சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஓவியக்கலை

ஓவியக்கலை

ஓவியம்:

  • எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
  • காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை.

கோட்டோவியங்கள்:

  • சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்கள் மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
  • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் (மான், போர் செய்தல், விலங்கு வேட்டை ஆகியவற்றை குறிக்கும்) குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

கண்ணெழுத்து:

  • தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
  • தாம் வரைந்த ஓவியங்களை முதலில் “கண்ணெழுத்து” என்றே வழங்கினர்.

“எழுத்து”:

  • எழுத்து என்பதற்கு ஓவியம் என்றும் பொருள் உண்டு என பரிபாடலும், குறுந்தொகையும் கூறுகின்றன.

கோட்டோவியங்கள்:

  • ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படை.
  • இவ்வாறு வரையப்படுபவை “கோட்டோவியங்கள்” எனப்படும்.

நடுகல் வணக்கம்:

  • தொல்காப்பியம் நடு கல் வணக்கம் பற்றிக் கூறுகிறது.
  • நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியவற்றைப் பொரிக்கும் பழக்கம் இருந்தது.

ஓவியக்கலையின் வேறுபெயர்கள்:

ஓவ, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி

ஓவியக் கலைஞனின் வேறு பெயர்கள்:

ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்

நச்சினார்கினியர் இலக்கணம்:

  • நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.

ஓவியக் குழுக்கள்:

  • ஓவிய கலைஞர் குழுவை “ஓவிய மாக்கள்” என்று அழைத்தனர்.
  • ஆண் ஓவியர் = சித்திராங்கதன்
  • பெண் ஓவியர் = சித்திரசேனா

சிலப்பதிகாரம்:

  • ஆடல் மகள் மாதவி, “ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்கொடி மடந்தையாக இருந்தனள்” எனச் சிலம்பு பகிர்கிறது.

வரைகருவிகள்:

  • வண்ணம் தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
  • வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயர்.

வரைவிடங்கள்:

  • ஓவியம் வரையப்பட்ட இடங்கள் = சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதொளில் அம்பலம்
  • இறை நடனம் புரிவதற்கே “சித்திர சபை” ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

புறநானூறு:

“ஓவத்தனைய இடனுடை வனப்பு”
– புறநானூறு
  • இவ்வாறு வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் கவிஞர் போற்றுகிறார்.

ஓவிய எழினி:

  • நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்குகினவற்றை “ஓவிய எழினி” கொண்டு அறிகிறோம்.

புனையா ஓவியம்:

  • வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப் புனையா ஓவியம் என்பர்.
  • இன்றும், இது மென்கோட்டு ஓவியமாக நடைமுறையில் உள்ளது.

நெடுநல்வாடை:

  • ஆடு முதலான 12 இராசிகளையும், விண்மீன்களையும் வரைந்த செய்தி, நெடுநல்வாடை கூறுகிறது.

தமிழரின் ஓவிய மரபு:

  • ஓவியங்களில் “நிற்றல், இருத்தல், கிடத்தல்” ஆகிய மனித இயல்புகளையும்
  • “வீரம், சாந்தம், சினம், வியப்பு, உவகை” ஆகிய மெய்ப்பாடுகளையும்
  • “உத்தமம், மத்திமம், அதமம், தசதாளம், நவதாளம், பஞ்சதாளம் முதலிய அளவுகளையும் வலியுறுத்துவது தமிழருக்கே உரிய ஓவிய மரபுகளாக விளங்குகின்றன.

மகேந்திரவர்மப் பல்லவன்:

  • சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது.
  • மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்.
  • 7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன்.
  • கல்வெட்டுகள் இவனைச் “சித்திரகாரப்புலி” எனப் புகழ்கின்றன.
  • “தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.

சித்தன்னவாசல் – ஓவியக் கருவூலம்:

  • திருநந்திக்கரையில் சேரர் கால ஓவியங்கள் கிடைத்துள்ளன.
  • புதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலமாக வைத்து போற்ற தக்கது.
  • கி.பி.9ஆம் நூற்றாண்டில் “அவனிப சேகர ஸ்ரீவல்லபன்” என்ற பாண்டிய மன்னன் காலத்தில், மதுரை ஆசிரியர் “இளம்கௌதமன்” இவ்வோவியங்களை வரைந்தார் என கல்வெட்டுகள் கூறுகிறது.

சோழர் கால ஓவியங்கள்:

  • சோழர்கால வனப்புமிக்க ஓவியங்களைத் தஞ்சைப் பெரியகோவிலில் காணலாம்.
  • அதில் கவின்மிகு கயிலைகாட்சி உள்ளது.

Leave a Reply