சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தனிப்பாடல்

தனிப்பாடல்

“இம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி
என்கொனர்ந்தாய் பாணாநீ என்றால் பாணி
வம்பதாம்க ளபமென்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன்யாம் வாழ்ந்தே மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்
பகடென்றான் உழுமென்றாள் பழனத் தன்னைக்
கம்பமா என்றேன்நற் களியாம் என்றாள்
கைம்மாஎன் றேன்சும்மா கலங்கி னாளே!”
– அந்தக்கவி வீரராகவர்

சொற்பொருள்:

  • களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா – யானை
  • களபம் – சந்தனம்
  • மாதங்கம் – பொன்
  • வேழம் – கரும்பு
  • பகடு – எருது
  • கம்பமா – கம்பு மாவு

ஆசிரியர் குறிப்பு:

  • பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்
  • வாழ்ந்த ஊர்: களத்தூர்
  • தந்தை: வடுகநாதர்
  • சிறப்பு: சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர்.
  • காலம்: 17ம் நூற்றாண்டு
  • நூல்கள்: சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்க் கலம்பகம், திருக்கழுக்குன்றப் புராணம்.

நூல் குறிப்பு:

  • இப்பாடல், “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த  புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
  • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

Leave a Reply