DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

                      DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

அந்தமானில் உள்ள ஹரியத் மலை தீவு, மணிப்பூர் மலை என பெயர் மாற்றப்பட்டது

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

  • அந்தமானில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வாய்த்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநில சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில், அந்தமானில் உள்ள “மவுன்ட் ஹரியத்” தீவிற்கு “மணிப்பூர் மலை” என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார் (AS A TRIBUTE TO THE FREEDOM FIGHTERS OF MANIPUR, THE UNION GOVERNMENT HAS DECIDED TO RENAME MOUNT HARRIET, AN ISLAND PEAK IN ANDAMAN AND NICOBAR ISLANDS)
  • 1857 புரட்சியின் போது மற்றும் 1891 இல் வடகிழக்கில் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் மணிப்பூர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது என்று ஷா கூறினார்.
  • சுதந்திரத்திற்கு முன்பே தனக்கென தனி அரசியலமைப்பை உருவாக்கிய இந்தியாவின் ஒரே மாநிலம் மணிப்பூர் ஆகும்.

சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் டிஜிட்டல் வேர்ல்ட் 2021

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

  • சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் டிஜிட்டல் வேர்ல்ட் 2021 வட்டமேசை மாநாட்டில், இந்தியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஸ்ரீ தேவுசிங் சவுகான் கலந்துக் கொண்டார்
  • இம்ம்நாடு, வியட்நாமின் “ஹா நோய்” என்னுமிடத்தில் நடைபெற்றது
  • இம்மாநாட்டின் தலைப்பு = CUTTING THE COST: CAN AFFORDABLE ACCESS ACCELERATE DIGITAL TRANSFORMATION

இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் புதிய தலைவர்

  • இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பின் புதிய தலைவராக சஹ்தேவ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் (SAHDEV YADAV WAS ELECTED THE PRESIDENT OF THE INDIAN WEIGHTLIFTING FEDERATION (IWLF)
  • பொதுச்செயலாளர் பதவியை வகித்த யாதவ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். H. ஆனந்தே கவுடா மற்றும் பொதுச்செயலாளராக நரேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தெற்காசிய கூட்டமைப்பு கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் போட்டிகள் 2022

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

  • தெற்காசிய கூட்டமைப்பு கிராஸ் கன்ட்ரி சாம்பியன்ஷிப் போட்டிகள் 15 ஜனவரி 2022 அன்று நாகாலாந்தின் கோஹிமாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது (SOUTH ASIAN FEDERATION CROSS COUNTRY CHAMPIONSHIPS WILL BE HELD IN KOHIMA ON 15TH JANUARY WHILE THE 56TH NATIONAL CROSS COUNTRY CHAMPIONSHIPS WHICH IS ALSO BEING HOSTED BY NAGALAND WILL BE CLUBBED WITH THE SOUTH ASIAN FEDERATION CROSS COUNTRY CHAMPIONSHIPS)
  • மேலும் இப்போட்டிகளுடன் சேர்த்து 56 வது தேசிய கிராஸ் கண்ட்ரி சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

லா நுசியா சதுரங்க ஓபன் சாம்பியன்சிப் பட்டதை வென்ற இனியன் பன்னீர்செல்வம்

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

  • ஸ்பெயினில் நடந்த லா நுசியா ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார் (INDIAN GM INIYAN WINS LA NUCIA OPEN CHESS TOURNEY IN SPAIN)
  • 19 வயதான இனியன், 2529 என்ற எலோ மதிப்பீட்டில், GMs ஆண்ட்ரி சுமேட்ஸ் (உக்ரைன்) மற்றும் ரோட்ரிகோ வாஸ்குவேஸ் ஷ்ரோடர் (சிலி) ஆகியோருடன் ஏழு புள்ளிகளுடன் சமமாக முடித்தார், ஆனால் சிறந்த டை-பிரேக் மதிப்பெண்ணின் அடிப்படையில் இந்தியர் வெற்றி பெற்றார்

வீர சாவர்கர் பற்றிய புத்தகத்தை வெளியிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர்

  • உதய் மாதுர்கர் மற்றும் சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய “VEER SAVARKAR: THE MAN WHO COULD HAVE PREVENTED PARTITION” என்ற புதிய புத்தகத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
  • ராஜ்நாத் சிங் வீர் சாவர்க்கரை “இந்திய வரலாற்றின் சின்னம்” (ICON OF INDIAN HISTORY) என புகழ்ந்தார்
  • வி.டி.சாவர்க்கார் எனப்படும் விநாயக் தாமோதர் சாவர்கர், இந்திய ஒருமைக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட்ட போராளி ஆவார்.

சையது அகமது கான் பற்றிய புதிய புத்தகம்

  • சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், பேராசிரயர் ஷாபே கித்வாய் எழுதிய “SIR SYED AHMED KHAN : REASON RELIGIN AND NATION” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது
  • இவர் உருவாக்கிய மொகமதியன் ஆங்கிலோ – ஓரியண்டல் கல்லூரி தற்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கிறது

இந்திய புவிசார் ஆற்றல் வரைபடம்

  • நிதி யோக் அமைப்பு இஸ்ரோவுடன் இணைந்து இந்தியாவின் புவிசார் ஆற்றல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது (NITI AAYOG JOINS HAND WITH ISRO TO LAUNCH GEOSPATIAL ENERGY MAP)
  • இது நாட்டின் அனைத்து ஆற்றல் வளங்களின் முழுமையான படத்தை வழங்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் இந்திய அரசின் எரிசக்தி அமைச்சகங்களுடன் இணைந்து இந்த வரைபடத்தை நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது.

