ஜெயகாந்தன்
ஜெயகாந்தன் ஆசிரியர்குறிப்பு
- ஊர் = கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம்
- பெற்றோர் = தண்டபாணி பிள்ளை – மகாலட்சுமி அம்மாள்
- ஜெயகாந்தன் இயற்பெயர் = முருகேசன்
- மனைவி = ஞானாம்பிகை, சீதாலட்சுமி
சிறப்பு பெயர்கள்
- “சிந்தனைச் சிற்பி” எனப் பாராட்டப்படுபவர் = ஜெயகாந்தன்
- “சிறுகதை மன்னன்” என்று அழைக்கப்படுபவர்கள் = புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஜெயகாந்தன் நாவல்கள்
- வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
- கைவிலங்கு (ஜனவரி 1961)
- யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
- பிரம்ம உபதேசம் (மே 1963)
- பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
- கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
- பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
- கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
- சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
- ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
- ஜெய ஜெய சங்கர… (செப்டம்பர் 1977)
- கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
- ஒரு குடும்பத்தில் நடக்கிறது… (ஜனவரி 1979)
- பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
- எங்கெங்கு காணினும்… (மே 1979)
- ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
- கரிக்கோடுகள் (ஜூலை 1979)
- மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
- மூங்கில் காட்டு நிலா (கல்பனா இதழ்)
- ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
- ஒவ்வொரு கூரைக்கும் கீழே… (ஜனவரி 1980)
- பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
- அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
- இந்த நேரத்தில் இவள்… (1980)
- காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
- காரு (ஏப்ரல் 1981)
- ஆயுத பூசை (மார்ச் 1982)
- சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
- ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
- ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
- இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
- இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
- காற்று வெளியினிலே… (ஏப்ரல் 1984)
- கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
- அந்த அக்காவினைத்தேடி… (அக்டோபர் 1985)
- இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
- ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
- சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
- உன்னைப் போல் ஒருவன்
- ஹர ஹர சங்கர (2005)
- கண்ணன் (2011)
ஜெயகாந்தன் சிறுகதைகள்
- ஆணும் பெண்ணும்
- பட்டணத்து வீதியிலே
- பேசும் புழுக்கள்
- காலம் தோற்றது
- சாந்தி பூமி
- சுமை பேதம்
- கண்ணன் பிறந்தான்
- உதயம்
- பிழைப்பு
- மீனாட்சி ராஜ்யம்
- காந்தி ராஜ்யம்
- சொக்குப்பொடி
- சட்டம் வந்த நள்ளிரவில்
- மரணவாயில்
- சாந்தி சாகரம்
- எச்சரிக்கை
- தத்துவச் சொறி
- இவர்களும் இருக்கிறார்கள்
- இலட்சியச் சிலுவை
- யாசனம்
- தேரைப்பழி
- ஆலமரம்
- பித்துக்குளி
- பேதைப்பருவம்
- தனிமனிதன்
- பொறுக்கி
- தமிழச்சி
- சலிப்பு
- வேலைகொடுத்தவன்
- பூ வாங்கலியோ பூ
- தீபம்
- தாம்பத்தியம்
- திரஸ்காரம்
- ரிக் ஷாகாரன் பாஷை
- பௌருஷம்
- சினம் எனும் தீ
- பால் பேதம்
- எது, எப்போது
- ஒருபிடி சோறு
- ராசா வந்துட்டாரு
- ஒரு பிரமுகர் முச்சந்தி
- தாலாட்டு
- டிரெடில்
- சாளரம்
- கண்ணம்மா
- நந்தவனத்தில் ஒரு ஆண்டி
- பிணக்கு
- போர்வை
- யந்திரம்
- பட்டணம் சிரிக்கிறது
- அபாயம்
- ஓவர்டைம்
- பற்றுகோல்
- தர்க்கம்
- செக்சன் நம்பர் 54
- புகைச்சல்
- இனிப்பும் கரிப்பும்
- நிந்தாஸ்துதி
- போன வருசம் பொங்கலப்போ
- சர்வர் சீனு
- ராஜா
- கேவலம் ஒரு நாய்
- உண்ணாவிரதம்
- துறவு
- நீ இன்னா சார் சொல்றே
- இரண்டு குழந்தைகள்
- குறைப்பிறவி
- தேவன் வருவாரா
- அன்புக்கு நன்றி
- சுய ரூபம்
- வெளிச்சம்
- துர்க்கை
- சிலுவை
- இதோ, ஒரு காதல் கதை
- சீட்டாட்டம்
- புதிய கதை
- வாய்ச்சொற்கள்
- இது என்ன பெரிய விஷயம்
- பொம்மை
- தொத்தோ
- உடன்கட்டை
- பத்தினிப் பரம்பரை
- நிறங்கள்
- உறங்குவது போலும்
- GLD–20
- மூக்கோணம்
- மூங்கில்
- கற்பு நிலை
- நான் இருக்கிறேன்
- என்னை நம்பாதே
- தர்க்கத்திற்கு அப்பால்
- லவ் பண்ணூங்கோ ஸார்
- சோற்றுச்சுமை
- மாலை மயக்கம்
- சுமைதாங்கி
- கருங்காலி
- அடல்ட்ஸ் ஒன்லி
- மௌனம் ஒரு பாஷை
- ஒரெ நண்பன்
- பிம்பம்
- முன்நிலவும் பின்பனியும்
- இல்லாதது எது
- பூ உதிரும்
- கிழக்கும் மேற்கும்
- தரக்குறைவு
- யுகசந்தி
- உண்மை சுடும்
- ஆளுகை
- பொய் வெல்லும்
- சாத்தானும் வேதம் ஓதட்டும்
- இருளைத் தேடி
- ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்
- எத்தனை கோணம் எத்தனை பார்வை
- ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
- விளக்கு எரிகிறது
- புதிய வார்ப்புகள்
- அந்தக் கோழைகள்
- சட்டை
- சுயதரிசனம்
- முற்றுகை
- இருளில் ஒரு துணை
- லட்சாதிபதிகள்
- அக்கினிப் பிரவேசம்
- பாவம் பக்தர்தானே!
- நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன்
- அக்ரஹாரத்துப் பூனை
- நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
- ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது
- தவறுகள் குற்றங்களல்ல
- டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும்
- கண்ணாமூச்சி
- அந்த உயிரின் மரணம்
- அந்தரங்கம் புனிதமானது
- இறந்த காலங்கள்
- விதியும் விபத்தும்
- எங்கோ, யாரோ, யாருக்காகவோ
- குரு பீடம்
- நிக்கி
- புதுச் செருப்பு கடிக்கும்
- சீசர்
- அரைகுறைகள்
- சக்கரம் நிற்பதில்லை
- இந்த இடத்திலிருந்து
- குருக்கள் ஆத்து பையன்
கட்டுரைகள்
- பாரதி பாடம்
- இமயத்துக்கு அப்பால்
ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு
- ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
- இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
- தேவன் வருவாரா (1961)
- மாலை மயக்கம் (ஜனவரி 1962)
- யுகசந்தி (அக்டோபர் 1963)
- உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
- புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
- சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
- இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
- குருபீடம் (அக்டோபர் 1971)
- சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
- புகை நடுவினிலே… (டிசம்பர் 1990)
- சுமைதாங்கி
- பொம்மை
ஜெயகாந்தன் தன் வரலாறு நூல்கள்
- ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
- ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
- ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
- ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்
ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்கள்
- வாழ்விக்க வந்த காந்தி (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம், 1973 )
- ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 – முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)
ஜெயகாந்தன் குறிப்புகள்
- இவரது நாவல்களான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகியவை படமாக்கப்பட்டன.
- இதில் “உன்னைப் போல் ஒருவன்” சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.
- 1949-ல் ஜெயகாந்தன் டிரெடில் என்னும் முதல் கதையை எழுதினார்.
- ஆனால் முதலில் பிரசுரமானது ஆணும் பெண்ணும் என்னும் சிறுகதை.
- ஜெயகாந்தனின் முதல் நாவல் 1957-ல் வெளிவந்த வாழ்க்கை அழைக்கிறது. ‘வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் எனக்கு எந்த நிறைவையும் அளிக்காத நாவல்’ என ஜெயகாந்தன் அதைக் குறிப்பிடுகிறார்.
- ஜெயகாந்தன் 13 சிறுகதைத் தொகுதிகளும், 25-க்கும் மேற்பட்ட குறுநாவல்களும், 17 நாவல்களும், 25 கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.
- Game of Cards (1969) என்பது ஆங்கில மொழியில் வெளியான சிறுகதைத் தொகுதியாகும்.
- ஜெயகாந்தனின் சிறுகதைகள் என்ற பெயரில் இவருடைய சிறுகதைகள் 15 அனைத்திந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, 1973இல் வெளியாகின.
- அதூரே மனுஷ்யா (1989) என்ற பெயரில் இந்தி மொழியில் இவருடைய மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுதி வெளியாகி உள்ளது.
ஜெயகாந்தன் சிறப்புகள்
- இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.
- இலக்கியத்துக்காக, ‘பத்மபூஷண்’ விருது பெற்ற முதல் படைப்பாளி என்ற பெருமை பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன்
- மாலன் = ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம்.
- கண்ணதாசன் = நான் தினமும் உறங்கும் பொழுது எனது தலையணைக்கு அடியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு உறங்குகிறேன். அது பைபிள் என்றோ, குர்ரான் என்றோ, கீதை என்றோ யூகிக்க வேண்டாம். ஜெயகாந்தன் எழுதிய “யாருக்காக அழுதான்” என்ற நாவல் தான் அது”
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்
- 1972 சாகித்திய அகாடமி விருது (சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக)
- 1978 இந்திய சோவியத் ரஷிய நட்புறவு விருது (இமையத்துக்கு அப்பால் நூலுக்காக)
- 1978 தமிழக அரசு விருது (சிலநேரங்களில் சில மனிதர்கள் )
- 1986 தமிழக அரசு விருது ஜய ஜய சங்கர
- 1986 ராஜராஜன் விருது (சுந்தரகாண்டம் நாவலுக்காக)
- 2002 ஞானபீடம் விருது
- 2009 ரஷ்ய இந்திய கூட்டுறவு விருது
- 2009 பத்மபூஷன் விருது
ஜெயகாந்தன் வரிகள்
- “முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே”
- “ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்”
- “மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே”
- “நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்… “
- எனக்கு நானே கடவுள்…… எனக்கு நானே பக்தன்……. என் வாழ்நாள் எல்லாம் திருநாள்…… மரணம் எனக்கு கரிநாள்….