10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்
10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

  • காவிரிப்பூம்பட்டின பெருவணிகர்கள் = மாசாத்துவான், மாநாயக்கன்
  • மாசாத்துவான் மகன் = கோவலன்.
  • மாநாயக்கன் மகள் = கண்ணகி.
  • கண்ணகியை கோவலன் மணந்தான்.
  • கோவலன், ஆடலரசி மாதவி மீது விருப்பம் கொண்டு கண்ணகியை பிரிந்தான்.
  • கோவலன் தன் செல்வதை எல்லாம் இழந்தான்.
  • இந்திரவிழாவில், மாதவி பாடிய “கானல் வரி” பாடலை தவறாக புரிந்து கொண்டு கோவலன் மாதவியை பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.
  • மீண்டும் செல்வத்தை ஈட்ட ஏதுவாக, கண்ணகியுடன் மதுரைக்கு சென்றான் கோவலன்.
  • அவர்களுக்கு வழித்துணையாக சமணத்துறவி “கவுந்தியடிகள்” சென்றார்.
  • மதுரை நகரில் “மாதரி” என்னும் இடைக்குல மூதாட்டியிடம் இருவரையும் அடைக்கலப்படுத்தினார் கவிந்தியடிகள்.
  • கோவலன் சிலம்பு விற்றுவர மதுரை நகருக்கு சென்றான்.
  • பாண்டிமா தேவியின் சிலம்பை களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியை கோவலன் மீது சுமத்தினான்.
  • அதனை ஆராயாத மன்னன், கோவலனை கொலை செய்ய உத்தரவிட்டான்.
  • இச்செய்தி மாதரி மூலம் அறிந்த கண்ணகி, பாண்டிய மன்னனிடம் முறையிட்டால்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சொற்பொருள்

  • கொற்கை = பாண்டிய நாட்டின் துறைமுகம்
  • தென்னம் பொருப்பு = தென்பகுதியில் உள்ள பொதிகைமலை
  • பலியோடு படரா = மறநெறியில் செல்லாத
  • பசுந்துணி = பசிய துண்டம்
  • தடக்கை = நீண்ட கைகள்
  • அறுவற்கு இளைய நங்கை = பிடாரி
  • கானகம் = காடு
  • உகந்த = விரும்பிய
  • தாருகன் = அரக்கன்
  • செற்றம் = கறுவு
  • தேரா = ஆராயாத
  • புள் = பறவை
  • புன்கண் = துன்பம்
  • ஆழி = தேர்ச்சக்கரம்
  • படரா = செல்லாத
  • வாய்முதல் = உதடு

இலக்கணக்குறிப்பு

  • மடக்கொடி – அன்மொழித்தொகை
  • தேரா மன்னா, ஏகாச் சிறப்பின் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • தடக்கை – உரிச்சொற்றொடர்
  • புன்கண், பெரும்பெயர், அரும்பெறல் – பண்புத்தொகை
  • உகுநீர், சூழ்கழல், செய்கொல்லன் – வினைத்தொகை
  • அவ்வூர் – சேய்மைச்சுட்டு
  • வாழ்தல் – தொழிற்பெயர்
  • என்கால் என்பெயர், நின்னகர், என்பதி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • புகுந்து – வினையெச்சம்
  • தாழ்ந்த, தளர்ந்த – பெயரெச்சம்
  • வருக, தருக, கொடுக – வியங்கோள் வினைமுற்று

பிரித்தறிதல்

  • எள்ளறு = எள் + அறு
  • புள்ளுறு = புள் + உறு
  • அரும்பெறல் = அருமை + பெறல்
  • பெரும்பெயர் = பெருமை + பெயர்
  • அவ்வூர் = அ + ஊர்
  • பெருங்குடி = பெருமை + குடி
  • புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
  • பெண்ணணங்கு = பெண் + அணங்கு
  • நற்றிறம் = நன்மை + திறம்
  • காற்சிலம்பு = கால் + சிலம்பு
  • செங்கோல் = செம்மை + கோல்
10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்
10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள் ஆசிரியர் குறிப்பு

  • இளங்கோவடிகள் சேரமரபினர்.
  • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை.
  • தமையன் = சேரன் செங்குட்டுவன்
  • இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் சென்று தங்கினார்.
  • அரசியல் வேறுபாடு கருதாதவர்.
  • சமய வேறுபாடற்ற துறவி.
  • காலம் = கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.
  • பாரதியார் இவரை, “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்றார்.

சிலப்பதிகாரம் நூல் குறிப்பு

  • சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  • கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது ஆதலின், சிலப்பதிகாரமாயிற்று.
  • இக்காப்பியம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் முப்பெரும் காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது.
  • புகார்க்காண்டம் = 10 காதை
  • மதுரைக்காண்டம் = 13 காதை
  • வஞ்சிக்காண்டம் = 7 காதை
  • இக்காப்பியம் “உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள்” என அழைக்கப்படுகிறது.
  • வழக்குரைக் காதை மதுரைக்கான்டத்தின் பத்தாவது காதை.
  • “இசை நாடகமே” சிலப்பதிகாரக் கதையின் உருவம்.
10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்
10 ஆம் வகுப்பு சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் சிறப்புப் பெயர்கள்

  • முதற் காப்பியம்
  • முத்தமிழ்க் காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்
  • ஒற்றுமைக் காப்பியம்
  • நாடகக் காப்பியம்

சிலப்பதிகாரம் நூல் சிறப்பு

  • “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” எனப் பாரதியார் புகழ்கிறார்.

ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது

  • ஐம்பெருங்காப்பியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
  • ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது = சிலப்பதிகாரம்.
  • காலத்தாலும் கதைத்தொடர்பாலும் பாவகையாலும் ஒன்றுபட்ட நூல்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை.
  • இரட்டைக் காப்பியங்கள் எனப்படும் நூல்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை.

நூலெழுந்த வரலாறு

  • சேரன் செங்குட்டுவன், சீத்தலைச்சாத்தனாரோடும் இளங்கோவடிகளோடும் மலைவளம் காணச் சென்றான்.
  • அங்கிருந்த மலைவாழ் மக்கள், “வேங்கை மரத்தின்கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தோம்” என்று கூற, உடனிருந்த பெரும்புலவர் சாத்தனார், ‘அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்” என்று கோவலன் கண்ணகி வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
  • அதனைக் கேட்ட இளங்கோவடிகள், “இக்கதையைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்” ஏறனு கூறினார்.
  • சாத்தனாரும், “அடிகள் நீரே அருளுக” என்றார்.

சிலப்பதிகாரம் நூற்கூறும் உண்மை

  • அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
  • உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
  • ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்

 

 

 

Leave a Reply