12 ஆம் வகுப்பு அருகன்

12 ஆம் வகுப்பு அருகன்

12 ஆம் வகுப்பு அருகன்

12 ஆம் வகுப்பு அருகன்

  • அருகதேவனை பற்றி கூறியுள்ள இந்நூல் நீலகேசியாகும்.
  • சீவக சிந்தாமணிக்கு நிகராக கவிதைச் சுவைமிக்க இந்நூலை எழுதியவர் விவரம் தெரியவில்லை.
  • இந்நூல் “நீலகேசித் தெருட்டு” என்றும் அழைக்கப்படும்.
  • அருகசமயப் பெண்துறவியாகிய நீலகேசி என்பாள் அருகன் திருக்கோயிலையடைந்து அருகதேவனின் ஆயிரத்தெட்டுத் திருப்பெயர்களால் பாடிப்பரவினான்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சொற்பொருள்

  • சாமரை = சாமரம் ஆகிய வெண்கவரி
  • புடைபுடை = இருமருங்கினும்
  • இயக்கர் = கந்தருவர்
  • இரட்ட = அசைக்க
  • சிங்கவாசனம் = அரியணை
  • ஆசனம் = இருக்கை
  • திருந்தவை = நல்லிணக்கமுடைய சான்றோர் கூட்டம்
  • ஒளிமண்டிலம் = ஆலோகம், பிரபாமூர்த்தி, கனப்பிரபை என்னும் திருவொளி மண்டிலங்கள் மூன்று.
  • நிழற்ற = ஒளிர
  • முக்குடை = சந்திராதித்தம், சகலாபாசனம், நித்தவிநோதம் என்னும் மூன்று குடைகள்; (இம்மூன்று ஒளிமண்டிலங்களும், மூன்று குடைகளும் அருக தேவனுக்கு உரியன என்பர்)
  • சந்திராதித்தம் = முத்துக்குடை
  • சகலாபாசனம் = பொற்குடை
  • நித்தவிநோதம் = மணிக்குடை
  • அங்கம் = அங்காகமம்
  • பூவம் = பூர்வாகமம் (பூர்வாகமம் அங்காகமம், பிரகீர்ணவாகமம் என்னும் இம் மூன்றும் அருக தேவனின் ஆகமங்களாம் என்றறிக)

இலக்கணக்குறிப்பு

  • புடை புடை = அடுக்குத்தொடர்
  • பொங்கு தாமரை = வினைத்தொகை
  • இரட்ட, நிழற்ற, கவிப்ப, தெருள = செயவென் வாய்பாட்டு வினைஎச்சங்கள்
  • முக்குடை = பண்புத்தொகை

 

 

 

Leave a Reply