ஆறுமுக நாவலர்
ஆறுமுக நாவலர்
- பெயர் = ஆறுமுகம்
- காலம் = 1822 – 1879 (57 ஆண்டுகள்)
- பெற்றோர் = கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார்
- ஊர் = இலங்கை யாழ்ப்பாணத்தின் நல்லூர்
- ஆசிரியர் = சுப்பிரமணிய உபாத்தியார் (நீதிநூல்களை கற்றது)
- ஆசிரியர் = சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியார் (உயர் கல்வி)
சிறப்பு பெயர்
- தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி
- தற்கால தமிழ் உரைநடையின் தந்தை
- தமிழ் உரைநடையின் வேந்தர்
- சுவடிப் பதிப்பு முன்னோடி
- உரைநடை வித்தகர்
- வசன நடை கைவந்த வள்ளலார் (பரிதிமார் கலைஞர் கூறியது)
- சைவக் காவலர்
- தமிழ்க் காவலர்
- புதிய தமிழ் உரைநடையின் தந்தை (மு.வரதராசனார் கூறினார்)
- நாவலர் (திருவாவடுதுறை ஆதினம் வழங்கிய பட்டம்)
- செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன் (கவிமணி வழங்கியது)
புனைப் பெயர்கள்
- இராமசாமி
- சைவசமயாபிமானி
- சைவப் பிரகாசர்
- நடுவன்
- கருணை
- சைவன்
- இரக்கம்
- சைவப் பிரகாச சமாஜியர்
இயற்றிய நூல்கள்
இயற்றி பதிப்பித்த சைவ சமய நூல்கள்
-
- சைவ சமய சாரம்
- சிவாலய தரிசன விதி
- நித்திய கருமவிதி
- சிரார்த்த விதி
- தர்ப்பண விதி
- குருசிஷ்யக்கிரமம்
- மருட்பா (போலியருட்பா மறுப்பு)
-
இயற்றி பதிப்பித்த கிறுத்துவமத கண்டன நூல்கள்
- சைவ தூக்ஷண பரிகாரம்
- மித்தியாவாத நிரசனம்
- சுப்பிர போதம்
- வச்சிரதண்டம்
-
இயற்றி பதிப்பித்த வசன நூல்கள்
- பெரியபுராண வசனம்
- திருவிளையாடற்புராண வசனம்
- கந்தபுராண வசனம்
- பெரியபுராண சூசனம்
- யாழ்ப்பாணச் சமயநிலை
-
இயற்றி பதிப்பித்த பாட நூல்கள்
- பாலபாடம் 1
- பாலபாடம் 2
- பாலபாடம் 3
- பாலபாடம் 4
- இலக்கண வினா விடை
- சைவ வினா விடை
பதிப்பித்த நூல்கள்
-
மூலப்பதிப்புகள்
- வில்லிபுத்தூரார் பாரதம்
- சேது புராணம்
- கந்த புராணம்
- பெரிய புராணம்
- திருவாசகம்
- திருக்கோவையார்
- திருச்செந்தூரகவல்
- நால்வர் நான்மணிமாலை
- மறைசையந்தாதி
- சிதம்பர மும்மணிக்கோவை
- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
- உவமான சங்கிரகம்
- இரத்தினச் சுருக்கம்
-
மூலமும் உரையும் கொண்ட பதிப்புகள்
- நன்னூல் விருத்தியுரை
- நன்னூல் காண்டிகையுரை
- தொல்காப்பியச் சூத்திரவிருத்தி
- சிதம்பரமான்மியம்
- சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும்
- இலக்கணக் கொத்துரை
- தொல்காப்பியம் சொல்லதிகாரம்
- சேனாவரையம்
- சிவஞானபோத சிற்றுரை
- சிவராத்திரி புராணம்
- சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மைவிளக்கம்
- சிவாலய தரிசனவிதி
- சுப்பிரமணிய போதகம்
- இலக்கண விளக்கச் சூறாவளி
- திருக்குறள் பரிமேலழகருரை
- கொலை மறுத்தல்
- தருக்க சங்கிரகவுரை
- அன்னபட்டீயம்
- பிரயோக விவேகம்
- திருச்சிற்றம்பலக் கோவையுரை
- திருக்கோவையார் நச்சினார்க்கினியருரை
- சூடாமணி நிகண்டுரை
-
புத்துரைப் பதிப்புகள்
- ஆத்திசூடி
- கொன்றைவேந்தன்
- நன்னெறி
- நல்வழி
- வாக்குண்டாம்
- கோயிற்புராணம்
- திருமுருகாற்றுப்படை
- சைவ சமய நெறி
- சிவதருமோத்தரம்
- திருச்செந்தினீரோட்டக யமகவந்தாதி
- மருதூரந்தாதி
- சௌந்தரியலகரி
பொதுவான குறிப்புகள்
- “தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்”, என்ற கொள்கை கொண்டவர்
- வள்ளலாரின் “அருட்பா”விற்கு எதிராக “மருட்பா” எழுதியவர்
- யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் தாம் பயின்ற அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
- தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவருடைய தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தமது பணிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார்
- தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். “சைவப் பிரகாச வித்யாசாலை” என்ற சைவ பாடசாலையைத் தொடங்கினார்.
