = தோழர் வாணிதாசனாரது கவிதைகளை படிக்கும் பொது சில சமயங்களில் பாரதிதாசனுக்கும் முன்னாலே போகிறார் என்ற எண்ணம் தட்டும்.
- கண்ணதாசன் = இவரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் “நோபல் பரிசு” கிடைக்கும்
- பாராதிதாசன் கூறியது,
எல்லாரும் நல்லார் என்(று) எண்ணுவார் இன்றமிழ் வல்ல கவிவாணி தாசனார் – அல்லும் பகலும் தமிழர் தம் பண்பாடு பற்றிப் புகழும் பாட்(டு) ஒவ்வொன்றும் பொன் |
- திருநாவுக்கரசு = தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு வாணிதாசன் ஆவார்.
வாணிதாசன் பாடல் வரிகள்
- பாரதி தாசன் பெயரை உரைத்திடப்
- பாட்டுப் பிறக்குமடா
- இடுவெயில் போல்உழைக்கும் சேரிவாழ் ஏழைமக்கள்
- கொடுவெயில் குளிர்மழைக்குத் குந்திடக் குடிசை உண்டோ?
- மக்கட்கே வானை என்றும் மடக்கிநீ அனுப்பி வைத்தாய்
- மக்கட்கே ஆறு வற்றாத அருவி தந்தாய்
This was very useful to me…. And thanks for your notes…