மனோன்மணியம்

மனோன்மணியம்

மனோன்மணியம்

மனோன்மணியம் நூல் குறிப்பு

  • நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும்
  • வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது.
  • இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது.
  • நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு
  • இந்நாடகம் 5 அங்கங்களையும், 20 காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே “சிவகாமி சரிதம்” என்னும் துணைக் கதை ஒன்றும் உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மனோன்மணியம் சுந்தரனார் ஆசிரியர் குறிப்பு

  • ஊர் = கேரள மாநிலம் ஆலப்புழை
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடாத்தி அம்மையார்
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • கோடாக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரைத் தமது ஞானாசிரியராகப் கொண்டு ஒழுகி வந்தார்

மனோன்மணியம் சுந்தரனார் சிறப்பு பெயர்

  • ராவ்பகதூர்
  • தமிழ் செய்யுள் நாடக இலக்கியத்தின் தந்தை

மனோன்மணியம்

மனோன்மணீயம் சுந்தரனார்  படைப்புகள்

  • நூல் தொகை விளக்கம்
  • திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி
  • திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி
  • Some mile stones in tamil litt
  • Some early sovereigns of travameare

மனோன்மணீயம் சுந்தரனார் சிறப்பு

  • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது
  • தமிழ்நாடு அரசு மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி பெருமை படுத்தியுள்ளது.
  • இவரின் “நீராருங்கடலுடுத்த” என்ற தமிழ் வாழ்த்துப்பாடல் தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது
  • இவரின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு இசை அமைத்தவர் = எம்.எஸ்.விசுவநாதன்
  • இவரைத் “தமிழ் செய்யுட் நாட இலக்கியத்தின் தந்தை” எனப் போற்றுவர்

 

கா.சு.பிள்ளை கூற்று

  • ‘தமிழ் இலக்கியத்தில் கால ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்த பெருமை இவருடையதே” என்கிறார்.

மொழிப்பெயர்ப்பு நூல்கள்

  • இவர் திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Leave a Reply