- சொந்தமாக அச்சுக் கூடம் நிறுவினார். அதற்கு “வித்தியானு பாலனயந்திரசாலை” என்று பெயரிட்டு நடத்தினார்
- பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார்
- பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார்
- இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்
- இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும்
- சிதம்பரத்தில் 1864-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சைவ வித்தியாசாலையை நிறுவினார்
- இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சொற்பொழிவு மேற்கொள்வார்
- நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது
சிறப்புக் குறிப்புக்கள்
- சுவடிப் பதிப்பு முன்னோடிகள் = நான்கு பேர் (ஆறுமுக நாவலர், சி.வை தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர் மற்றும் ச.வையாபுரிப் பிள்ளை)
- செய்யுள் நடையில் இருந்த தமிழ் எழுத்து மரபை எழுதும் வசன நடையாக செம்மைப்படுத்தி, காற்புள்ளி, அரைபுள்ளி, நிறுத்தற் குறி பயன்பாடுகளை வரையறை செய்து, நவீன தமிழ் எழுத்து நடையை அறிமுகம் செய்தவர் நாவலர் ஐயா அவர்களே
- கா. சுப்பிரமணிய பிள்ளை = “உரைநடை நூலாசிரியர்களில் யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் தலை சிறந்தவர்”
- “வைத்தாலும் வலுவின்றி வைவாரே” என்ற பாராட்டுரை இவருக்கு உரியதே
- “ஆங்கில உரைநடைக்கு ஒரு டிரைடன் (dryden) போலத் தமிழுக்கு ஆறுமுக நாவலர் ஆவார்” என்பர்
- முதன் முதல் புத்தக வடிவம் பெற்ற சங்க இலக்கியம், நாவலர் அவர்கள் 1851 இல் பதிப்பித்த திருமுருகாற்றுப்படை ஆகும்.
- திரு.வி.க = “தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.”
பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால் கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து, நிலையம் கோலியவர் சாமிநாத ஐயர் |
- பரிமேலழகரின் திருக்குறள் உரையை முதன் முதலில் பதிப்பித்தார்
- பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டவர்
- இலக்கண வழு இல்லாத தூய்மையான எளிய நடையை முதன்முதலில் கையாண்டவர் இவரே
- பெர்சிவல் பாதிரியாருக்கு பைபிளை தமிழில் மொழிபெயர்க்க பெரிதும் உதவினார்
- ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது
- ஆறுமுக நாவலர் 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார்
- இவரது பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச்சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அங்ஙனம் மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை.தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரிய இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியராகப் பணிபுரிந்து பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார்
- ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971-ம் ஆண்டு அக்டோபர் 29-ல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது
- ஆறுமுக நாவலரை “செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்” என கவிமணி பாராட்டியுள்ளார்.
ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன் பீடு பெறவே செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன் நீடு சைவம் நிலவுலகில் நிலவச் செய்த குருநாதன் நாடு புகழும் ஆறுமுக நாவலன் பேர் மறவோமோ |
- த. கைலாசபிள்ளை = தமிழிலே பிரசங்க மரபை முதன் முதலாக ஆரம்பித்து வைத்தவர் ஆறுமுகநாவலர் அவர்களே என்பதைச் “சைவமென்னுஞ் செஞ்சாலி வளரும் பொருட்டுப் பிரசங்கம் என்னும் மழையை முதன் முதற் பொழிந்தார்
- 1879 இல் நாவலர் இறந்த போது தமிழ் உலகு கதறிக் கண்ணீர் வடித்து மெய்யுருகியது. அந்த இரங்கற் கூட்டத்தில் சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதி வாசித்த “நல்லை நகர் நாவலர் பிறந்திடரேல் சொல்லு தமிழ் எங்கே? சுருதி எங்கே?” என்ற வரிகள் நாவலரின் புகழை என்றும் எடுத்துரைப்பன.
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை = “நின்னு நயகுணத்தினனாய்ச் சைவம் எனும் பயிர் வளர்க்கும் எழிலி போல்வான்” என்றார்
- நீதியரசர் தி. சதாசிவ ஐயர் = நாவலரைப் போல முன்னும் இப்பொழுதும் தமிழ் வித்துவான்கள் இல்லை. ஒருவேளை இருந்தாலும் அவரைப் போலத் தமிழ் மொழியையும் நல்லொழுக்கத்தையும் சைவ சமயத்தையும் வளர்த்து நல்ல தமிழ் வசன நடையில் நூல்களை எழுதி அச்சிட்டு வெளிப்படுத்தித் தமிழ் நாட்டாருக்கு உபகாரஞ் செய்தவர் வேறொருவருமில்லை. பொருள் வரும்படிக்காகப் பிறரை வணங்காதவர்களும் அவரைப் போல் ஒருவருமில்லை.