10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி

10 ஆம் வகுப்பு தமிழ் வளர்ச்சி
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும் தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர். – பாரதிதாசன் |
சொற்பொருள்
- தெளிவுறுத்தும் = விளக்கமாய் காட்டும்
- சுவடி = நூல்
- எளிமை = வறுமை
- நாணிடவும் = வெட்கப்படவும்
- தகத்தகாய = ஒளிமிகுந்த
- சாய்க்காமை = அழிக்காமை
- களைந்தோம் = நீக்கினோம்
- தாபிப்போம் = நிலைநிறுத்துவோம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கணக்குறிப்பு
- புதிது புதிது, சொல்லிச் சொல்லி = அடுக்குத்தொடர்
- செந்தமிழ் = பண்புத்தொகை
- சலசல = இரட்டைக்கிளவி
பிரித்தறிதல்
- வெளியுலகில் = வெளி + உலகில்
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- ஊரறியும் = ஊர் + அறியும்
- எவ்விடம் = எ + இடம்
பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

- பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
- இவர் 1891ஆம் ஆண்டு ஏப்பிரல் 29ஆம் நால் புதுவையில் பிறந்தார்.
- தந்தை கனகசபை, தாய் இலக்குமி.
- பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
- இவர் பாவேந்தர், புரட்சிக்கவிஞர் எனச் சிறப்பிக்கபடுவார்.
- குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு முதலியன இவர்தம் படைப்புகள்.
- பாரதிதாசன் பரம்பரரை என்றொரு கவிஞர் பரம்பரையே அவர் காலத்தில் தோன்றியது.
- இவர் படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் “பாரதிதாசன் விருது”, சிறந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
- இவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசின் சார்பில் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்