10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்
10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்
- சொற்றொடர்கள் பல வகைப்படும்.
- அவற்றில் சில = செய்தித்தொடர், வினாத்தொடர், உணர்ச்சித் தொடர், கட்டளைத் தொடர்.
செய்தித்தொடர் என்றால் என்ன
- ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது செய்தித்தொடர் எனப்படும்.
- பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்.
- திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
- இவ்விரு தொடர்களும் செய்திகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வினாத்தொடர் என்றால் என்ன
- வினாப்பொருளைத் தரும் தொடர், வினாத்தொடர் எனப்படும்.
- என்ன? ஏன்? எங்கே? எப்படி? முதலிய வினாச்சொற்கள் வினாத்தொடரில் அமையும்.
- எழில், என்ன சாப்பிட்டாய்?
- அன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?
- எங்கே செல்கிறாய்?
உணர்ச்சித் தொடர் என்றால் என்ன
- நாம் பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால், அவற்றை உணர்ச்சித் தொடர்கள் என்கிறோம்.
- மகிழ்ச்சி, வியப்பு, துன்பம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர்.
- ‘அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!’
- “ஐயோ, முள் குத்திவிட்டதே!”
- என்னே, இமயமலையின் உயரம்!
- அந்தோ, நாய் வண்டியில் அடிபட்டுவிட்டதே!
கட்டளைத் தொடர் என்றால் என்ன
- ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது, கட்டளைத்தொடர்
- பள்ளிக்கு புறப்படும் மகனிடம் திய கூறுவது, “பார்த்துப் போ. கவனமாகப் படி”.
தனிநிலைத் தொடர் என்றால் என்ன
- ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டுமுடிவது, தனிநிலைத்தொடர் எனப்படும்.
- அழகன் பாடம் எழுதுகிறான்.
- மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள்.
- இத்தொடர்களில் முதல் தொடரில் அழகன் என்பது எழுவாய்.
- இரண்டாம் தொடரில் மா, பலா, வாழை என்பன எழுவாய்கள்.
தொடர்நிலைத் தொடர் என்றால் என்ன
- ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர்.
- தொடர்நிலைத் தொடர்கள் “அதனால், ஆகையால், ஏனெனில்” முதலிய இணைப்புச்சொற்களைப் பெற்று வரும்.
- கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால், வாழ்வில் உயர்ந்தார்.
- நேற்று மழை பெய்தது; அதனால், ஏரி குளங்கள் நிரம்பின.
கலவைத் தொடர் என்றால் என்ன
- ஒரு தனிச்சொற்றொடர் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது, கலவைத்தொடர் எனப்படும்.
- நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை.
- முருகன், இரவும் பகலும் அயராது படித்ததால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றான்.
செய்வினைத் தொடர் என்றால் என்ன
- எழுவாய், செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் செய்வினைத் தொடர் எனப்படும்.
- செயப்படுபொருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும்.
- “குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.”
- குடியரசுத் தலைவர் = எழுவாய்
- உலகத் தமிழ் மாநாடு = செயப்படுபொருள்
- தொடங்கிவைத்தார் = பயனிலை
- சில தொடர்களில் மறைந்தும் வரும்.
- மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.
- “குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.”
செயப்பாட்டு வினைத்தொடர் என்றால் என்ன
- செயப்படுபொருள் வினைச்சொல்லைக்கொண்டு முடிவது செயப்பாட்டு வினைத்தொடர் எனப்படும்.
- உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.
- இத்தொடரில் சொற்கள் செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்னும் வரிசையில் அமைந்துள்ளன.
- எழுவாயோடு ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் உள்ளது.
- இவ்வகைத் தொடர்களில் பயனிலையோடு படு, பட்டது, பெறு, பெற்றது என்னும் துணைவினைகளுள் ஒன்று சேர்ந்து வரும்.
தன்வினைத்தொடர் என்றால் என்ன
- எழுவாய், தானே செய்யும் தொழிலை உணர்த்துவது தன்வினைத் தொடர் எனப்படும்.
