11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி
11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி
- பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர்.
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாண வனுக்கு வகுப்பது பரணி – இலக்கண விளக்கப் பாட்டியல் |
- பரணி இலக்கியத்தின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
- பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றார் உ.வே.சா
- தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கலிங்கத்துப்பரணி நூல் குறிப்பு
- தமிழின் முதல் பரணி நூல் இது.
- இந்நூல் 509 தாழிசைகள் கொண்டது.
- இந்நூலை ஒட்டக்கூத்தர், “தென்தமிழ் தெய்வப்பரணி” என்று சிறப்பித்துள்ளார்.
- இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
- அந்நாட்டின் மீது போர் தொடுக்க முதல் குலோத்துங்கச்சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பவரி அனுப்பி வெற்றிபெற்றதை இந்நூல் கூறுகிறது.
செயங்கொண்டார் ஆசிரியர் குறிப்பு
- கலிங்கத்துப்பரணி பாடியவர் செயங்கொண்டார்.
- இவர் முதல் குலோத்துங்கசோழனின் அவைப்புலவர்.
- இவரின் காலம் 11ஆம் நூற்றாண்டு அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
- பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப் “பரணிக்கோர் செயங்கொண்டார்” எனப் புகழ்ந்துள்ளார்.
சொற்பொருள்
- வரை = மலை
- சேர = முற்றும்
- மாசை = பழிப்பை
- எற்றி = உண்டாக்கி
- வன்தூறு = வலிய புதர்கள்
- குறை = எஞ்சியுள்ள அனைத்து மயிரையும்
- அரை = இடுப்பு
- கலிங்கம் = ஆடை
- கலிங்கர் = கலிங்க வீரர்கள்
- உரிப்புண்ட = களையப்பட்ட
- அமணர் = சமணர்
- முந்நூல் = முப்புரி நூலான பூணூல்
- சிலை = வில்
- நாண் = (வில் முனையில் கட்டப்படும்) கயிறு
- இட்டு = தரித்து
- கரந்தேம் = மறைந்தோம்
- அரிதனை = பகையை
- அநேகர் = பலர்
- மடி = இறந்த
- களம் = போர்க்களம்
- கும்பிட்டு அடி = அடிகளில் வீழ்ந்து வணங்கி
- பாணர் = ஆடிப்பாடி வாழும் இசை வாணர்கள்
- இவர்கள் மேல் = இவர்களைத் தவிர
- எழு கலிங்கம் = ஏழு பிரிவுகளைக் கொண்ட கலிங்க நாடு
- அன்றி = அல்லாமல்
- அடைய = முழுமையும்.
- எறிந்து = அழித்து
- சயத்தம்பம் = வெற்றித்தூண்
- நாட்டி = நிறுத்தி
- கடகரி = மதயானை
- வயமா = குதிரை
- அபயன் = முதற்குலோத்துங்க சோழன்
- அருளினோடும் = அருளாலும்
- வண்டையர் கோன் = கருணாகரத் தொண்டைமான்
இலக்கணக்குறிப்பு
- மாசை எற்றி = இரண்டாம் வேற்றுமை விரி
- வன்தூறு = பண்புத்தொகை
- வெஞ்சிலை = பண்புத்தொகை
- போந்து = வினையெச்சம்
- களம் கண்டோம் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
- கும்பிட்டு, எறிந்து, நாட்டி, கொண்டு = வினையெச்சங்கள்
- கடற்கலிங்கம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- அருளினோடும் = உருபு மயக்கம்
- தமை = இடைக்குறை
- பறித்தமயிர் = பெயரெச்சம்.