11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு
11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

11 ஆம் வகுப்பு ஐங்குறுநூறு

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • ஐங்குறுநூறு அடி எல்லை = 3 முதல் 6
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் என மொத்தம் 500 பாடல்கள் உள்ளன.
  • மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசைமுறையில் அமைக்கப்பட்டு, ஒவ்வொருதிணையும் 100 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொருதிணையிலுமுள்ள 100 பாடல்களும் பத்துப்பத்துப்பாடல்கள் கொண்ட பத்துப்பகுதிகளாகத் தனித்தனித் தலைப்புகளின் கீழ்ப் பகுக்கப்பட்டுள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஐங்குறுநூறு பாடியோர்

  • மருதத்திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • முல்லைதிணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • இதனை பழம்பாடல் பாடல் ஒன்று விளக்குகிறது.

மருதமோ ரம்போகி நெய்த லம்மூவன்

கருதுங் குறிஞ்சி கபிலன் – கருதிய

பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு

ஐங்குறுநூறு தொகுத்தவர்

  • ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

ஐங்குறுநூறு தொகுப்பித்தவர்

  • ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் = சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து பாடியவர்

  • கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்.

கபிலர் ஆசிரியர் குறிப்பு

  • இவர், “புலனழுக் கற்ற அந்தணாளன்” எனப் புகழப்பட்டவர்.
  • வள்ளல் பாரியின் அவைகளப் புலவர்.
  • வள்ளல் பாரி மீது அளவற்ற அன்பு கொண்டவர்.

கபிலர் பாடியவை

  • குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணைப்பாடல்கள் நூறு, பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து, கலித்தொகையில் குறிஞ்சிக் கலியிலுள்ள 29 பாக்கள் முதலியன கபிலர் இயற்றியனவாகும்.
  • குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர் = கபிலர்.
  • பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்து பாடியவர் = கபிலர்.

சொற்பொருள்

  • எரிமருள்வேங்கை = நெருப்பையொத்த வேங்கைமரம்
  • தோகை = மயில்
  • வதுவை = திருமணம்
  • அயர = நிகழ்த்த
  • பின்னிருங்கூந்தல் = பின்னப்பட்ட பெரிய (கரிய) கூந்தல்

இலக்கணக்குறிப்பு

  • இருந்ததோகை = பெயரெச்சம்
  • மருள் = உவமவுருபு
  • இழையணி = வினைத்தொகை
  • நாட = அண்மைவிளி
  • நுந்தை = நும்தந்தை என்பதன் மரூஉ மொழி
  • வாழியர் = வியங்கோள் வினைமுற்று
  • நன்மனை = பண்புத்தொகை
  • ஆல் = அசைநிலை

 

 

Leave a Reply