இந்தய அரசியல் நிர்ணய சபையுடன் இணையாமல் இருந்த சுதேச அரசுகளின் பிரதிநிதிகள் சிறுகச்சிறுக தங்களை இந்திய அமைப்புடன் இணைத்துக் கொண்டனர்
1947 , ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 6 சுந்தந்திர அரசுகள் தங்களை இந்திய அரசியல் நிர்ணய சபையுடன் இணைத்துக்கொண்டன. அவை = பரோடா, பிக்கனேர், ஜெய்பூர், பாட்டியாலா, ரேவா மற்றும் உதய்பூர்
1947 ஜூன் 3 திட்டத்தின் படி (மவுண்ட்பேட்டன் திட்டம்) இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் பிரிந்தனர்
சுதேச அரசுகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இந்தியாவில் உள்ள மாகாண பிரதிநிதிகள் ஆகியோர் நிர்ணயசபை கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்
இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947-ஆள் இந்தய அரசியல் நிர்ணய சபையில் ஏற்பட்ட மாற்றங்கள்
இந்திய அரசியல் நிர்ணய சபையானது ஒரு முழுமையான இறையாண்மை மிக்க அவையாக மாறியது. அது மக்கள் விருப்பப்படும் எந்தவொரு அரசியல் அமைப்பினையும் உருவாக்க முடியும் என்றது.
பிரிட்டிஷ் அரசால் இந்தியாவிற்கு என்று உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் மாற்ற, நீக்க, சேர்க்க போன்ற அதிகாரங்களை அரசியல் நிர்ணயசபைக்கு வழங்கப்பட்டது
அரசியல் நிர்ணயசபை ஒரு மத்திய சட்டமன்றமாகவும் (பாராளுமன்றம்) செயல்பட்டது. அதாவது இரண்டு செயல்கள் ஒருங்கே நடைபெற்றது
சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குதல்
நாட்டிற்கான சாதாரன சட்டங்களை செயல்படுத்துதல்
இவ்விரு செயல்களும் ஒரே அவையில் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றன
ஒன்று, இந்த அவை சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றமாகவும் செயல்பட்டது. அவ்வாறு செயல்படும் நேரத்தில் அவையின் தலைவராக முதல் சபாநாயகர் ஜி.வி.மவ்லாங்கர் செயல்பட்டார்.
அரசியல்நிர்ணயசபை, முதல் முறையாக 1947, நவம்பர் 17-ம் நாள் பாராளுமன்றமாக செயல்பட துவங்கியது. பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகராக ஜி.வி.மவ்லாங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொன்று, இந்திய அரசியல் நிர்ணய சபையாக இவ்வவை செயல்படும் பொழுது, அவையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்
இவ்விரு செயல்களுமே, 1949 நவமபர் 26-ம் தேதி வரை ஒருங்கே நடைபெற்றன. அதாவது அரசியல் நிர்ணய சபை இந்திய சட்டங்களை உருவாக்கும் வரை.
முஸ்லிம் லீகினை சேர்ந்த உறுபினர்கள் பாகிஸ்தான் தனி நாடானதால், அரசியல் நிர்ணயசபையை விட்டு வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவை = மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான், அசாமின் சில்ஹெட்
சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் படி, காபினெட் மிசன் திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட இந்திய நிர்ணயசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 389 ஆனது, குறைந்து 299 உறுப்பினர்கள் உடைய அவை ஆனது
மாகாணத்தில் 296 இருந்து 229 ஆனது
சுதந்திர அரசில் 93-ல் இருந்து 7௦ ஆனது
229 உறுபினர்களை கொண்ட மாகாணங்களில், மிக அதிகபட்சமாக