- பாத்திமா திருக்குறள் கற்றாள்
- இத்தொடரிலுள்ள பாத்திமா என்னும் எழுவாய், ஒரு செயலைத் தானே செய்வதனால், இது தன்வினைத்தொடராகும்.
பிறவினைத்தொடர் என்றால் என்ன
- எழுவாய், ஒரு செயலைப் பிறரைக்கொண்டு செய்விப்பது பிறவினைத் தொடர் எனப்படும்.
- பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்.
- இது பிறவினைத்தொடர்.
- பாத்திமா என்னும் எழுவாய், அச்செயலைப் பிறரைக் கொண்டு செய்விப்பதனால், இது பிறவினைத்தொடராகும்.
நேர்கூற்றுத்தொடர் என்றால் என்ன
- ஒருவர் பேசுவதை, அவர் பேசியபடியே கூறுவது நேர்கூற்றுத் தொடர் ஆகும்.
- ஆசிரியர், “மாணவர்களே, நாளை ஒழுக்கமுடைமையில் குறள்கள் ஐந்தனைப் படித்து வருக”, என்றார். இவ்வாறு ஆசிரியர், மாணவர்களிடம் கூறிய இத்தொடர் நேர்கூற்றுத் தொடராகும்.
- இதில் மேற்கோள் குறிகள் இடம்பெறும்;
- தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்;
- இங்கு, இப்போது, இவை எனச் சுட்டுப்பெயர்கள் வரும்;
- .நேற்று, இன்று, நாளை எனக் காலப்பெயர்களும் வரும்.
- தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள்.
அயற்கூற்றுத்தொடர் என்றால் என்ன
- ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவதுபோல் அமைப்பது அயற்கூற்றுத்தொடர்.
- பொன்னியிடம் தேன்மொழி, தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்.
- அயற்கூற்றில் மேற்கோள் குறிகள் வாரா;
- இக்கூற்றில் தன்மை, முன்னிலைப் பெயர்கள், படர்க்கைப் பெயர்களாக மாறும்;
- சுட்டுப்பெயர்கள் அது, அவை, அங்கே என மாறும்;
- காலப்பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்;
- என்று, ஆக என்னும் இணைப்புச்சொற்களும் இடம்பெறும்.
உடன்பாட்டுத்தொடர் என்றால் என்ன
- செயல் அல்லது தொழில் நிகழ்வதை நேர்மறையாக உணர்த்துவது, உடன்பாட்டுத் தொடர்.
- கலைச்செல்வி கட்டுரை எழுதினாள்.
எதிர்மறைத்தொடர் என்றால் என்ன
- கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்.
- இத்தொடரில், கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை எனச் செயல் நிகழாமையைக் கூறுவதனால், இஃது எதிர்மறைத்தொடர்.
பொருள்மாறா எதிர்மறைத்தொடர் என்றால் என்ன
- கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்.
- கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் என்னும் தொடர் உடன்பாட்டுத்தொடர்.
- கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை என்பது இதற்கான எதிர்மறைத்தொடர்.
- மேலே உள்ள உடன்பாட்டுத்தொடரை பொருள்மாறா எதிர்மறைத்தொடராக மாற்ற வேண்டுமானால், அதனை இரண்டு எதிர்மறைகளைக்கொண்ட தொடராகக், கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் என மாற்றுதல்வேண்டும்.
- இதற்குக் கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் என்பதே பொருள் என்பதனால், இது பொருள்மாறா எதிர்மறைத்தொடர் எனப்படுகிறது.
- இரண்டு எதிர்மறைச்சொற்கள் சேர்ந்து வந்தால், அஃது உடன்பாட்டுப் பொருளைத் தரும்.
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 6th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 7th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 8th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 9th Std
- Tnpsc Samacheer Kalvi Tamil Study Material 10th Std
- Tnpsc Pothu Tamil 11th std
- Tnpsc Pothu Tamil 12th std
- 10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்
- 10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்
- 10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்
- 10 ஆம் வகுப்பு சொற்றொடர் வகைகள்