பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து
- சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
- பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.
நூல் அமைப்பு
- திணை = பாடாண் திணை (புறத்திணை)
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 100 ( கிடைத்தவை 80)
- புலவர்கள் = 10 (அறிந்த புலவர் 8)
- அடி எல்லை = 8-57
பெயர் காரணம்
- பத்து + பத்து = பதிற்றுப்பத்து
- பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
- பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை, நன்னூல் கூறுகிறது.
வேறுபெயர்
- இரும்புக்கடலை
தொகுப்பு
- இந்நூலை தொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
பதிற்றுப்பத்து உரை
- பழைய உரை ஒன்று உள்ளது.
- பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை
பதிற்றுப்பத்து ஆசிரியர்கள்
பத்துக்கள் |
பாடிய புலவர் | அரசன் | பரிசு |
முதல் பத்து | உதியஞ் சேரலாதன் |
|
|
இரண்டாம் பத்து |
குமட்டுர் கண்ணனார் | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் | இறையிலி நிலமாக உம்பற்காடு, ஐநூறு ஊர்கள் |
மூன்றாம் பத்து | பாலைக் கௌதமனார் | பல்யானை செல்கெழு குட்டுவன் |
பத்து வேள்விகள் செய்ய உதவி, மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான் |
நான்காம் பத்து |
காப்பியாற்றுக் காப்பியனார் | களங்காய் சென்னி நார்முடிச்சேரல் | நாற்பது நூறாயிரம் பொன், சேரநாட்டில் ஒரு பகுதி |
ஐந்தாம் பத்து | பரணர் | கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் |
உம்பற்காட்டு வருவாய், அரசன் மகா குட்டுவ சேரல் |
ஆறாம் பத்து |
காக்கைப்பாடினியார் நச்சொள்ளையார் | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் | ஒன்பது துலாம் பொன், நூறாயிரம் பொற்காசுகள் |
ஏழாம் பத்து | கபிலர் | செல்வக்கடுங்கோ வாழியாதன் |
நூறாயிரம் பொன், நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதி |
எட்டாம் பத்து |
அரிசில்கிழார் | தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | ஒன்பது நூறாயிரம் பொன், அரசுக்கட்டில் |
ஒன்பதாம் பத்து | பெருங்குன்றூர் கிழார் | இளஞ்சேரல் இரும்பொறை |
32000 பொன், ஊர், மனை, ஏர், பிற அருங்கலங்கள் பன்னூறாயிரம் |
பத்தாம் பத்து |
யானைகட்சேய் மாந்தரால் சேரல் இரும்பொறை |
|
பொதுவான குறிப்புகள்
- இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே தினைப் பாடலால் ஆனது.
- இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
- ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
- வழக்கில் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
- பதிற்றுப் பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
- சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப் பத்து மட்டுமே.
- பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல் (இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
- நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
- பகைவரது பெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
- “பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்
முக்கிய அடிகள்
- ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
ஈத்தொறு மாவள்ளியன்
- மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே
- வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
This all books is very usefull To my study
அற்புதம்