முடியரசன்

முடியரசன்

முடியரசன்

வாழ்க்கைக் குறிப்பு

  • இயற் பெயர் = துரைராசு
  • ஊர் = மதுரை அடுத்துள்ள பெரியகுளம்
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி

முடியரசன் சிறப்பு பெயர்கள்

  • கவியரசு (குன்றக்குடி அடிகளார்)
  • சங்கப்புலவர் (குன்றக்குடி அடிகளார்)
  • தமிழ்நாட்டு வானம்பாடி (அறிஞர் அண்ணா)
  • திராவிட நாட்டின் வானம்பாடி (அறிஞர் அண்ணா)
  • வீறுகவியரசர்
  • பகுத்தறிவுக் கவிஞர் (தந்தை பெரியார்)
  • பாவரசர் (மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்)
  • கவிப்பேரரசர் (மு.கருணாநிதி)
  • இரண்டாம் புரட்சி கவிஞர்
  • பொன்னியின் செல்வர்
  • பாவேந்தர் வழித்தோன்றல்
  • கவி மாமன்னர்
  • வீரப்புலவர் (கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம்)
  • கவிச்சிங்கம்
  • இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர்
  • தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர்
  • தன்மானக் கவிஞர்
  • தமிழிசைப் பாவலர்
  • மரபின் மைந்தர்

முடியரசன் படைப்புகள்

  • முடியரசன் கவிதைகள் (தமிழ்நாடு அரசு பரிசு)
  • காவியப்பாவை
  • கவியரசில் முடியரசன்
  • தமிழ் இலக்கணம்
  • வீரகாவியம் (தமிழ்நாடு அரசு பரிசு)
  • பாடுங் குயில்கள்
  • பாடுங்குயில்
  • நெஞ்சு பொறுக்கவில்லையே
  • மனிதனைத் தேடுகிறேன்
  • தமிழ் முழக்கம்
  • நெஞ்சிற் பூத்தவை
  • ஞாயிறும் திங்களும்
  • வள்ளுவர் கோட்டம்
  • புதியதொரு விதி செய்வோம்
  • தாய்மொழி காப்போம்
  • மனிதரைக் கண்டு கொண்டேன்

முடியரசன்

காப்பியம்

  • ஊன்றுகோல் (பண்டிதமணி கதிரேச செட்டியார் பற்றியது)
  • பூங்கொடி (பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை “உலக மொழிக்காப்பியங்கள். மூன்றனுள் ஒன்றாகக் கருதப்பெறும் சிறப்புடையது ‘பூங்கொடி’ என்று வாழ்த்தினார்)
  • வீரகாவியம்

முதல் கவிதை

  • சாதி என்பது நமக்கு ஏனோ?

வாழ்க்கை வரலாறு நூல்

  • சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்

தன்வரலாறு நூல்

  • பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்

கடிதம்

  • அன்புள்ள பாண்டியனுக்கு
  • அன்புள்ள இளவரசனுக்கு

சிறுகதை

  • என்கோவின் காதல்
  • இளம்பெருவழுதி

கட்டுரை

  • எப்படி வளரும் தமிழ்?

ஆசிரியர்கள்

  • முத்துசாமிப்புலவர், மலிங்கசாமி, வை. சுப்ரமணி ஐயர், செல்லப்பனார், மீனாட்சி சுந்தரனார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார்
  • இருப்பினும் தமக்கு தமிழை அறிவுறுத்தியவராக முடியரசன் அவர்கள் கூறுவது திரு முத்துச்சாமிப் புலவர் அவர்களையே.

குறிப்பு

  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவர் தமிழில் பிற மொழி கலப்பதை வன்மையாக கண்டித்தார்
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
  • இவரின் கவிதைகளை சாகித்திய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுள்ளது
  • இவரின் படைப்புகள் தமிழக அரசால் 2000 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

பொன்னியின் செல்வர்

  • “பொன்னி” என்ற இதழில் இவரின் கவிதைகள் தொடர்ச்சியாக “பாரதிதாசன் பரம்பரை” என்ற பகுதியில் வெளிவந்தது
  • இதனால் இவரை “பொன்னியின் செல்வர்” என்று அழைத்தனர்

சிறப்பு

  • அறிஞர் அண்ணா இவரைத் “தமிழ்நாட்டு வானம்பாடி” எனப் போற்றினார்
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளார் இவருக்கு கவியரசு என்ற பட்டத்தை வழங்கினார்
  • இவரின் வகுப்பில் மாணவர்கள் எழுத்து நின்று வணக்கம் சொல்வதற்கு பதில் “வெல்க தமிழ்” என்று கூறிய பின்னரே வகுப்புகள் துவங்கும்.
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது
  • பாரதிதாசனாரால் ‘என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..’ என்று பாராட்டப்பெற்றவர்
  • தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர்
  • குன்றக்குடி அடிகளார் = ‘சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை’ என்று போற்றினார்
  • தந்தை பெரியார் = ‘கவிஞன் யார்? என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா.. பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்’
  • பேரறிஞர் அண்ணா = திராவிட நாட்டின் வானம்பாடிக் கவிஞர்
  • மு.கருணாநிதி = திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.
  • எம்.ஜி.ஆர் = ‘கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.’
  • கா.அன்பழகன் = பாரதியார் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.
    புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார்.
  • முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதம் = ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியசனார்’

முடியரசன் பாடல்கள்

  • இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
    இரண்டும் கொண்ட ஆறடா – வாழ்வு
  • வரம்பில்லையேல் எம்மொழியும் அழிந்து போகும்
    மணவினையில் தமிழுண்டோ, பயின்றவர் தம்முள்
    வாய்ப்பேச்சில் தமிழுண்டோ, மாண்டபின்னர்
    பிணவினையில் தமிழுண்டோ

Leave a Reply