புதிய வகை வெங்காய இனம் – ALLIUM NEGIANUM

DAILY CURRENT AFFAIRS 19 OCTOBER 2021

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நித்தி பள்ளத்தாக்கு மலரி கிராமத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வெங்காய இனத்திற்கு, ALLIUM NEGIANUM என பெயர் சூட்டப்பட்டுள்ளது
  • அல்லியம் என்ற புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இனத்திற்கு கொடுக்கப்பட்ட அறிவியல் பெயர் அல்லியம் நெஜியானம், ஒரு ஆய்வாளராகவும் அல்லியம் சேகரிப்பாளராகவும் இருந்த மறைந்த டாக்டர் குல்தீப் சிங் நேகியை கவுரவிக்கிறது.

ஜூலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் சாம்பியன்சிப்

  • ஜூலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் சாம்பியன்சிப் போட்டிகளில் இந்தியாவின் 16 வயதான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டதை வென்றார் (INDIAN GRANDMASTER PRAGGNANANDHAA WINS JULIUS BAER CHALLENGERS CHESS TOUR)
  • இறுதி ஆட்டத்தில் இவர், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் என்பவரி வீழ்த்தி சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்

நேரடி வரிகளை வசூலிக்க கரூர் வைஸ்யா வங்கிக்கு அனுமதி

  • மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சார்பாக நேரடி வரிகளை வசூலிக்கும் உரிமை, கரூர் வைஸ்யா வங்கிக்கு அளித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி (THE RESERVE BANK OF INDIA HAS AUTHORISED KARUR VYSYA BANK (KVB) TO COLLECT DIRECT TAXES ON BEHALF OF THE CENTRAL BOARD OF DIRECT TAXES (CBDT).)
  • ஒப்புதல் கிடைத்தவுடன், கரூர் வைஸ்யா வங்கி, நேரடி வரிகள் வாரியத்துடன் வங்கியின் தொழில்நுட்ப வழிகளை இணைக்க உள்ளது.

சார்லவில்வில் தேசிய போட்டியில் இந்தியாவின் பவானி தேவி வெற்றி பெற்றார்

  • பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சார்லவில்வில் தேசிய வாள்சண்டை போட்டியில் இந்தியாவின் பவானி சிங் வெற்றி பெற்றார் (INDIA’S BHAVANI DEVI WINS CHARLELLVILLE NATIONAL COMPETITION IN FRANCE)
  • வாள்சண்டை பிரிவில், ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா & UAE ஆகியவை பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றத்தை நிறுவ உள்ளது

  • மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யைர் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட் ஃபோரிக் அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் ஆகியோருடன் ஒரு கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு மன்றத்தை நிறுவ ஒப்புக்கொண்டனர் (INDIA, ISRAEL, US & UAE TO ESTABLISH INTERNATIONAL FORUM FOR ECONOMIC COOPERATION)

ஆதார் ஆணையத்தின் முதல் “ஆதார் ஹேக்கத்தான் 2021” போட்டிகள்

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அக்டோபர் 28, 2021 முதல் ‘ஆதார் ஹேக்கத்தான் 2021’ ஐ நடத்த உள்ளது (THE UNIQUE IDENTIFICATION AUTHORITY OF INDIA (UIDAI) IS SET TO HOST THE ‘AADHAAR HACKATHON 2021’ FROM OCTOBER 28, 2021)
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் காண ஆதார் ஹேக்கத்தான் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆதார் குழு நடத்தும் முதல் நிகழ்வு இதுவாகும்.

உலக உணவு பாதுகாப்பு குறியீடு 2021

  • உலக உணவு பாதுகாப்பு (ஜிஎஃப்எஸ்) அட்டவணை 2021 இல் 113 நாடுகளில் இந்தியா 71 வது இடத்தில் உள்ளது (INDIA IS RANKED AT 71ST POSITION IN THE GLOBAL FOOD SECURITY (GFS) INDEX 2021 OF 113 COUNTRIES)
  • முன்னதாக, உலகப் பசி குறியீடு (GHI – GLOBAL HUNGER INDEX) 2021 இல் இந்தியா 101 வது இடத்தில் இருந்தது.
  • அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.

2 தவணை தடுப்பூசிகளையும் 100% செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் மாவட்டம்

  • சீனாவுடன் சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் பழங்குடி மாவட்டம், நாட்டின் முதல் முழு தடுப்பூசி மாவட்டமாக மாறியுள்ளது (HIMACHAL PRADESH’S TRIBAL DISTRICT OF KINNAUR, WHICH SHARES INTERNATIONAL BORDER WITH CHINA, HAS BECOME THE FIRST FULLY VACCINATED DISTRICT IN THE COUNTRY)
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்று மாவட்டம் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தி மாரத்தான் ஓட்டம் ஓடிய சிறுவனுக்கு தமிழக முதல்வர் பாராட்டு

  • ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தி 750 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சென்னையை சேர்ந்த சர்வேஷ் என்ற மாணவருக்கு தமிழக முதல்வர் பாராட்டி பரிசும், 100௦௦0 ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

உலக குழந்தை எலும்பு மற்றும் மூட்டு தினம்

  • உலக குழந்தை எலும்பு மற்றும் மூட்டு தினம் (WORLD PEDIATRIC BONE AND JOINT DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 19 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • உலக குழந்தை எலும்பு மற்றும் கூட்டு (பிபி & ஜே) தினம் குழந்தைகள், இளம்பருவத்தினர் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியமான எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான நிலைமைகளை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply