TNPSC TAMIL எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
வாக்கியம்
சொற்களின் மூலம் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தரும், எழுத்து வடிவம் வாக்கியம் எனப்படும்.
கருத்து அடிப்படையில் 4 வகைகள்:
- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்
- வினா வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாக தெரிவிக்கும் வகையில் அமைந்த வாக்கியம் செய்தி வாக்கியம்.
எ.கா:
ராணி புத்தகம் படித்தாள்
கட்டளை வாக்கியம்
பிறரை ஏவுகின்ற முறையிலும் கட்டளையிடும் முறையிலும் அமைந்து வருகின்ற வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.
எ.கா
வரிசையில் செல், இங்கே வா.
வினா வாக்கியம்
வினாப் பொருளைத் தரும் வாக்கியம் வினா வாக்கியம் எனப்படும். (வினா எழுத்துக்கள் – ஆ, எ, ஏ, ஓ, யா )
எ.கா:
திருக்குறளை இயற்றிவர் யார்?
உணர்ச்சி வாக்கியம்
உள்ளத்து உணர்வுகளான மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற உணர்வுகள் வெளிப்படுமாறு அமையும் வாக்கியம் உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.
எ.கா:
ஆ! தாஜ்மஹால் என்ன அழகு!
வாக்கியங்களை அமைப்பு அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம்.
- தனி வாக்கியம்
- தொடர் வாக்கியம்
- வினா வாக்கியம்
- கலவை வாக்கியம்
தனி வாக்கியம்
ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்.
எ.கா:
செல்வி வந்தாள்.
மணியும், ராமுவும் வந்தனர்.
தொடர் வாக்கியம்
தனி வாக்கியங்கள் என்பது பல வாக்கியங்கள் தொடர்ந்து வரும். ஒரு எழுவாய் ஆனது பல பயனிலைகளைக் கொண்டு முடியும்.
எ.கா:
மோகன் போட்டியில் பங்கேற்றான்; வெற்றி பெற்றான்; பரிசு பெற்றான்.
கலவை வாக்கியம்
ஓர் முதன்மை வாக்கியத்துடன் ஒன்று அல்லது பல சார்பு வாக்கியங்கள் இணைந்து வருவது கலவை வாக்கியம் எனப்படும்
எ.கா:
கமலா போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றுப், பரிசு பெற்றாள்.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்