“தமிழ்-தமிழ் அகராதி” ஒன்று லேவி-ஸ்பாடிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
யாழ்பாணம் கதிரைவேலனாரால் “தமிழ்ச்சொல் அகராதி” வெளியிடப்பட்டது. இதனை “சங்க அகராதி” எனவும் அழைப்பர்.
இதில் சொல்லின் மூலம் தருதல், மேற்கோள் அமைதல் எனும் மரபு பின்பற்றப்பட்டுள்ளது.
பிற அகரமுதலிகள்:
குப்புசாமி என்பவர் “தமிழ்ப் பேரகராதி” வெளியிட்டார்.
இராமநாதன் என்பவர் படங்களுடன் கூடிய ஓர் அகரமுதலியை வெளியிட்டார். இந்நூல் “இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” எனும் பெயருடன் வந்தது.
வின்சுலோ என்பவர் “தமிழ்-ஆங்கிலப் பேரகராதி” வெளியிட்டார்.
பவானந்தர்:
பவானந்தர் என்பார் 1925ஆம் ஆண்டு “தற்காலத் தமிழ்ச்சொல் அகராதியும்”, 1937ஆம் ஆண்டு “மதுரைத் தமிழ்ப் பேரகராதியும்” வெளியிட்டார்.
சண்முகம்:
மு.சண்முகம் என்பவரால் “தமிழ்-தமிழ் அகரமுதலி” 1985ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது
தமிழ் லெக்சிகன்:
இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி “சென்னைப் பல்கலைக்கழக அகராதி”.
இது நன்கு திட்டமிட்டு முழுமையாக உருவாக்கப்பட்டது.
இவ்வகரமுதலி “தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்தது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி:
1985ஆம் ஆண்டு “தேவநேயபாவாணர்”யின் “செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி”யின் முதல் தொகுதி வெளிவந்தது.
இரண்டாவது தொகுதி 1993ஆம் ஆண்டு வெளியானது.
ஒவ்வொரு சொல்லின் சொற்பிறப்பும், இனமொழிச் சொற்களுக்கான குறிப்பும், பதிப்பின் இறுதியில் தரப்பட்டுள்ளன.
படங்களுடன் வெளி வந்த இரண்டாவது அகரமுதலி இதுவேயாகும்.
கணினி உதவியுடன் அகரமுதலி:
முழுமையாக கணினி உதவியுடன் உருவாக்கப்பட்டு வெளிவந்த முதல் அகரமுதலி “கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”.
விளக்கச் சொற்களோடு வெளிவந்த முதல் அகரமுதலி இதுவே.
கலைக்களஞ்சியம்:
தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி = அபிதான கோசம்.
இது 1902ஆம் ஆண்டு இலக்கியப் புராண இதிகாசச் செய்திகளைக்கொண்டு வெளிவந்தது.
இது இலக்கியக் களஞ்சியம் ஆக திகழ்கிறது.
அபிதான சிந்தாமணி:
1934ஆம் ஆண்டு இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்தது = அபிதான சிந்தாமணி.
இதனை சிங்காரவேலனார் தொகுத்து வெளியிட்டார்.
தமிழ் வளர்ச்சி கழகம்:
தமிழ் வளர்ச்சி கழகம் முறையான “முதல் கலைக்களஞ்சியத்தை” தொகுத்து வெளியிட்டது.
இது பத்து தொகுதிகளை உடையது.
இக்கழகம் குழந்தைகள் கலைக்களஞ்சியம், நாடகக் கலைக்களஞ்சியம், இசுலாமிய கலைக்களஞ்சியம் முதலிய பல கலைக்களஞ்சியங்களை வெளியிட்டது.
கலைச்சொல் அகரமுதலி:
காலைக்கதிர் நிறுவன முயற்சியால் பொதுஅறிவு, உளவியல், புவியியல், புள்ளியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கும் கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கக்ப்பட்டன.
மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Related
2 thoughts on “சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் அகரமுதலி வரலாறு”
Sathya
Which year book .new samacheer or old samacheer .kindly update this information.
Which year book .new samacheer or old samacheer .kindly update this information.
பழைய சமச்சீர் புத்தகம்