11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை
11 ஆம் வகுப்பு விடுதலை விளைத்த உரிமை
- “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர் = கண்ணதாசன்.
- பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
- பிறந்ததேதி = 24-06-1927
- பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
- இயற்பெயர் = முத்தையா
- இவருடைய கவிதைகள் “கண்ணதாசன் கவிதைகள்” என்ற பெயரில் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
- 17-10-1981 இல் இயற்கை எய்தினார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கண்ணதாசன் இதழ்கள்
- தென்றல்
- தென்றல்திரை
- சண்டமாருதம்
- முல்லை
- கண்ணதாசன்
கண்ணதாசன் சிறப்புகள்
- “பாட்டுப் பறவை” என்று அழைக்கப்படுபவர் = கண்ணதாசன்.
- தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
- ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.
- இவரின் புகழ்பெற்ற கட்டுரைத்தொடர் = அர்த்தமுள்ள இந்துமதம்
- இவரின் புகழ்பெற்ற நூல் = இயேசுகாவியம்
- மத்திய மாநில அரசுகளின் விருதுகள், சாகித்திய அகாதமி பரிசையும் வென்றுள்ளார்.
- அண்ணாமலையார் நினைவுப் பரிசினையும் பெற்றுள்ளார்.
சொற்பொருள்
- தட்டின்றி = குறையின்றி
- மூவாத = மூப்படையாத
- மீன் = விண்மீன்
- தளை = விலங்கு
- வதிபவர் = வாழ்பவர்
- மிடிமை = வறுமை
இலக்கணக்குறிப்பு
- வெண்முல்லை = பண்புத்தொகை
- மூவாத ஞாயிறு = எதிர்மறைப் பெயரெச்சம்
- விடுதலை விடுதலை = அடுக்குத் தொடர்
- வதிபவர் = வினையாலணையும் பெயர்
- குடிகளும் மொழிகளும் இனங்களும் = எண்ணும்மை.